Thursday, December 6, 2018

சிக்கன் சிஸ்டம்

திரு. விஜய் பாஸ்கர்விஜய் பதிவு

”ஒரு ஹோட்டலக் காட்டுறோம்”
“ம்ம்ம்”
“ஹோட்டலுக்குள்ள கேமரா போகுது. ஹோட்டல் தரையைவே காட்டிட்டே போகுது. குறிப்பிட்ட இடத்துல ஒரு கால் பாதங்கள காட்டுறோம். அது ரொம்ப பழைய செருப்ப போட்டிருக்கு. அது ஒரு பையனோடது. அவனுக்கு வயசு பதினேழு பதினெட்டு இருக்கலாம். அப்படியே கொஞ்சம் போகும் போது ஒரு டேபிள் தள்ளி இன்னொரு கால்பாதங்கள் தெரியுது. அது விலை உயர்ந்த ஷூ போட்டிருக்கு. அத போட்டிருக்கவரு கொஞ்சம் மத்திம வயசு பணக்காரர்”
“ம்ம்ம்”
“இப்ப அந்த பையனும் ரோஸ்டட் கோழி பாதி ஆர்டர் பண்றான். அந்த பணக்காரரும் ரோஸ்டட் கோழி பாதி ஆர்டர் பண்றார்”
“ம்ம்ம்”
“சர்வர் அத கேட்டு 1/2 கோழி ரோஸ்ட் ரெண்டு. அப்படின்னு சொல்றாரு”
“ம்ம்ம்”
”கோழின்னா ரோஸ்ட் பண்ண கொஞ்சம் நேரம் எடுக்கும்தான. அதுக்குள்ள அந்த பையன் சர்வர் கிட்ட ‘ அண்ணே ரெடியா..அண்ணே ரெடியான்னு’ கேக்க ஆரம்பிக்க சர்வர் “ அட இருப்பா. அத எண்ணெயில போட்டு தீயில வாட்ட நேரம் எடுக்கும்பா” அப்படின்னு சொல்லவும்”
“சொல்லவும்.. என்னாச்சு”
“அந்த பையன் சர்வர் கிட்ட “இல்லண்ணே நாலு மாசமா எங்க அம்மா அப்பா கிட்ட கேட்டு கேட்டு கெஞ்சி காசு வாங்கி இருக்கேன். இங்க கோழி சாப்பிடனும்னு எனக்கு ஆறு மாசமா ஆசை. இன்னைக்குதான் அது நிறைவேறப் போவுது” இப்படி ரொம்ப அப்பாவியா ஆர்வமா சொல்றான்.
“ம்ம்ம்”
“இதக் கேட்ட சர்வருக்கு ஒரு மாதிரி அகிருந்து. பாவமாவும் வாஞ்சையாவும் இருக்கு அந்த பையனப் பாத்து. அப்ப பாத்து கோழி ரோஸ்ட் ரெடியாகிட்டு குரல் வர, சர்வர் போய் ரோஸ்ட் எடுக்க போறாரு. அங்க அத கொடுக்கிறவரு.
“இது கொஞ்சம் பழைய சிக்கன். அது இப்ப வெட்டினது. புதுச கோட்டுக்கு குடுத்திருங்க” அப்படின்னு சொல்றாரு”
“ம்ம்ம்”
“சர்வருக்கு கோபம் வருது”
“ஏன் அப்படி கொடுக்கனும்னு கேக்கும் போது முதலாளி அங்க வர்றாரு. அவரு சொல்றாரு “ யோவ் அந்த சின்ன பையன் காலேஜ் பையன் தானய்யா. பாத்தா கஷ்டப்பட்ட பையனா இருக்கான். முத தடவ சாப்பிட வரான் போல அவனுக்கு நம்ம பழைய சிக்கன கொடுத்தா என்ன. இது என்ன ரொம்ப பழசா என்ன. புதுசா வெட்டினதோட ஒப்பிட்டாக்க கொஞ்சம் பழசு அவ்வளவுதான. அது விஷம் கிடையாதுல்ல. போய் கொடுன்னு சொல்றாரு”
“ம்ம்ம்”
“அதுக்கு சர்வர் “ பையன் காசு கெஞ்சி கஷ்டப்பட்டு வாங்கிட்டு வந்து இருக்கான் அவனுக்கு எப்படி பழசு கொடுக்க முடியும். அவன் இனி எப்ப இவ்வளவு காசு கொடுத்து கோழி ரோஸ்ட் சாப்பிடுறானோ. அவன எப்படி ஏமாத்த முடியும்” அப்படிங்க “வேலைல இருக்கனும்னா சொன்னத செய்” அப்படின்னு முதலாளி திட்ராரு.
“ம்ம்ம்”
“சர்வரும் அவரு சொன்ன மாதிரியே கொஞ்சம் பழைய சிக்கனை பையனுக்கும், புது சிக்கனை பணக்காரருக்கும் கொடுத்துர்றாரு”
“ம்ம்ம்”
“பையன் கோழி ரோஸ்ட் அப்படி சொல்லி ஆர்வமா சாப்பிடுறான். பணக்காரர் சாப்பிட போகும் போது அவருக்கு போன் வருது “ என்னது அந்த லோன் சாங்சன் ஆயிடுச்சா” அப்படி சொல்லி எந்திரிச்சி போயிர்றாரு பேச. திரும்ப வந்து ‘ சிக்கன் வேண்டாம். பில் கொடுங்க கொடுக்கிறேன்னு சொல்லிட்டு சர்வர்கிட்ட 500 ரூபாய் கொடுத்துட்டு வேகமா போயிர்றாரு.”
“ம்ம்ம்”
“சர்வர் 500 ரூபாயை வாங்கி திரும்பும் போது பையன் சிக்கன் சாப்பிட்டு, பில்லுக்கு பணத்த வெச்சிட்டு கைகழுவ போறான்.”
“அப்படி போகும் போது சர்வர் டக்குன்னு பணக்காரர் கிட்ட வாங்கின 500 ருபாய் நோட்ட எடுத்து அந்த பையன் பைல ஒரு புக்ல வெச்சிர்றாரு. கைகழுவிட்டு இருக்கிற பையனுக்கு இது தெரியாம வந்து அவன் அப்பா அம்மா கொடுத்த பணத்த பில்லுல வெச்சிட்டு போறான்”
“ம்ம்ம்”
“பையன் போனதும் முதலாளி சர்வரக் கூப்பிட்டு “யாரக் கேட்டு 500 ரூபாயை அந்த பையன் பைல வெச்ச. அது என் காசு” அப்படிங்க” அதுக்கு சர்வர் “ நீங்க கொடுத்த பழைய சிக்கன்தான் அப்படி சொல்லிச்சுன்னு” சர்வர் சொல்ல முதலாளி கத்த ஆரம்பிச்சிட்டார்”
“ம்ம்ம்”
“அதுக்கு சர்வர் “சரி முதலாளி அந்த 500 ரூபாயை என் சம்பளத்துல இருந்து கழிச்சிக்கோங்க. இனிமேல் என் கையால எப்பவாவது சாப்பிட வர்ற ஏழை மக்களுக்கு பழைய சிக்கன் பரிமாற சொன்னா, அந்த பில் தொகையை என் சம்பளத்துல இருந்து கழிச்சிட்டு அவுங்களுக்கு பில்லே கொடுக்காதீங்க சரியா. எப்பவாவது சாப்பிட வர்றவன இப்படி பழைய சாப்பாடு போட்டு காசு வாங்குறது பாவம்” அப்படி சொல்றாரு.
“ம்ம்ம்”
“அன்னைல இருந்து முதலாளி எல்லாருக்கும் ஒரே மாதிரிதான் சாப்பாடு செய்யனும்னு உத்தரவு போடுறார். அந்த ஹோட்டல்ல இனிமே பழைய சிக்கனே கிடையாது.”
“ம்ம்ம்”
” ஒரு சிஸ்டத்துல இருக்கிற காரணத்தாலேயே நம்மளையும் அடுத்தவங்கள ஏமாத்த சிஸ்டத்துல இருந்து சொன்னா, அத அப்படியே ஏத்துக்க தேவையில்லை. அது சரியில்லன்னு தாராளமா சொல்லலாம். இங்க பாரு ஹோட்டல்ங்கிற சிஸ்டம் சர்வர ஏமாத்த சொல்லுது. ஆனா சர்வர் லேசா பையன ஏமாத்தினாலும் சுதாரிச்சிட்டு, பேசி செயலாற்றி, அடுத்தவங்கள ஏமாத்த சொன்ன சிஸ்டத்தையே மாத்திட்டார் பாரு”
அவ்வளவுதான் கதை முடிஞ்சி போச்சு பாரு...

Image result for chicken roast

0 comments:

Post a Comment