Saturday, December 22, 2018

டிசம்பர் 22 கணித மேதை ராமானுஜன் பிறந்தநாள் - Vijay Bhaskarvijay

டிசம்பர் 22
கணித மேதை ராமானுஜன் பிறந்தநாள். ❤️❤️
பள்ளி நாட்களில் இத எல்லோரும் அனுபவிச்சிருப்போம்.
திடீருன்னு மத்யானம் கிளாஸ் கிடையாதுன்னு சொல்வாங்க. எல்லாரையும் பெரிய ஹால்ல அல்லது மைதானத்துல உக்கார வைப்பாங்க.
எதாவது பொம்மலாட்டமோ, சின்ன படமோ போடுவாங்க.
அப்படி ஒருதட எங்க ஸ்கூலுக்கு ஒருத்தர் வந்து பேப்பர் கட்டிங் செய்து காட்டுனாரு.
சின்ன வயசுல எனக்குள்ள பெரிய மலர்ச்சியக் கொடுத்தது அவரு நடத்தின அந்த நிகழ்ச்சி. ஒரு பேப்பர எடுத்து நீண்ட்ட்ட நீள் சதுரமா கிழிச்சி, அத சுருட்டுனாரு. கத்திரிகோலால வரிசையா பாதிவரை வெட்டினாரு. சுருளப் பிடிச்சி இழுத்தாரு. அப்படியே அழகான நீளமான பூவா ஆகிடிச்சி. அது மாதிரியே பேப்பர்கள்ல பலவிதமான அழகுப் பொருட்கள் செய்து அசத்திட்டாரு.
கீழே உள்ள படத்தைப் பாருங்கள்.
அதிலுள்ள ஒரு அழகைப் பற்றி பேசலாம்.
இதுக்கு பெரிய கணக்கு தெரிஞ்சிருக்க வேண்டியதில்லை. எளிய கணக்கு தெரிஞ்சாலே இந்த அழக ரசிக்கலாம்.
Square (வர்க்கம்) எண்கள் என்றால் என்ன?
ஒரு நம்பரை அதே நம்பரால் பெருக்கினால் அதுதான் Square (வர்க்கம்) எண்.
5 x 5 = 25 ; இது ஒரு Square எண்.
21 x 21 = 441 ; இது ஒரு Square எண்.
இந்த வரிசையில கோலப்புள்ளி (5 புள்ளி 5 வரிசை) வைத்தால் அது சதரமாக இருக்கும். அதனால அதுக்கு சதுர எண்கள் என்ற பெயர்.
சதுர(Square) எண் கொடுத்தாச்சு. அதோட மூல எண்ண எப்படி கண்டுபிடிக்கிறது.
1225 ஒரு Square Number அதோட Square root எப்படி கண்டுபிடிக்கிறது. அதாவது எந்த நம்பர அதாலேயே பெருக்கினா 1225 வருதுன்னு கண்டுபிடிக்கிறது.
சிம்பிள் 1225 நம்பர 5 x 5 x 7 x 7 அப்படின்னு பிரிக்கலாமா. இங்க பாருங்க ரெண்டு அஞ்சு, ரெண்டு ஏழு வந்திருக்கா. அந்த ரெண்டுல ஒண்ணு மட்டும் எடுத்துகிடனும்.
அதாவது 5 x 7 மட்டும் எடுத்துக்கனும். 5 x 7 என்னது ? 5 x 7 = 35 . அப்ப 1225 நம்பரோட Square root வந்து 35 ஆகும்.
இந்த 35 X 35 அப்படிங்கறத 35² எழுதலாம்.
Square root 1225 அப்படிங்கிறத √1225 எழுதலாம்.
ஒரு டிக் போட்டு, அந்த டிக்கோட மண்டையில இருந்து ஒரு கோடு இழுத்து அதுக்குள்ள ஒரு நம்பர எழுதினா.
அந்த நம்பரோட Square root கண்டுபிடின்னு அர்த்தம்.
இப்ப √10609 அப்படி கொடுத்தா அதோட விடை 103 ஆகும்.
103²=10609 ஆகும்.
இப்படி Square Numbers களுக்கும், Square root எண்களுக்கும் ஒரு சிறிய அறிமுகத்தைக் கொடுத்துகிட்டு, இதோ இந்தப் படத்துக்கு மூவ் ஆகுறேன்.
படத்தப் பாருங்க.
முதல்ல 3 நம்பர்தான் இருக்கு.
3 வந்து எதோட Square root ?
3 x 3 = 9
அப்ப 3 வந்து 9 தோட வர்க்கமூலம் என்ற Square root.
3 = √9 அப்படின்னு எழுதலாம்.
√9 = √1+8 எழுதலாமா? எழுதலாம்.
√9 = √1+2 x 4 எழுதலாமா ? எழுதலாம்.
ரூட் சிம்பல் மண்டைக்கோடு இதுல முழுக்க வரல, படத்துல உள்ள மாதிரி முழுக்க வர்றதா
நினைச்சிக்கனும்.
√9 = √1+2 x 4 சரியா.... சரி.
இப்ப இதுல 4 வருது பாருங்க. அந்த நால
4 = √16 எழுதலாமா.. .எழுதலாம்.
√16 = √1+15
√1+15 = √3 x 5
இப்ப 5 = √25
√25 = √1 + 24 = √1+ 4 x 6
6 = √36 = √1+35 = √1+ 5 x 7
இப்படி போகும்.
இன்னொருதடவ முதல்ல உள்ளத மட்டும் கவனிங்க.
3 ஒரே நம்பர் சரியா...
அத √9 எழுதுறோம்.
அந்த √9 த √1+8 ன்னு பிரிக்கிறோம்.
உள்ள ஒரு 8 இருக்கு பாருங்க.
அத 2 x 4 ன்னு போடுறோம்.
அந்த 4 இருக்கு பாருங்க.
அத √16 ன்னு எழுதுறோம்.
இந்த முதல் படிக்கட்ட மட்டும் திரும்ப திரும்ப ஒரு பேப்பர எடுத்து போட்டுப்பாருங்க.
இந்த கான்சப்ட நல்லா அனுபவிச்சி புரிஞ்சி வெச்சிக்கோங்க.

Image result for srinivasa ramanujan
இப்ப இன்னும் உள்ளப் போங்க.
இதுல இன்னொரு அழக கவனிங்க. 4 = √16 அப்படின்னு எழுதுற ஸ்டெப்ல ஒரு Square root உள்ள இன்னொரு Square root வருது பாருங்க.
அடுத்து இதே மாதிரி இன்னொரு சுற்று வரும் ஒரு Square root உள்ள ஒரு ஒரு Square root . அதுக்குள்ள இன்னொரு ஒரு Square root வருது பாருங்க.
இப்படி உள்ள உள்ள போய்கிட்டே இருக்கும்.
இதுக்கு முடிவே கிடையாது.
நம்ம எல்லாருக்கும் 3 அப்படிங்கிற எண் நல்லாத் தெரியும். அது ஒரு தெளிவான நிச்சயமான எண் அப்படின்னு.
ஆனா மாணிக்கத்துக்கு பாட்ஷான்னு இன்னொரு பெயர் இருக்கிறது மாதிரி,
இந்த 3 எண்ணுக்கு இப்படி ஒரு ”எல்லையில்லாத Square root உள்ள ஒரு ஒரு Square root” முகம் இருக்குன்னு தெரியாதுதான.
அது தெரியும் போது எவ்வளவு பரவசமா இருக்குது பாருங்க.
சும்மா இத ஒரு பேப்பர்ல எழுதி வெச்சி போட்டுப் பாருங்க.
You feel good.
பெரிய கணக்கு மேதையால்லாம் நீங்க இருக்க வேண்டாம்.
கணிதத்தோட அழக ரசிக்க அடிப்படை ஏழாங்கிளாஸ் கணக்கு தெரிந்திருந்தால் போதுமானது.
எனக்கு இந்த 3 நம்பர இப்படி பிரிக்கிறதப் பாத்தா பள்ளி நாட்கள் பேப்பர் கட்டிங்க நினைவுக்கு வரும்.
ஒரு தெளிவான வரையறுக்கப்பட்ட சதுரமான அல்லது நீள் சதுரமான பேப்பரை ஒரு கத்திரிகோல் கொண்டு எப்பேர்ப்பட்ட சிக்கலான இதழ்களைக் கொண்ட பூவாக மாற்றி அழகு செய்கிறார்களோ அது மாதிரிதான் இந்த 3 என்ற தெளிவான எண்ணை வித்தியாசமா யோசிச்சி ஒரு ”வர்க்கமூல மலர்” Square root Flower ஆக மாற்றிவிடுகிறார்.
யார் இந்த 3 வர்க்கமூல மலரைக் கண்டுபிடித்தது தெரியுமா?
தமிழன் கணித மேதை ராமானுஜன்தான்.
உங்கள் வீட்டு பிள்ளைகள் 6,7 வகுப்பில் Square root படிப்பார்கள். அவர்களுக்கே இதைச் சொல்லிக் கொடுக்கலாம்.
இது கணித சிலபஸில் இல்லாவிட்டால் கூட பத்து நிமிடம் எடுத்து இதைச் சொல்லிக் கொடுக்கலாம்.
நிச்சயமாக அவர்களுடைய கற்பனைத்திறன் இதை புரிந்து முடிக்கும் போது பன்மடங்கு உயர்ந்திருக்கும்.
ஒரு சிறிய சீனிக்கட்டியை இழை இழையான சிக்கலான அழகான பஞ்சு மிட்டாயை ஆக்கும் வித்தை பற்றி புரிந்து கொள்ள எந்த மனித மனம்தான் விரும்பாது.
கணிதம் அழகு.
கணிதத்தை சரியாக அனுபவித்து படிக்கும் மனது வாய்த்துவிட்டால் வாழ்க்கையில் உங்களுக்கு மன அழுத்தம் என்பதே கிடையாது.
என்னை நம்புங்கள்.
எந்த கணிதம் வேண்டுமானாலும் படித்துப் பாருங்கள்.
ஆறாம் வகுப்பு கணித புத்தகத்தை அரைமணி நேரம் படித்துப் பாருங்கள்.
உங்கள் மன அழுத்தம் விடுபட்டு போயிருக்கும்.
No automatic alt text available.

0 comments:

Post a Comment