Sunday, December 30, 2018

கிரிஞ் மலை கிறிஸ்துமஸ் விழா - விஜய் பாஸ்கர்விஜய்

Grinch கதையில்
கிரிஞ் மலையில் இருந்து கொண்டு ஊரார் கொண்டாடும் கிறிஸ்துமஸ் விழாவை கெடுக்கிறான்.
அவர்கள் கொண்டாடும் விழாப் பொருட்களை திருடி வந்து விடுகிறான்.
ஏன் கிரிஞ் இப்படி ஊரார் மேலே கடுப்பாய் இருந்தான் என்றால் சிலர் காரணமே இல்லாமல் என்கிறார்கள்.
பலர் கிரிஞ்சை ஒருகாலத்தில் ஊரார் அவமானப்படுத்திவிட்டார்கள், அடித்து துரத்தி விட்டார்கள் அதனால்தான் அவன் அப்படி செய்கிறான் என்கிறார்கள்.
அமெரிக்கா ஐரோப்பா போன்ற வளர்ந்த நாடுகளில் ”திகைத்திருக்கும் தனிமனிதன்” தான் மிகப்பெரிய பாதுகாப்பு பிரச்சனையாக இருக்கிறான்.
ஏதோ ஒரு வெறுமையில், எரிச்சலில், கடுப்பில் எந்திர துப்பாக்கியை எடுத்து வந்து தன் பள்ளியில் சுட்டு விடுகிறார்கள்.
சட்டு சட்டென்று பத்து பதினைந்து உயிர்கள் விநாடி நேரத்தில் இல்லாமல் போய்விடுகின்றன.
இதனாலே அங்கே “மனநலம்” பற்றி அதிகம் பேசுகிறார்கள்.
அந்த மனநலம் பிரச்சாரத்தை அரசே முன்னெடுப்பதின் முக்கிய நோக்கம் தனிமனிதர்களின் நன்மையா? இருக்கலாம்.
தனி மனிதர்கள் மேல் அரசு அக்கறை எடுக்கலாம். ஆனால் அதை விட நன்மை சமூகத்துக்குதான்.
அவர்கள் ”திகைத்திருக்கும் தனிமனிதன்” ஆக ஆனால் அது சமூகத்துக்கு கேடு.
கிரிஞ்சால் சமூகத்துக்கு பாதிப்பு ஏற்படுத்த முடிகிறது.
”திகைத்திருக்கும் தனிமனிதன்” னால் சமூகத்துக்கு பாதிப்பு ஏற்படுத்த முடிகிறது.
அப்படியானால் குறிப்பிட்ட சமூக மக்களால் இன்னொரு சமூக மக்களுக்கு எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்த முடியும்.
இஸ்ரேல் பாலஸ்தீனப் பிரச்சனை என்கிறோம்...
இஸ்ரேல் ஜனக்தொகை - 88 லட்சம்
பாலஸ்தீன் ஜனத்தொகை - 44 லட்சம்.
இஸ்ரேலுக்கு மும்பை அளவு ஜனத்தொகைதான். பாலஸ்தீனத்துக்கு சென்னை அளவு ஜனத்தொகைதான். ஆனால் சண்டை என்று முட்டிக்கொள்ளும் போது எவ்வளவு கொடூரமான விஷயங்கள் அங்கே நடைபெறுகின்றன.
இலங்கை பிரச்சனையின் கொடூரம் அறியாதவரே இருக்க முடியாது. புள்ளிவிபரம் இலங்கை தமிழர் ஜனத்தொகை முப்பது லட்சத்துக்குள்தான் என்று சொல்கிறது.
இவ்வுலகில் எங்கெல்லாம், எந்த நாட்டில் எல்லாம் சண்டை நடக்கிறதோ அங்கெல்லாம் யார் கோபப்படுகிறார்கள் என்று பாருங்கள். அங்கே ஜனத்தொகையில் சிறுபான்மை மக்களாக இருப்பவர்கள்தான் கோபப்படுவார்கள்.
அவர்கள் என்ன சும்மா கோபப்படுகிறார்களா என்ன ? இலங்கை தமிழர்களும், பாலஸ்தீனர்களும் சும்மாவா கோபப்பட்டார்கள், படுகிறார்கள்.
இல்லை. தொடர்ச்சியாக பெரும்பான்மை மக்கள் அவர்கள் மேல் வைக்கும் உரிமை மறுப்பு, அழுத்தம், அவமானம், வலி எல்லாம் சேர்ந்து அப்படியான நிலைக்கு அவர்களை தள்ளுகிறது.
சிறுபான்மையினரை மதித்தல், அல்லது அவர்களுக்கு சில விஷயங்களை விட்டுக் கொடுத்தல் என்பது அவர்கள் மேல் பாசம், அன்பு, சகோதரத்துவம் என்பதை விட அது சமூகத்துக்கு நல்லது என்பதுதான் நாம் அடைய வேண்டிய முக்கிய புரிதல்.
ஒரு கல்லூரி இளைஞராக உங்களுக்கு சண்டை, பிரச்சனை எல்லாம் கேட்க சுவாரஸ்யமாகவும், சவாலாகவும் இருக்கலாம். ஆனால் ஒவ்வொரு நாட்டில் நடக்கும் பிரச்சனைகளை அருகில் சென்று பார்த்தால் அங்கே மக்கள் எவ்வளவு நிம்மதி இல்லாமல் இருக்கிறார்கள் என்று தெரியும்.
அவர்கள் எல்லோருமே முதலில் நீங்கள் சொல்வது மாதிரி “ துலுக்கனைப் பாரு, பாவாடைகளை பாரு” என்று சிறுபான்மையினரை அவமானப்படுத்துவதில்தான் ஆரம்பித்திருப்பார்கள்.
வேறு வழியில்லாமல் சிறுபான்மை சமூகம் பதிலுக்கு செயலாற்ற வேண்டியது வரும் போது அந்த அந்த நாடே வன்முறைக்காடாகி விடும்.
சிறுபான்மையினர் நலம் பேணுதல் என்பது அவர்கள் நலத்துக்காக இல்லை. அது சமூக நலத்துக்காக என்பதை புரிந்து கொண்டால் மட்டுமே இந்தியா அம்பேத்கர் கண்ட இந்தியவாக இருக்கும்.
இங்கே அன்பு யாருக்கும் தேவையில்லை. அடிப்படை நாகரிகம் போதும்...
சிறுபான்மையினரை இங்கே யாரும் கொஞ்ச வேண்டாம்..
அடிப்படை நாகரிகத்துடன் அவர்களுடன் நடந்து கொண்டால் போதும்.
தமிழக அரசு தொடர்பு நிறுவனமான ஆவின் பால் பாக்கட் கவரை பாருங்கள்.
வரவேற்கத்தக்க செயல் இது...
தமிழக கிறிஸ்தவர்கள் மேல் அரசாங்கத்துக்கு அவ்வளவு பாசமா என்ன?
இல்லை...
ஆனால் தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக இருக்க இது சம்பிரதாயம், பண்பாடு..
எல்லோரும் வசதியாக இருக்க ஒரு ஏற்பாடு...
இந்தக் கருத்தை சரியாக உள்வாங்கிக் கொண்டு
கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் ஆசிரியர்கள் மாணவர்களிடத்தில் தொடர்ச்சியாக உரையாடினால்
ஒரளவுக்கு
மத அடிப்படைவாதிகளிடம் இருந்து இளைஞர்களை காப்பாற்றலாம்...

No automatic alt text available.

0 comments:

Post a Comment