Friday, December 28, 2018

டேனியலும் ஆடும் சிறார் கதை - விஜய் பாஸ்கர்விஜய்

உயரமான மலையடிவாரத்துல
இருக்கிற ஒரு சின்ன டவுன். சரியா.
கற்பனை பண்ணிக்க.
அங்க டேனியல்னு ஒரு பையன்.
டேனியல் என்ன படிக்கிறான். பத்தாங் கிளாஸ் படிக்கிறான்.
டேனியல் இப்ப மலைல ஏறுறான்.
ஸ்கூல் யூனிஃபார்ம்ல ஸ்கூல் நேரத்துல ஏன் டேனியல் மலைல வளைஞ்சு வளைஞ்சு போறான்.
ஏன் போறான்னா அவனுக்கு ஸ்கூலுக்கு போக இஷ்டமில்ல.
ஏன் இஷ்டமில்ல. ஏன்னா அவன் வகுப்ப கவனிக்கலன்னு வாத்தியார் அவன திட்டிட்டாரு.
அதனால நாலு நாளா அவன் ஸ்கூலுக்கு போகாம மலைல ஏறி ஊர் சுத்திட்டு வீட்டுக்கு போயிருவான்.
அன்னைக்கு டேனியலுக்கு ரொம்ப சோகமா இருக்கு. இனிமே உயிர் வாழக்கூடாது செத்து போகனும் அப்படின்னு சொல்லிட்டு மலை உச்சில ஏறுறான்.
குதிக்க போகும் போது
“ எனக்கு ஒரு உதவி பண்ண முடியுமா”
அப்படின்னு ஒரு குரல் கேக்குது.
அது ஒரு செம்மறி ஆடு.. Wool Sheep. கம்பெளி கொடுக்குமே அந்த ஆடு.
“என்ன உதவி” டேனியல்.
“உன்னப் பொறுத்தவரை இது கெட்ட நாளா இருக்கலாம். ஆனா என்ன பொறுத்தவரை இது நல்ல நாள். நான் கொண்டாட்டத்துல இருக்கேன். நீ என்னோட வந்து அதுல கலந்துக்க முடியுமா. கலந்துகிட்டு நீ செத்துப் போ நா தடுக்க மாட்டேன்”
டேனியலும் செம்மறி ஆடு கூட போறான்.
அங்க குகைல நிறைய பழங்கள், உணவுகள் எல்லாம் இருக்குது.
“உன் பேரு என்ன”
“டேனியல்”
“சாப்பிடு டேனியல்”
“என்ன கொண்டாட்டம் உனக்கு. காரணம் என்ன”
“என்ன என் முதலாளி ஏத்துகிட்டார் டேனியல்”
“நீ என்ன தப்பு பண்ணின”
“நான் ஒரு கம்பளி கொடுக்கும் ஆடும். என் உடல்ல வளர்ற கம்பளிய என் முதலாளி எடுத்து விலைக்கு வித்திருவாரு. அதுல அவருக்கு வருமானம் கிடைக்கும்”
“ம்ம்ம்”
“ஒருநாள் நினைச்சேன். நான் ஏன் இவருக்கு என் உடம்புல உள்ள கம்பளியை கொடுக்கனும். அப்படி சொல்லிட்டு அவருக்கு தெரியாம மலைல ஒளிஞ்சிகிட்டேன்”
“உன் முதலாளி தேடலியா”
“தேடுனாறு. நான் ஒளிஞ்சிகிட்டேன்”
“உன்ன மத்த விலங்குகள் தொரத்தலியா”
“நாலு நாள் சமாளிச்சிட்டேன். அப்புறம் ஒரு காட்டுநாய் ஒண்ணு தொரத்திச்சு. ஆனா தப்பிச்சிட்டேன்”
“அப்பவாவது நீ முதலாளிகிட்ட போக வேண்டியதான”
“முதலாளி திட்டுவாருன்னு போகல”
“ம்ம்ம்”
“கொஞ்ச நாள் போச்சு. மறுபடி போகலாம்னு நினைச்சேன் போகல. முதலாளியோட நண்பர்கள் எல்லாம் கிண்டல் பண்ணுவாங்களோனு நினைச்சி போகல”
“ம்ம்ம்”
“அடுத்து எனக்கே என் மேல வெக்கமா இருந்துச்சி. இப்படி முதலாளிக்கு துரோகம் பண்ணுறியோன்னு நினைச்சி போகல”
“ம்ம்ம்”
“இப்படி ஒவ்வொன்னா கற்பனை பண்ணிகிட்டு மலையே தங்கிட்டேன்”
“ஒஹ்”
“அப்ப எனக்கு உடம்புல கம்பளி அதிக வளந்து போச்சு. என் எடைய விட அதிகமா கம்பளி வளந்து போச்சு.என்னால அத தூக்கிட்டு நடக்கவே முடியல.”
“என்ன பண்ணின”
“இப்ப போனா உனக்கு வசதி இல்லாம இருக்கும் போது மட்டும் வர்றியான்னு முதலாளி கேட்டிருவாரோன்னு நினைச்சி போகல. அப்படியே நடக்க முடியாம குகைல அடைஞ்சி சோர்ந்து கிடந்தேன்”
“ம்ம்ம்”
“ஒருநாள் தற்செயலா மலை உச்சிக்கு வந்த என் முதலாளி என்ன அடையாளம் கண்டுகிட்டு “செல்லம் நீ இங்க இருக்கியான்னு என்ன வந்து அப்படியே அணைச்சிகிட்டார்”
“ம்ம்ம்”
“முதலாளி என்ன வாஞ்சையா அணைச்சிக்கும் போது எனக்கு கண்ணீரா வருது. நா ஏங்கி ஏங்கி அழுறேன். முதலாளியும் அழுறார். என்கிட்ட உனக்கு என்ன வெக்கம். நா உன்ன என்ன நினைக்கப் போறேன் அப்படின்னாரு”
“ம்ம்ம்”
“அப்புறம் வண்டில வெச்சி என்ன கீழ கூட்டிட்டு போய் உடம்புல உள்ள கம்பளி எல்லாம் எடுத்து என்ன இலகுவாக்கி விட்டார் டேனியல்”
“கேக்கவே நல்லா இருக்கு”
“நீ உன் கதையை சொல்லு டேனியல்”

Image result for boy and sheep
டேனியல் அவன் கதையை சொன்னான்.
”நீயும் என்ன மாதிரியே நினைச்சிட்டு ஸ்கூலுக்கு போகாம இருக்காத டேனியல். இன்னைக்கு போகாதத்துக்கு வெக்கபட்டு நாளைக்கு போகாம இருந்து, நாளைக்கு போகாம இருந்ததுக்கு வெக்கப்பட்டு நாளன்னிக்கு போகாம இருந்துட்டு இப்படி நீ இருந்தா அப்புறம் வாரக்கணக்குல ஸ்கூலுக்கு போகாம போயிருவ. அப்புறம் இனிமே படிப்பே வேணாம்னு சொல்லிருவ”
“அப்ப என்ன ஒண்ணும் சொல்ல மாட்டாங்களா. நா தப்பு பண்ணலியா” இது டேனியல்
“நீ ஒரு தப்பும் பண்ணல டேனியல். அப்படியே தப்புன்னாலும் இது மன்னிக்க முடியாத தப்பு இல்ல. அதுக்கு பயந்து ஸ்கூலுக்கு போகாம இருக்காத டேனியல். போ உன் வாத்தியார் உன்ன ஒண்ணுமே சொல்ல மாட்டார்”
செம்மறி ஆடு இப்படி சொன்னதும் டேனியல் மனசு லேசாகி தைரியமா அவன் ஸ்கூலுக்கு போறான்.
அன்னைக்கே மதியம் இரண்டு மணிக்கே போறான்.
வாத்தியார் முன்னாடி போய் நிற்கிறான்.
வாத்தியார் டேனியலப் பாக்குறார்.
ஏன் வரல எதுக்கு வரலன்னு எதுவும் கேக்கல
அன்பா பாக்குறார்.
ஒண்ணுமே சொல்லல.
“போ டேனியல் உன் இடத்துல உக்காந்து க்ளாஸ கவனி” அப்படிங்கிறார்.
டேனியல் சந்தோசமா போய் க்ளாஸ் கவனிக்கிறான்.
இவ்வளவு சின்ன விசயத்த ரொம்ப கற்பனை பன்ணிகிட்டு ஸ்கூலுக்கு போகாம இருந்தோமேன்னு நினைச்சி வெக்கப்படுறான்.
அவனுக்கு அறிவு கொடுத்த மலை உச்சி செம்மறி ஆட்டுக்கு நன்றி சொல்றான்.
தன் கம்பளி எல்லாத்தையும் எடுத்து தன்னோட பாரத்தை எல்லாம் ஒரு விநாடில நீக்குன தன்னோட க்ளாஸ் சாருக்கும் மானசீகமா நன்றி சொல்றான்.
பக்கத்துல நிக்கிற வேப்பரம் மரம் காத்துல அசைது,
வேப்ப மரக்காத்து,
செம்மறி ஆடு அட்வைஸ்,
வாத்தியாரோட கனிவு
எல்லாம் சேர்ந்து டேனியல் சுகந்தமா அத அனுபவிக்கிறான்...
அதோட கதை முடியுது சரியா...
#டேனியலும் ஆடும் சிறார் கதை...

0 comments:

Post a Comment