Saturday, December 29, 2018

ஒஹ்ஹ் - விஜய் பாஸ்கர்விஜய்

சினிமாவில்
பயந்து ஒஹ்ஹ் என்னும் காட்சிகளில் ஒரு அலறல் சத்தம் கேட்கும்
கவனித்திருக்கிறீர்களா?

கொஞ்சம் க்ரீச் குரல் கலந்த சத்தமான ஆஹ்ஹ் என்ற குரல். இந்த லின்க்கை திறந்து நடுவில் அழுத்தினால் கேட்கலாம்
இதை Wilhelm scream effect என்கிறார்கள்.
http://www.wilhelmscream.net/
இது இல்லாமல் ஒரு திரைப்படத்தை எடுக்கவே முடியாது. அதிர்ச்சி கலந்த அலறலை இந்த குரலில் மூலமாக மட்டுமே சொல்லமுடியும்.
இன்று வரை இந்த Sound effect கண்டுபிடித்தது யாரென்று தெளிவாக சொல்லமுடியவில்லை.
முதன் முதலில் இதை 1951 ஆம் ஆண்டு Distant Drums என்ற திரைப்படத்தில் உபயோகப்படுத்தி இருக்கிறார்கள்.
ஆற்றை நடந்து கடக்கும் போர்வீரர்களில் ஒருவனை நீரின் அடியில் இருந்து இழுக்கும் முதலை. https://www.youtube.com/watch?v=dc5F2C0CYlA
அப்படி இழுக்கும் போது அவன் அதிர்ச்சியில் அலறும் போது இந்த Wilhelm scream effect ஐ முதலாக உபயோகித்திருக்கிறார்கள்.
ஆனால் 1951 யில் மக்கள் மத்தியிலோ, ஊடகங்களிலோ இது பிரபலம் ஆகவில்லை.
யாரும் இதை கண்டுகொள்ளவில்லை.
அடுத்து 1953 யில் The Charge at feather river
https://www.youtube.com/watch?v=q3-Y8eTaMZc
திரைபடத்தில் இந்த Wilhelm scream effect அடுத்தடுத்து உபயோகித்திருக்கிறார்கள்.
அப்போதுதான் மக்கள் “அட இது என்னது வித்தியாசமா ஆனா பொருத்தமா” என்று அடையாளம் கண்டு வியந்திருக்கிறார்கள்.

Image may contain: text
The Charge at feather river படம் வரும் வரை Wilhelm scream effect க்கு எந்த பெயருமே கிடையாது.
அந்தப் படம் வந்து மக்கள் கவனம் பெற்ற பிறகு அப்படத்தில் அலறும் கேரக்டரான Private Wilhelm பெயரையே இந்த சிறப்பு ஒலியின் பெயராக ஆக்கிவிட்டார்கள்.
இப்போதுவரை இந்த Wilhelm scream effect இல்லாமல் பெரும்பான்மையான படங்களை எடுக்க முடியாது என்பதுதான் இவ்வொலியின் சிறப்பாகும்...

0 comments:

Post a Comment