Thursday, December 6, 2018

இயற்கை - சூர்யா சேவியர்

இயற்கை உருவாக்கிய படைப்புகளில் மனிதன் மகத்தான படைப்பு.
அந்த இயற்கையை அறியும் பயணத்தையே மனிதன் மேற்கொண்டிருக்க வேண்டும்.
மாறாக இயற்கையைக் கண்டு பிரமித்துப் போன மனிதன் மிகவும் அச்சப்படவும் செய்தான்.
இந்த அச்ச உணர்வை முதலாகப் போட்டு தனியுடமை எழுந்தது.

பெருங்கூட்டமாய் இருந்த மக்களை வெறும் அடக்குமுறைகள் மூலமே அடிமைப்படுத்திட இயலாது.
தங்களை அடிமைப்படுத்தி கொள்வதற்கான ஏற்பையும் இசைவையும் அம்மக்களிடம் இருந்தே தனியுடமை பெற்றுக் கொண்டது.
அதற்கு பிரதானமான கருவியாக பிரமாண்டமாக உருவானதே மதங்கள். அந்த மதங்கள் மூலம் மக்களின் ஏற்பையும் தாண்டி அடக்குமுறைக்கு மனித சமூகம் ஆளான போது அதை எதிர்த்து உருவானதே சீர்திருத்தச் சிந்தனைகள்.
ஒவ்வொரு மதமும் அந்த காலத்தின் வர்க்க சமுதாயத்தையே பிரதிபலிக்கும்.
சீர்திருத்தம் என்பது ஆண்டை வர்க்கத்திடம் இருந்து அடிமை வர்க்கத்தை விடுவித்து முதலாளி தொழிலாளி வர்க்கம் உருவான காலத்தின் விளைவே.
எல்லா மதங்களிலும் சீர்திருத்தச் சிந்தனைகள் உருவானதற்கு காரணம் மனிதனின் சிந்தனை மட்டம் உயர்ந்ததன் படிநிலையே.
ஆண்டை அடிமை வர்க்கத்தை பிரதிபலித்த கத்தோலிக்க கிறிஸ்தவத்தை முதலாளி தொழிலாளி வர்க்கத்தின் பிரதிபலிப்பாக மாற்றியது சீர்திருத்த கிறிஸ்தவம்.
கிறிஸ்தவம் இஸ்லாம் வைதீகம் சைவம் வைணவம் என எல்லா மதங்களிலும் நிலவுடமை சிந்தனைகளை தகர்க்க சீர்திருத்தவாதிகள் எழுந்தார்கள்.
அவர்களுக்கும் ஒரு வர்க்க சார்பும் உண்டு.
உமர் இப்னு அப்துல் அலீஸ்
இமாம் ஷாபியீ
அல்லாமா இப்னு ஹஸம்
ஷைகுல் இஸ்லாம் இமாம் இப்னு தைமிய்யா
அகமது தகிய்யுதீன் போன்ற இஸ்லாமிய சீர்திருத்தவாதிகள் பட்டியல் நீளமானது.
இராஜாராம் மோகன்ராய்
சுவாமி விவேகானந்தர்
வள்ளலார்
இராமானுஜர்
அய்யா வைகுண்டர்
நாராயணகுரு
அய்யன்காளி போன்ற இந்து சீர்திருத்தவாதிகள் பட்டியலும் பெரியது.
கிறிஸ்தவத்தில் சீர்திருத்தக் கிறிஸ்தவம் என்ற ஒரு தனிப்பிரிவே உருவானது.
எல்லா மதங்களிலும் பிற்போக்கு சிந்தனைகளுக்கு எதிராக சீர்திருத்தவாதிகள் உருவானார்கள்.
போராடினார்கள்
Related image
ஆனால் இந்திய மண்ணில் உருவான சீர்திருத்த சிநத்னைகளை செல்லரித்துப் போகச் செய்யும் பிற்போக்குத்தனமே பார்ப்பனியம்.
இந்த பிற்போக்கு சிந்தனைகளை வளர்க்கவே பார்ப்பனியம் பகீரத முயற்சிகளை ஆர் எஸ் எஸ் மூலம் அரங்கேற்றுகிறது.
இது இந்து சமயத்தை சீர்திருத்தப் போராடிய பல்வேறு அறிஞ்ரகளுக்குச் செய்யும் அப்பட்டமான துரோகமே.
பார்ப்பனியம் எத்தகைய கீழ்தரமான காரியங்களிலும் ஈடுபடும்.
அதன் ஒற்றை நோக்கம் ஒன்றுதான்.
எதைச் செய்தும் அதிகாரத்தில் நிலைத்திருப்பது என்பதே.
அதை தகர்க்க வேண்டுமெனில் சீர்திருத்தவாதிகளின் சிந்தனைகளை நினைவுபடுத்துவது நமது கடமை.

0 comments:

Post a Comment