Saturday, December 22, 2018

Yomeddine என்ற எகிப்து நாட்டு திரைப்படம் - Vijay Bhaskarvijay

Yomeddine என்ற எகிப்து நாட்டு
(மொழி அரபி) திரைப்படத்தில் பிஷே என்னும் மனிதர் வருகிறார்.
அவருக்கு வயது 50 (?) இருக்கலாம். சிறுவயதில் தொழுநோய் வந்து முகமெல்லாம் தழும்புகளுடன் இருக்கிறார்.
குப்பைக்கிடங்கில் குப்பை அள்ளி கொட்டுவது மட்டுமே அவர் வேலை.
பத்து வயதாக இருக்கும் போது
தொழுநோயால் பாதிக்கப்படும் போது
அவர் தந்தை அந்த குப்பை கிடங்கில் பையன் விட்டு “ பிஷே நீ உயிரோடு பிழைத்தால் பின்னால் வீட்டுக்கு வா” என்று சொல்லி அந்த இடத்தை விட்டு வேகமாக போய்விடுகிறார்.
அதன் பிறகு பிஷேயின் தொழுநோய் சரியாகி முகமெல்லாம் தழும்பாகி உலக அழகு என்று நம்பும் தன்மைக்கு எதிர்காக ஆகி குப்பை கிடங்கிலேயே வாழ்க்கையை கழிக்கிறார்.
அங்கே அவருக்கு நண்பர்கள் கிடைக்கிறார்கள். திருமணமும் செய்து கொள்கிறார்.
அந்த ஊரில் இருக்கும் ஒபாமா என்னும் ஆதரவற்ற சிறுவன் நட்பாகிறான்.
பிஷேயின் மனைவி இறந்து அவருக்கென்று யாருமில்லாத போது அவர் தந்தையைப் பார்க்க ஊர் பெயரை மட்டும் வைத்து தன் மட்டக்குதிரையில் பயணம் செய்கிறார்.
அவருடன் ஒபாமாவும் சேர்ந்து கொள்ள இருவரும் பிஷேயின் ஊருக்கு செல்கிறார்கள்.
எப்படியே பிஷேவின் அண்ணனைப் பார்த்து அப்பாவைவும் கண்டுவிடுகிறார் பிஷே...
அப்பாவுக்கு பக்கவாதம் வந்து கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்.
பிஷே அப்பாவிடம்
”ஏன் என்னை அப்படி குப்பை கிடங்களில் விட்டு விட்டு வந்தீர்கள்” என்று கேட்கிறார்.
Image may contain: 2 people, people sitting, child and outdoor
அதற்கு அப்பா சொல்லும் பதில்தான் சிலிர்க்க வைத்தது.
“பிஷே... உன்னை அந்த நோயுடன்... அந்த முகத்துடன் எங்களோடு வாழ வைத்திருந்தால் நீ எங்கள் வாழ்க்கையைப் போல வாழ நினைத்து, அப்படி வாழ முடியாமல் ஒவ்வொரு விநாடியும் நரகத்தை அனுபவித்திருப்பாய்... ஆனால் இப்போது உனக்கான உலகத்தில் உனக்கு நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள், உனக்கு மனைவி கிடைத்தார், உனக்கு ஒபாமா கிடைத்தான், உனக்கான தொழிலும், உனக்கான கம்பீரமும், உனக்கான வாழ்க்கையும் கிடைத்திருக்கிறது பார்” என்கிறார் அந்த தந்தை.
அதை தந்தை சொல்லும் போது பிஷேவுக்கு அவர் வாழ்க்கையில் கிடைத்ததை எல்லாம் எடிட்டில் காட்டுகிறார்கள். பார்க்கும் போது
புல்லரித்து விட்டது.
தொழுநோய் வந்தவர்களை எல்லாம் வீட்டை விட்டு துரத்த வேண்டும் என்பதை இதன் அர்த்தமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
ஆனால் அந்த அப்பாவின் மனதில் இருக்கும் அவர் சொல்லும் கருத்தையும் ஒதுக்கித்தள்ளி விட முடியாது.
இது பற்றி மார்க்ஸியவாதியான தோழர்
Selvaraj Ksraj பேசிக் கொண்டிருந்தேன்.
அக்காட்சியும் வசனமும் என் சிந்தனையை தூண்டிக் கொண்டே இருப்பதாக சொன்னேன்.
அவர் சொன்னார்
“பிரச்சனையை வெளிய இருந்து பாக்குறதுக்கும் உள்ளேயே வாழ்றதுக்கும் வித்தியாசம் இருக்கு விஜய். பிரச்சனையாவே இருக்கிறவன் வாழ்க்கையை யதார்த்தமா பார்ப்பான்.
அத இந்த உலகத்துல தடுக்கவே முடியாது.
இப்போ மேனகா காந்தி ஒரு சமயம் நாய்களுக்கு எல்லாம் கருத்தடை செய்ற திட்டம் கொண்டு வந்தாங்க.
அப்ப என்னோட வேலை பார்த்த ஒருத்தர், அவர் தினமும் வீட்டுக்கு நைட் 12 மணிக்கு மேலதான் போகனும்.. .
அவர் அந்த திட்டத்த திட்றாரு
“ நைட்டு ஒருநாள் வந்து இப்படி எல்லாம் சட்டம் கொண்டு வர்றவங்க தெருல நடக்கனும். நடந்தாத்தான் நாய்க்கடின்னா எப்படி இருக்கும், நாய் சுத்தி நின்னு மேல நின்னு நம்மள பிறாண்டுனா எப்படி இருக்கும், எப்படி பயமா இருக்கும்னு தெரியும். கார்ல விர்விருன்னு போயிட்டு, பாதுகாப்பா தெருவ கடந்துட்டு, நாய் மேல இரக்கப்பட்டா கடி வாங்கி சாவுறது யாரு” அப்படி சொன்னாரு...
இதுதான் பிரச்சனைல உள்ளவன் பிரச்சனைய அனுகுறதுக்கும்,
பிரச்சனைல இல்லாதவன் அணுகுறதுக்கும் உள்ள வித்தியாசம்.
இந்த யதார்த்தப் புரிஞ்சிக்காம எந்த பிரச்சனையும் நாம அணுகவே முடியாது. கூடாது” என்று முடித்தார்.
ஆம் இந்த பாயிண்டில் யோசிக்க நிறைய இருக்கிறதுதான்...

0 comments:

Post a Comment