Saturday, December 15, 2018

The Two Gentlemen of Verona - Vijay Bhaskarvijay

’The Two Gentlemen of Verona’ என்ற நாடகத்தில்
( ஷேக்ஸ்பியர் எழுதியது )
வாய் தவறிய காரணத்தால் பெரிய பிரச்சனை வருவதைப் பார்க்கலாம்.
புரோட்டிஸும் வேலண்டியனும் நண்பர்கள்.
புரோடியஸ் ஜூலியா என்ற அழகிய பெண்ணை லவ்வடிக்கிறான். வேலண்டியனுக்கு லவ் அடிக்கும் வாழ்க்கையில் நம்பிக்கை இல்லை.
வாழ்க்கையில் முன்னேறப் போகிறேன் என்று மிலன் நகரத்து பிரபுவிடம் உதவியாளராய் சேர்கிறான். அங்கே பிரபுவின் மகளான சில்வியா வேலண்டியனை லவ்வடிக்கிறாள். வேலண்டியனும் பதிலுக்கு லவ்வடிக்கிறான்.
இங்கே புரோட்டியஸின் அப்பா அவனை ஒரே திட்டு.
“உன்ன போல பிள்ளதான வேலண்டியனும். அவன் ஒழுங்காயிட்டு பொழைச்சு முன்னேறுலான்லால. நீ மட்டும் இங்கன கிடந்து ஜூலியாவுக்கு லவ் லட்டர் எழுதிகிட்டே இருக்க” என்று ஏசுகிறார்.
புரோடியஸுக்கு ஜூலியாவை விட்டு வேலைக்கு போக மனமில்லாமல் அதே ஊரில் இருக்கிறான்.
ஒருநாள் இப்படி ஜூலியா எழுதிய கடிதத்தை புரோட்டியஸ் படித்துக் கொண்டிருக்கும் போது அப்பா வருகிறார்.
“கையில என்ன லட்டர்”
Image result for The Two Gentlemen of Verona

“அது வந்துப்பா மிலன்ல வேலண்டியன் இருக்கான்ல. அவன் எனக்கு வேலை தேடி வெச்சிருக்கானாம். லட்டர் போட்டிருக்கான்” என்று ஒரே ஒரு பொய்யை சொல்லிவிடுகிறான்.
“பரவாயில்லையே இந்த வேலண்டைன் பய நல்ல பயலால இருக்கானே” என்று அப்பா நன்றி கடிதம் போடுகிறார்.
வேலண்டைன் இதைப் படித்து குழம்புகிறான். அப்புறம் இது தன் நண்பன் புரோடியஸின் குறும்பாகத்தான் இருக்க வேண்டும் என்று யூகித்து,சும்மா இல்லாமல் உண்மையிலேயே நண்பனுக்கு வேலை தேடி வைத்து கடிதம் எழுதுகிறான்.
இதைப் பார்த்து புரோடியஸுக்கு அதிர்ச்சி.
பொத்தாம் பொதுவாக சும்மா சொன்ன பொய்யால் இப்போது உண்மையிலேயே மிலன் நகருக்கு போக வேண்டியதிருக்கிறதே என்று எரிச்சலில் காதலி ஜூலியாவை விட்டு பிரிய மனதில்லாமல் பிரிகிறான்.
வேலண்டைன் என்ன வேலை பார்க்கிறானோ அதே வேலைதான் புரோட்டியஸுக்கும்.
கொஞ்சநாள் நன்றாக இருந்த புரோடியஸ் வேலண்டைனுக்கும் மிலன் நகரத்து பிரபுவின் மகள் சில்வியாவுக்கும் உள்ள காதலைக் கண்டு பொறாமைப்படுகிறான்.
நல்லதொரு சந்தர்ப்பத்தில் மிலன் நகர் பிரபுவிடம் வேலண்டைனை மாட்டிவிடுகிறான்.(வேலண்டைன் மாட்டிக்கொள்ளும் காட்சி சுவாரஸ்யமானது)
”கொமரு இருந்தா கைப்பிடிச்சி இழுப்பியோ” என்று வேலண்டைனை அடித்து துரத்திவிடுகிறார் பிரபு.
இப்போது புரோட்டியஸ் கைக்கு அதிகாரம் வந்து விடுகிறது.
அவன் சைடுவாக்கில் நண்பனின் காதலியான சில்வியாவுக்கு ரூட் விடுகிறான். சில்வியா “போயேம்பல பம்ளிமாஸு” என்று திட்டிவிடுகிறாள்.
எப்படி சில்வியாவை பணிய வைப்பது என்று தெரியவில்லை.
புரோடியஸிடம் அவனிடம் புதிதாய் சேர்ந்த உதவியாளனிடம் ஐடியா கேட்கிறான். அதன்படி காதல் கடிதம் எழுதி கொடுத்து விடுகிறான்.
உதவியாளனும் சில்வியாவுக்கு புரோட்டியஸிப்ன் கடிதத்தை கொடுத்துக் கொண்டே இருக்கிறான். சில்வியா மயங்குவதாய் இல்லை.
கடைசியில் வேலண்டைனுக்கும் புரோட்டியஸுக்கும் சண்டை வந்து புரோடியஸ் திருந்தும் போது சொல்கிறான்
“ச்சே என் சைத்தான் மனதால் என் காதலி ஜுலியை மறந்துவிட்டேனே. இப்போ அவள எங்கப் போய் தேடுவேன்” என்று வருத்தமடைகிறான்.
அப்போது புரோடியஸின் உதவியாளன் தன் மாறுவேஷத்தை கலைத்து
“கொய்யால நான்தாண்டா உன் லவ்வர் ஜூலியா. ஊர் விட்டு ஊர் வந்தா லவ் பண்ணுன பொண்ணு கிட்டயே இன்னொரு பொண்ணுக்கு லட்டர் கொடுத்து விடுவ என்ன” என்று திட்டுகிறாள். சுபமாக முடிகிறது.
இதில் பாருங்கள் புரோட்டியஸ் தன் காதலி எழுதிய கடிதத்தை, நண்பன் எழுதிய கடிதம் என்று அவன்அப்பாவிடம் சொன்ன சின்னப் பொய் எங்கல்லாம் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று
இன்னொரு ஜாலியான ஒப்பீடு
சுவப்னவாஸவதத்தம்
என்ற சமஸ்கிருத நாடகத்தில் உதயணின் மனைவி வாசுவதத்தை தன் கணவன் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும்(நாட்டின் நன்மைக்காக) என்று ,
தான் தீப்பிடித்து எரிந்தது மாதிரி செட்டப் செய்து தப்பிக்கிறாள்.
உதயணன் தன் முதல் மனைவி வாசுவதத்தை இறந்துவிட்டதாக கவலையடைகிறான். இரண்டாவது திருமணம் முடிக்கப் போகும் பத்மாவதியிடம் வாசுவதத்தை தோழியாக இருக்கிறாள்.
அதன் மூலம் உதயணன் எப்படியெல்லாம் தன்னை நினைத்து உருகுகிறான் என்பதை அறிந்து கொள்கிறாள்.
முதல் மனைவி வாசுவதத்தையைஅவ்வளவு லவ் பண்ணுறான் உதயணன் .அதை அவன் பக்கத்தில் இருந்தே கேட்கும் அருமையை வாசுவதத்தை பெறுகிறாள்.
ஆனால் இந்த ’The Two Gentlemen of Verona’ வில் வரும் புரோட்டியஸோ லவ் பண்ணிகிட்டு இருக்கிற பொண்ணு கிட்டயே இன்னொரு பொண்ண லவ் பண்ணறதப் பத்தி டிஸ்கஸ் செய்திருக்கான் ராஸ்கல்ஸ்...
வாசுவதத்தைக்கு எப்படி இருந்திருக்கும்.
ஜூலியாவுக்கு எப்படி இருந்திருக்கும்..

0 comments:

Post a Comment