Saturday, December 15, 2018

Prime number என்றால் என்ன ? Vijay Bhaskarvijay

Prime number என்றால் என்ன ?
ஒரு நம்பர் ஒன்று (1) மற்றும் அதே நம்பரால் மட்டுமே மீதம் வராமல் வகுபட்டால் அது பிரைம் நம்பர் என்ற பகா எண்கள் ஆகும்.
6 என்ற எண் 1,2,3,6 ஆகிய எண்ணால் வகுபடும். அது பிரைம் நம்பர் கிடையாது.
7 என்ற எண் 1 மற்றும் அதே எண்ணான 7 னால் மட்டுமே மீதமில்லாமல் வகுபடும்.
அப்படியானால் 7 பிரைம் நம்பர்.
Prime Number தெரியாதவங்க இருக்க முடியாது என்றாலும் ஒருதடவ சொல்லிக்கிறேன்.
இப்போ இந்த Prime Number களோட வர்க்கம் (Square) எடுத்துக் கொள்வோம்.
7 x 7 = 49
11 x 11 = 121
103 x 103 = 10609
இப்படி பகா எண்கள் என்ற பிரைம் நம்பர்களோட வர்க்கத்துல இருந்து “1” கழிச்சிட்டா மீதம் வர்ற விடை எண் ‘24’ என்கிற எண்ணால் மீதம் வராம வகுபடும்.Image result for Prime number
7 x 7 = 49
49-1 = 48
48/24 = 2
103 x 103 = 10609
10609-1 = 10608
10608/24 = 442
நான்கு இலக்க Prime number எடுத்துக்கலாம்
1777 x 1777 = 3157729
3157729 - 1 = 3157728
3157728 / 24 = 131572
2, 3 எண்களைத் தவிர,
எவ்வளவு பெரிய பகா எண்கள எடுத்தாலும்,
அதுகளோட வர்க்கத்துல இருந்து ஒண்ணு கழிச்சிட்டு
24 நம்பரால டிவைட் பண்ணினா
மீதம் எதுவும் கிடைக்காது.
Primenumber² - 1 = ஒரு நம்பர் கிடைக்கும்...
அந்த நம்பரோட Factor ஆ 24 கட்டாயம் இருக்கும்...
Prime Numbers களுக்கும் ‘24’ க்கும் இப்படி ஒரு உறவு இருக்கிறது ஆச்சரியமாத்தான் இருக்குது இல்ல.
சின்னப் பசங்களுக்கு, இரண்டாம் வகுப்பு மூன்றாம் வகுப்பு படிக்கிற பசங்களுக்கு கூட இந்த கணித அழகு பற்றி சொல்லலாம்

1 comments:

Karthik said...

சுலபமாக புரிந்தது நன்றி sir

Post a Comment