Friday, December 14, 2018

தோசை சுடும் போது - விஜய் பாஸ்கர்விஜய்

தோசை சுடும் போது
தோசைக்கல்லு சூடாகும் போது அதுல நீரத் தெளிச்சா கல்லுல ஒட்டி மெல்ல ஆவியா போகும்.
இன்னும் தோசைக்கல்லு சூடாகி சரியா 100 டிகிரி செல்சியஸ் வரும் போது தண்ணி தெளிச்சா அந்த நிர்துளிகள் உடனே ஆவியா போயிரும்.
ஆனால் 100 டிகிரி செல்சியஸ் தாண்டி நல்லா சூடாகும் போது நீர் துளிகள் கல்லுல விழுந்தா அது ஆவியா உடனே போகாது.
அந்த நீர்த்துளிகள் ஒருமாதிரி துள்ளி துள்ளி ஒடும்.
நாம இத பார்த்தும் பார்க்காதது மாதிரி தோசை சுட போயிருவோம்.
ஆனால் 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜெர்மன் டாக்டரான Leidenfrost ஏன் அப்படி துள்ளி துள்ளி ஒடுதுன்னு கேள்வி கேட்கிறாரு. யோசிக்கிறாரு.
யோசிச்சி 1756 ஆவது வருடம் அதோட காரணம் கண்டுபிடிச்சி அத Leidenfrost Effect அப்படின்னு சொல்றாரு.
Leidenfrost Effect அப்படின்னா...
எப்ப ஒரு சமதளம் அதிகம் சூடாகி 100 டிகிரி செல்சியஸ் மேல போகும் போது
அது மேல ஒரு நீர்துளியை விடும் போது நீர் துளியோட கீழ் பக்கம் இருக்கிற கொஞ்சம் இடம் உடனே ஆவியாகி அந்த நீர்துளிக்கு ஒரு Air Cushion மாதிரி செயல்படுது.
அந்த Air Cushion மேல உட்காந்துகிட்டுதான் நீர்த்துளி இங்கும் அங்கும் ஒடுது.
இதக் கேட்க எளிதா இருந்தாலும் முக்கியமான கண்டுபிடிப்பாகும்.
Leidenfrost Effect நீர்ல மட்டுமில்ல பல திரவங்கள்ல நடக்கும்.
உதாரணமா Liquid Nitrogen துளிகளை நம்மோட தரையில விட்டாலே அது Leidenfrost Effect காட்டும்.
ஏன்னா திரவ நைட்ரஜனப் பொறுத்தவரை நம்ம சாதரண வெப்பநிலையே கொதி வெப்ப நிலைதான். அது ரொம்ப ரொம்ப குளிர்லதான் திரவமா இருக்கும்.
அதில்லாம Orbeez ball நம்ம எல்லோரும் பார்த்திருப்போம்.
Image may contain: text that says "Drop of liquid held up by layer of vapor 0.2 mm 0.1 mm Hot surface"

குட்டியா கடுகு மாதிரி இருக்கும் தண்ணில ஊறப் போட்டா பெரிசாகும்.
அதோட அளவு மாதிரி நூறு மடங்குவரை பெரிதாகும் பாலிமர்கள்தான் Orbeez ball.
கலர் கலராய் இருக்கும்.

Related image
அதை வாங்கி ஊறப்போட்டு அதை சூடான பாத்திரத்தில் ( 100 டிகிரிக்கும் மேலே) போட்டால் அந்த Orbeez ball என்ற பந்துகள் துள்ளிக்கொண்டே இருப்பதை பார்க்கலாம்.
அதற்கு காரணமும் இந்த Leidenfrost Effect தான்.
இரவு 12 மணிக்கு இப்பதிவை இதுக்கு மேல நீட்ட கடுப்பா இருக்கு.
Leidenfrost Effect புரிஞ்சதா இப்ப... அதான் நோக்கம்..
அடுத்த தடவ தோசை சுடும் போது உங்கள் வீட்டு வாண்டுகளை அழைத்து Leidenfrost Effect Demo காட்டுங்கள்.
அவ்ளோதான்

0 comments:

Post a Comment