Tuesday, December 4, 2018

போபால் விஷய வாயு விபத்து

நன்றி :திரு.விஜயபாஸ்கர் விஜய் 

1984 ஆம் ஆண்டு டிசம்பர் 2 - 3 நாளில் நடந்த
போபால் விஷய வாயு விபத்தில் என்ன நடந்தது.
பைப்களை கழுவி சுத்தப்படுத்த நீரைத் திறந்து விட,
அந்த நீர் ஒரு Process pipe வழியே மெத்திஐஸோசைனேட் டேங்கை அடைய,
மெத்தில்ஐஸோசைனேட் நீரோடு சேர்ந்தால் வெடிப்பு வினையாகி
விஷவாயு கசிந்து சிம்னி வழியே வெளிவந்து
பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்றது.
இப்படி நினைத்துக் கொள்ளுங்கள்.
நீர் ஒரு கெமிக்கலோடு கலக்க கூடாது. கலந்தால் அங்கே பெரிய வெடிப்பு நடக்கும். அந்த வெடிப்பை முன்னரே எச்சரிக்கும் கருவிகளும், அதை தடுக்கும் முறைகளும் அரசின், யூனியன் கார்பைடின் அலெட்சியத்தால் சரிவர பராமரிக்கப்படவில்லை. வைக்கப்படவில்லை.
இந்த விபத்துக்கு நான்கு காரணங்கள்.
1.தண்ணிய பைப்களில் கழுவதற்காக திறந்து விடும் போது சில முக்கியமான Process pipe களின் பாதையை அடைக்க வேண்டும்.
Space spade அல்லது Spectacle blind என்பார்கள்.
அதை வைத்து மெத்தில்ஐஸோசைனேட் டேங்க பைப்புகளை அடைத்து விட்டே இதை செய்ய வேண்டும். அங்கே வால்வுகள் இருந்தாலும் இதை செய்தே ஆக வேண்டும்.
ஆனால் அதை யாரும் செய்யவில்லை.
தண்ணிய திறந்து விட்டு முறவாசல் செய்வது போல ஒரு தொழிலாளி செய்கிறார். அதுதான் அங்கே வழக்கம்.
அதை கண்காணிக்க ஒரு டிப்ளமா, பி.ஈ முடித்த பொறியாளர் அங்கே இல்லை.
நிர்வாகம் அவ்வளவு கொடிய விஷ கெமிக்கலை அவ்வளவு அலெட்சியமாக கையாள்கிறது.
அருகில் இருக்கும் லட்சக்கணக்கான மக்கள் பற்றி கவலை இல்லை.
2.மெத்தில்ஐஸோசைனேட் டேங்குகள் பல மீட்டர் கீழே புதைக்கப்பட்டிருக்கும்.
போபாலில் அப்படி மூன்று டாங்குகள் இருந்தன.
மூன்றிலும் நீர் விழுந்ததும் உடனே வெடிக்காது. அந்த வினைக்கு கொஞ்சம் நேரம் பிடிக்கும்.
பைப்களில் Pressure அதிகமாகும். அப்போது கண்டுபிடித்திருந்தால் கூட விபத்தை தடுத்திருக்கலாம்.
ஆனால் அங்கே இருந்த Pressure Gauge Level Gauge Temperature Gauge என்று அனைத்து Instrumentation கருவிகளும் பராமரிப்பு இல்லாமல் சரியாக வேலை செய்யாது.
இங்கே அழுத்தம் கூடினால் கூட அதை தெரிவிக்க வேண்டிய கண்ட்ரோல் ரூமில் எந்த பிரச்சனையும் இல்லை என்றே காட்டி இருக்கிறது.
நிர்வாகம் அவ்வளவு கொடிய விஷ கெமிக்கலை அவ்வளவு அலெட்சியமாக கையாள்கிறது.
அருகில் இருக்கும் லட்சக்கணக்கான மக்கள் பற்றி கவலை இல்லை.
3.மெத்தில்ஐஸோசைனேட் நீருடன் வினை புரிந்தால் வெடிக்கும் என்பதற்காக அந்த மூன்று டேங்குகளை சுற்றி ஒரு குளிர்பதன யூனிட், அதான் ஏசி யூனிட் வைத்திருந்தார்கள்.
ஆனால் முதலாளித்துவ லாப வெறியில் அதை Cost cutting என்று சிக்கன பார்வையில்
,
அந்த ஏசி யூனிட்டை பல காலம் முன்பே கம்பெனி எடுத்து விடுகிறது. எத்தனை கோடி சம்பாதித்துக் கொண்டிருப்பார்கள்.
அந்த மூன்று ஆபத்தான ஏசி டேங்குகளை சுற்றி இருக்கும் ஏசி யூனிட்தான் இவர்களுக்கு செலவாய் தெரிந்திருக்கிறது.
நிர்வாகம் அவ்வளவு கொடிய விஷ கெமிக்கலை அவ்வளவு அலெட்சியமாக கையாள்கிறது.
அருகில் இருக்கும் லட்சக்கணக்கான மக்கள் பற்றி கவலை இல்லை.
4.Scrubber unit என்பார்கள்.
ஆலை கழிவு புகையை ஒரு கூண்டுக்குள் அனுப்பி அதை மாபெரும் நீர் ஷவரை வைத்து குளிக்க வைப்பார்கள்.
அந்த நீர்க்குளியலில் புகையில் உள்ள சல்ஃபர்டை ஆக்சைடு போன்ற கொடும்புகைகள் நீரில் கரைந்து அதை அப்புறப்படுத்துவார்கள் ( என்ன ஆத்துல கொண்டு விடுவானுங்க)
மீதம் இருக்கும் புகையை வடிகட்டி சிம்னி வழியே வெளியே விடுவார்கள்.
போபால் விஷ வாயு விசயத்தில் இந்த ஸ்கிரப்பர் யூனிட் மிக மொக்கையாக இருந்தது. அது புகையின் கொள்ளளவுக்கு ஏற்றால் போல் இல்லை.
சும்மா ஒரு ஸ்கிரபர் யூனிட் என்று தர்மத்துக்கு வைத்திருக்கிறான்கள்.
நிர்வாகம் அவ்வளவு கொடிய விஷ கெமிக்கலை அவ்வளவு அலெட்சியமாக கையாள்கிறது.
அருகில் இருக்கும் லட்சக்கணக்கான மக்கள் பற்றி கவலை இல்லை.
இந்த நான்கு காரணங்களுமே மிக அற்பமான காரணங்கள். எளிதில் இதை சரி செய்திருக்கலாம்.
அரசாங்கம் விழிப்பாய் தங்கள் Safety Engineeer களை வைத்து கண்கானித்திருந்தால் இந்த பிரச்சனையே இருந்திருக்காது.
ஆனால் யூனியன் கார்பைடு நிறுவனத்தை ஒரு சதவிகிதம் கூட அரசு கண்காணிக்கவில்லை...
No automatic alt text available.
இயல்பாகவே அரசாங்கத்துக்கு முதலாளித்துவ சக்திகள் மேல் இருக்கும் அடிமை உணர்வும், பொது மக்கள் உயிர் மேல் இருக்கும் அலெட்சியமும் பல ஆயிரம் மக்கள் உயிரை குடித்தது.
போபால் விஷவாயுவை வருடா வருடம் அனைத்து கெமிக்கல் மற்றும் எண்ணெய் கம்பெனிகளும் நினைவு கூறும் நாளை அரசு அறிவிக்க வேண்டும்.
அன்றைய நாளில் அவர்கள் இந்த சம்பவத்தை தொழிலாளர்கள், அதிகாரிகள் என்று அனைவரிடமும் விவாதிக்க வேண்டும்.
அரசாங்கம் தன் Safety officer களை நேர்மையாக செயல்பட வைப்பது முக்கியம்.
அதை விட முக்கியம் தொழில் வளர்கிறது என்று இது போன்ற ஆலைகளை ஊருக்குள் வைத்துக் கொள்ளாமல் இருப்பது...
லட்சக்கணக்கான அப்பாவி மக்கள் இதில் கொடூரமாய் பாதிக்கபட்டிருக்கும் போது இச்சம்பவத்தை டெக்னிக்கலாக விவாதிப்பதே மனதை உறுத்ததான் செய்கிறது.
இருப்பினும் படித்தவர்கள் இவ்விபத்தின் டெக்னிக்கல் காரணத்தை கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
அரசு மற்றும் முதலாளிகளின் அலெட்சியத்தை அப்போதுதான் துல்லியமாக தெளிவாக புரிந்து கொள்ள முடியும்...

0 comments:

Post a Comment