Monday, December 3, 2018

ஒரு எதிர்க் கேள்வியின் தத்துவம்

நன்றி. திரு. சூரிய சேவியர்

ஒரு எதிர்க் கேள்வியின் தத்துவம்
அம்மா
“அவருக்கு உன்னை பார்க்க வேண்டும் போல் இருக்கிறது.”
என்று உறவினர் ஒருவர் சொன்னபோது
“எனக்கு அவரை பார்க்க வேண்டும் போல் இருக்க வேண்டாமா?”
என்று மென்மையாக பதில் அளித்து தனது திடச் சித்தரத்தை வெளிப்படுத்திக் கொண்டார். காரணம் ஏதுமின்றி அல்லது சொல்லாமலேயே பிரிந்துவிட்டு 36 வருடங்கள் கழித்து முதுமை யின் இயலாமையுடன் தன்னிடம் திரும்பி வந்த கணவன், புகழ் பெற்ற தலைவர் கொண்டபல்லி சீத்தாரமய்யாவை பார்க்க மறுத்து அவரது மனைவி கோட்டேஸ்வரம்மா கேட்ட எதிர்க் கேள்விதான் இது.
என்னைப் போன்றவர்கள் 80-ம் ஆண்டு களுக்கு பிறகு இயக்கத்திற்கு ஈர்க்கப்பட்ட காலத்தில், கொண்டபல்லி சீத்தாரமய்யாவின் சாகசங்கள் எங்களை கவர்ந்தது. அவரது பாதைகளை அப்போதே ஏற்க முடியவில்லை என்றாலும், அரசின் அடக்குமுறைக்கு எதிராக அவர் களம் கண்ட செய்திகள் பலரை கவர்ந்தன. அவரின் துணைவியார் பற்றி, அதாவது கோட்டேஸ்வரம்மா பற்றி, அவரது மரணத்தினை தோழ.ர்எஸ்.வி.இராஜதுரை எழுதிய கட்டுரை மூலமாவே அறிய முடிந்தது. அதிலும் நூறு ஆண்டுகள் வாழ்ந்தார் என்ற செய்தி, அவரது ‘ஆளற்றபாலம்’ என்ற சுயசரிதை நூலை தேடிப் படிக்கத் தூண்டியத
இந்த எதிர்வினை, பெண் சமத்துவம், பெண் விடுதலை புரட்சிகர இயக்கத்திற்குள்ளும் பேணப்பட வேண்டும், இல்லையென்றால் போராட வேண்டும் என்ற கருத்தை பறைசாற் றுவதுடன் மட்டுமல்ல, கோட்டேஸ் ரம்மாவின் வாழ்க்கையில் இது முக்கிய பகுதியாகவும் அமைந்துள்ளது. 1918 ஆகஸ்ட் 5-ல் பிறந்து 2018 செப்டம்பர் 19 அன்று மரண மடைந்தார். 100 ஆண்டுகள் ஒரு மாதம் மற்றும் 14 நாட்கள் வாழ்ந்துள்ளார். அவரது வாழ்க்கையை படிக்கும்போது ஒருவரின் வாழ்க்கையில் இவ்வளவு துக்கம் இருக்க முடியுமா என மனம் கரைந்து போகிறது.
குழந்தைப் பருவத்தில் திருமணம், சிறுவயதிலேயே பால்ய கணவன் மரணம், இதனால் விதவைக் கோலம் பூண்டார். இவை அனைத்தும் அவரால் அறிந்திருக்க முடிய வில்லை. பிற்காலத்தில்தான் தனக்கு திருமணம் நடந்தது, தான் விதவை என்பதை அறிந்தார். தேசிய இயக்கம், புரட்சிகர இயக்கங்களால் ஈர்க்கப்பட்டு 1939-ல் சுந்தரய்யா, ராஜேஸ் வரராவ், கந்துகூரி சந்திரராவ் ஆகியோர் முயற்சியால் கொண்டபல்லி சீத்தாரமய் யாவுடன் மறுமணம். அன்றைய காலத்தின் புரட்சிகரமான திருமணம்.
இடப் பெயர்வு, தலைமறைவு வாழ்க்கை, நாடக, கலைநிகழ்ச்சி பிரச்சாரம், ஆயுத பயிற்சி, இரு குழந்தைகளுக்கு தாய், காரணமின்றி பிரிந்த கணவன், குழந்தைகளுடன் பிரிவு, மகன் காவல்துறையால் சுடப்பட்டு மரணம், மகளின் கணவர் திடீர் மரணம், மருத்துவரான மகளின் மனநிலை பாதிப்பு, மரணம், பெற்ற தாய் அஞ்சம்மாவின் மரணம், வாழ்க்கை தேவைக் காக 35 வயதில் படிப்பு, வேலை என துயரங் களினூடே எப்படி 100 ஆண்டுகள் வாழ்ந்தார் என்ற வினா எழுகிறது.
இவரின் துக்ககம் எந்த அளவிற்கு தனி மனுஷியுனுடையதோ அந்த அளவிற்கு சமுதாயம் மற்றும் அரசியல் இயக்கம் சார்ந்த தாகவும் இருக்கும். தனியாக இருந்தாலும் கோட்டேஸ்வரம்மா தனது சொந்த சம்பாத்தி யத்தில் வாழ்ந்து, கடைசி வரை அவர் அரசியல் போராளியாக வாழ்ந்தார்.
அரசியல் ஆண்களின் துறை, பெண்களுக்கு அங்கே மனைவி, சகோதரி, தாய் என்ற முறை யில்தான் இடம் உண்டு என்ற நிலையை எதிர் கொண்டார் கோட்டேஸ்வரம்மா. பெண் சமத்துவம், விடுதலைக்காக கடைசிவரை தனது போராட்டத்தை சமரசமற்ற முறையில் தொடர்ந்தார்.
Image may contain: drawing and text

தேசிய இயக்கம், சமூக சீர்திருத்த இயக்கம், புரட்சிகர இயக்கம் என்று தளத்தில் அவரது அனுபவங்கள் அமைந்துள்ளன. பெண்கள் பொது சேவைக்கு வருவதில் இருந்த தடைகளை உடைப்பதில். பெண்கள் மேடையேறி பாடக்கூடாது, நாடகத்தில் நடிக்க கூடாது என்ற கீழ்த்தரமான கருத்தோட்டத்தை உடைத்தெறி வதில், பெண்கல்வியை வளர்ப்பதில் என பல தளங்களில் பணியாற்றி உள்ளார். 35 வயதில் படித்து, பணியில் சேர்ந்து, வாழ்வின் கணிசமான பகுதியை மகளிர் விடுதியில் கழித்தார்.
தன்னை கைவிட்ட கணவனை கடைசி காலத்தில் இயக்கத்தோழர்கள் ஒருமுறை பார்க்க வலியுறுத்திய போது “மனுசாஸ்திரம், இந்து மனப்பான்மை என்னுள் ஜீரணித்து இருந்து, எத்தனை வேதனைகளை அனுபவித்து இருந்தாலும், பதிவிரதையைபோல் கணவனை காப்பாற்றுவேன் என்று தப்பித்தவறி நான் சொன்னால்கூட, வேண்டாம் என்று தடுக்க வேண்டிய கம்யூனிஸ்டுகளாகிய நீங்கள், அடக்கிவைக்கப்பட்ட பெண்ணினத்திற்கு அநியாயம் செய்யலாமா” என்று கேட்கிறார் கோட்டேஸ்வரம்மா.
ஆந்திர மாநிலத்தில் அக்காலத்தில் பொதுவுடைமை இயக்கம் எவ்வாறு வீறு கொண்டு எழுந்தது என்பதை இயல்பாக வெளிப்படுத்துகிறார். இன்றைக்கு ஆந்திராவின் கலை இலக்கிய அமைப்புகள் உயிரோட்டமமான செயல்பாடுகளுக்கு வேர் எங்கே இருக்கிறது என்பதை அறிய முடிகிறது.
ஆந்திராவில் கம்யூனிஸ்ட் கட்சி போராட் டங்கள் ஆயுத தாங்கிய போராட்டங்கள், கட்சி பள்ளிகள் நடத்தியது மட்டுமல்ல, ஆந்திர கட்சியின் அக்கால செல்வாக்கிற்கு ஆக்கப்பூர் வமான பணிகள் அடிப்படையானது என்பதை இந்நூலில் அறிய முடிகிறது.
பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், நூலகங்கள் கட்டுவதையும், உற்பத்தியை பெருக்குது எனது வயல்கள் மேம்பாடு, நீராதரம் பெருக்கும் பணிகளில் கட்சி ஈடுபட்டுள்ளது. வறட்சியை எதிர்கொள்ள விவசாயிகளை அணிதிரட்டி ஆக்கப்பூர்வ பணிகளை மேற்கொண்டது மிக மிக அடிப்படையாக அமைந்துள்ளது. இதன் அடிநாதமாக விவசாய இயக்கம், பெண்கள் இயக்கம், கலைக்குழு அமைப்புகள் கட்சியின் வழிகாட்டலில் இயங்கியுள்ளன. இந்த ஆக்கப்பூர்வ பணிகளை கோட்டேஸ்வரம்மா வலிந்து சொல்லவில்லை. தனது வாழ்வின் சம்பவங்களின் ஒரு பகுதியாக சொல்லி செல்கிறார்.
இயக்க பிளவுகள் மற்றும் தனக்கான துயரங்கள் வந்தபோதும், தனது குமுறல்களை வெளிப்படுத்துகிறார் தவிர அவதூறுகளை அள்ளி வீசவில்லை.நூலின் பின் இணைப்பாக தோழர் சுந்தரய்யா, ராஜேஸ்வரராவ், கந்துகூரி மற்றும பெண் ஆளுமைகள் பற்றி அவர் எழுதியுள்ளவை அவரின் பிற்கால மதிப்பீடுகள் ஆகும். உரிய முறையில் நினைவுகளை பகிர்ந்துள்ளார்.
ஒரு பெண்ணின் 100 ஆண்டுகளின் போராட்டக் களம், அளவு கடந்த வாழ்க்கை அனுபவமும், எல்லையில்லா துணிச்சலுடன் வாழந்துள்ளார். இந்த நூலை வாசிப்பதின் மூலம் வரலாற்றை பெண் விடுதலைக்கான சமரசமற்ற போராட் டத்தை இயக்கத்திற்குள் இருக்கும் போக்கு களை, இயக்க வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வ பணிகளும் அடிப்படையானது என்பதை அறிந்து கொள்ளலாம்.
பாக்கியம்

0 comments:

Post a Comment