Friday, December 21, 2018

Franca Viola ஒரு பாலியல் வழக்கு - விஜய் பாஸ்கர்விஜய்

80 கள், 90 கள் தமிழ் சினிமாக்களில்
பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட பெண்ணின் அப்பாவோ அம்மாவோ பாலியல் வல்லுறவு செய்த ஆணிடம்
“என் பொண்ண தயவு செய்து கல்யாணம் செய்துக்க. அப்பதான் அவ தல நிமிந்து வாழ முடியும். எங்க குடும்பமும் தல நிமிந்து நிக்கும்” என்று கெஞ்சுவதை பார்த்திருக்கிறோம்.

The Magdalene Sisters திரைப்படத்தில் அயர்லாந்து நாட்டில் 1960 களில் பாலியல் வல்லுறவு கொடுமையை அனுபவித்த பெண்களை பெற்றோர்கள் ”கடும் வேலை செய்யும் முகாமுக்கு” அனுப்புவதை பார்க்கலாம்.
நீங்கள் கெட்டுவிட்டீர்கள். கடுமையான வேலை செய்வதின் மூலமாக மட்டுமே உங்களை புனித படுத்திக் கொள்ள முடியும் என்று கொடுமையை அனுபவித்த பெண்களையே மேலும் கொடுமைப்படுத்தினார்கள்.
மொத்த ஐரோப்பாவுமே இந்த விக்டோரியன் ஒழுக்கமுறையில் பெண்களை கொடுமைதான் படுத்தி இருக்கிறார்கள்.
Franca Viola என்னும் இத்தாலி நாட்டு பெண்ணுக்கு 1963 வருடம் அவள் மாமா பையனோடு திருமணம் நிச்சயம் ஆகிறது.
அப்போது அவள் வயது 15 தான்.
பிறகு அவன் நல்லவனில்லை என்று தெரிந்ததும் அவள் அப்பா நிச்சயதார்த்தை செல்லாது என்று அறிவிக்கிறார்.
அதிலிருந்து இரண்டு வருடங்கள் கழித்து Melodia என்னும் பெயரைக் கொண்ட அவன் Franca Viola வை கடத்துகிறான்.
கடத்தி அவன் அக்கா வீட்டில் எட்டு நாட்கள் சிறை வைத்து தொடர்ச்சியாக பாலியல் வல்லுறவு கொடுமையை செய்கிறான்.
Franca Viola வை மீட்ட பிறகு “நானே இவளை திருமணம் செய்து கொள்கிறேன்” என்கிறான்.
அதுவரையில் இத்தாலியில் ஒருவன் வல்லுறவு செய்து விட்டால் அப்பெண் அவனையே கேள்வி கேட்காமல் திருமணம் செய்து கொள்வாள்.
அதுதான் அவள் பெருமையை மீட்கும் செயலாக இருந்தது. கோர்ட்டும் அதை அனுமதித்தது.
அதுதான் அங்கே உள்ள சமூக வழக்கமாக இருந்தது. ஆனால் Franca Viola அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை.
“அவன் மேல் எனக்கு காதல் இல்லை. பிறகு எப்படி திருமணம் செய்ய முடியும். எட்டு நாட்கள் தொடர்ச்சியாக வல்லுறவுக்கு ஆளான கொடுமைக்கு என்ன பதில் அவன் சொல்லுவான்” என்று கோர்ட்டில் அவனை திருமணம் செய்ய மறுக்கிறாள்.
வழக்கிட்டு கொடும் பாலியல் வல்லுறவு செய்தமைக்காக அவனுக்கு பத்து வருடங்கள் சிறைத்தண்டனை வாங்கிக் கொடுக்கிறாள்.
அப்போதை ஐரோப்பிய அமெரிக்க சூழலில் இது பெரும் புரட்சியாக பார்க்கப்பட்டது.
Image may contain: 2 people, close-up

இவ்வளவு கொடுமையை Franca Viola அனுபவித்த பிறகும் ஊடகங்கள் அவளை “இவள் ஒல்லியாக இருக்கிறாள், அழகாக இருக்கிறாள், கவர்ச்சியாக இருக்கிறாள்” என்று பிரச்சனையின் திவீரத்தை குறைக்கும் விதமாகத்தான் எழுதியதாம்.
தன் மாமா பையன் சிறைக்கு போனதும் Franca Viola திருமணமே செய்து கொள்ளப் போவதில்லை என்று அறிவிக்கிறாள்.
பிறகு மூன்று வருடங்கள் போன பிறகு Giuseppe Ruisi என்ற தன் நண்பனை அன்புடன் திருமணம் செய்து கொண்டு மூன்று குழந்தைகளும் பெற்று மகிழ்ச்சியாக வாழ்க்கையை தொடர்ந்திருக்கிறார்.
தன்னை ஒரு Object ஆக சமூகம் கருதுவதை எதிர்த்து போராடும் போது Franca Viola பல துன்பங்களை அடைந்திருக்கலாம்.
ஆனால் நினைத்துப் பாருங்கள்
எட்டு நாட்கள் பூட்டி வைத்து ஒரு குடும்பமத்தின் ஆதரவுடன் ஆண்குறியை எடுத்து வலுக்கட்டாயம நுழைக்கும் போது அவள் அடைந்திருக்கும் அவமானம் ஆத்திரம் இயலாமையின் தவிப்பு எல்லாம் எப்படி இருந்திருக்கும்.
உடல் என்பதை புனிதமாக கருதி அதை சுத்தமாகத்தான்(?) கணவனிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற பிற்போக்கு எண்ணத்தில் இருந்து Franca Viola மீண்டதுதான் இங்கே மிகப் பெரிய விஷயம்.
வழக்கத்தை உடைப்பது வலிதான்...
ஆனால் Franca Viola அதை சாதித்திருக்கிறார்...

0 comments:

Post a Comment