Friday, December 14, 2018

எளிய முறையில் கணிதம் - 1 - விஜய பாஸ்கர்விஜய்

1/2 + 1/2 வை சேர்ப்பதை வரைய வேண்டுமானால்.
ஒரு கட்டம் வரைந்து அதில் பாதியாக 1/2 யையும். இன்னொரு கட்டம் வரைந்து அதில் பாதியாக 1/2 வையும் குறிப்பிட்டு.
இரண்டு பாதியும் சேரும் போது ஒன்றோடு ஒன்று சேர்வதால் அது முழுக்கட்டமாக ஆகிவிடும் என்று வரைந்து காட்டலாம்.

Fraction பெருக்கலை எப்படி காட்டுவது.
இந்த படத்தைப் பாருங்கள்.
2/ 3 x 1 / 4 = ? என்பதை எப்படி கட்ட வரைப்படமாக காட்டுவது.
ஒரு கட்டம் எடுத்து அதை மூன்று சம பங்காக பிரித்து அதில் இரண்டை எடுத்துக் கொண்டால் அதுதான் 2 / 3 .
ஒரு கட்டம் எடுத்துக் கொண்டு நான்கு சம பங்காக பிரித்து அதில் ஒன்றை எடுத்துக் கொண்டால் அதுதான் 1 / 4 .
இரண்டு கட்டப் பிரிவுகளும் எதிர் திசையில் இருந்தால் நல்லது.
ஒன்று இடமிருந்து வலம் என்றால் மற்றொரு கட்டம் மேலிருந்து கீழாக இருக்க வேண்டும்.
2/ 3 x 1 / 4 என்பதை காட்ட 2 / 3 கட்டம் மேல் அப்படியே 1 / 4 கட்டத்தை வைக்க வேண்டும்.
இப்படி வைக்கும் போது 12 சிறுகட்டங்கள் கிடைக்கும்.
இதில் 2/ 3 உள்கட்டங்களும், 1/ 4 உள்கட்டங்களும் மோதும் இடங்களை மார்க் செய்து கொள்ள வேண்டும். (படம் பார்க்க)
இங்கே 12 சிறுக்கட்டங்களில் அப்படி இரண்டு கட்டங்கள் பொதுவாக வந்து மார்க் ஆகி இருக்கின்றன.
2/ 3 x 1 / 4 = ( 2 x 1 ) / ( 3 x 4 ) = 2 / 12

No automatic alt text available.
2 / 12 என்பதுதான் கட்டத்தில் மார்க் ஆகி இருக்கும் பகுதி.. அதாவது 12 கட்டங்களில் 2 கட்டங்கள்தாம் 2 / 12
2 / 12 என்பதை வெட்டுக்குடுத்து 1 / 6 என்று பொதுவாக மாற்றிவிடுவோம்.
அதே கட்டத்தை ஆறாக பிரித்து அதில் ஒரு பகுதியை மார்க் செய்தால்.
அந்த 1 / 6 பரப்பளவும் முந்தையை கட்டத்தில் உள்ள 2 / 12 பரப்பளவும் சமமாக இருக்கும்..
இப்படி புரிந்து கொண்டால் பின்னத்தைக் கொண்டு பின்னத்தை பெருக்கும் முறை பற்றி ஒரளவுக்கு உணர்வு அறிவை அடையலாம்...

0 comments:

Post a Comment