Monday, December 3, 2018

ஈரம் கசியும் ஜென்னியின் கடிதம்.

நன்றி: திரு.சூர்யா சேவியர்

ஈரம் கசியும் ஜென்னியின் கடிதம்.
(வாழ்விற்கும்,சாவுக்கும் போராடிக்கொண்டிருந்தான்.அவனுக்கிருந்த வேதனையில் அவன் பலமாக உறிஞ்சியத்தின் விளைவாக எனது மார்பு உரசலுக்கு இலக்காகி தோல் வெடித்து,நடுங்கும் அவனது சிறிய வாய்க்குள் ரத்தம் கொட்டியது.)
அந்த வாழ்க்கையில் ஒரு நாளை நான் சித்தரித்துக் காட்டுகிறேன். இருந்தது இருந்தபடி சரியாகக் காட்டுகிறேன்.இதைப் பார்த்தால் இத்தகைய இன்னல்களை மிகச் சில நாடு கடத்தப்பட்டவர்களே அனுபவித்திருப்பார்கள் என்பதைக் காணலாம்.

செவிலியத்தாய்கள் வைப்பது என்றால் செலவுகள் அதிகம்.எனவே எனது மார்பிலும்,முதுகிலும் தொடர்ந்து பயங்கரமான வேதனைகள் இருந்தபோதிலும் குழந்தைக்கு நானே பாலூட்டுவது என்று முடிவு செய்தேன்.
ஆனால் இந்தப் பூஞ்சைக்குழந்தை பாலுடன் சேர்த்து அளவற்ற கவலையினை அடக்கி மூடப்பட்ட வருத்தங்களையும் சேர்த்து உண்டதால் எப்பொழுதுமே பரிதாபகரமாக இரவும் பகலும் கஷ்டப்பட்டபடி இருந்தது.
இந்த உலகிற்கு வந்தநாள் முதல் அவன் ஒரு இரவிலாவது நிம்மதியாக உறங்கியதில்லை.அதிகம் போனால் இரண்டு மூன்று மணி நேரம் இதுவும் அரிதாகவே.அண்மையில் அவனுக்கு கடுமையான வலிப்புகள் வரத் தொடங்கின.
வாழ்விற்கும்,சாவுக்கும் போராடிக்கொண்டிருந்தான்.அவனுக்கிருந்த வேதனையில் அவன் பலமாக உறிஞ்சியத்தின் விளைவாக எனது மார்பு உரசலுக்கு இலக்காகி தோல் வெடித்து,நடுங்கும் அவனது சிறிய வாய்க்குள் ரத்தம் கொட்டியது.
இவ்வாறு ஒரு நாள் அவனுடன் நான் அமர்ந்திருந்தபோது எங்கள் வீட்டு நிர்வாகத்தை பார்ப்பவள் உள்ளே வந்தாள்.குளிர்காலத்தில் அவளிடம் நாங்கள் 250 தேலர்கள் கொடுத்திருந்தோம்.எதிர்காலத்தில் வாடகைப் பணத்தை அவளிடம் கொடுக்காது அவளது வீட்டு சொந்தக்காரரிடம் கொடுப்பதாக உடன்பாடு செய்திருந்தோம்.
அவர் அவள் மீது ஜப்தி வாரண்ட் வைத்திருந்தார்.அவள் இந்த உடன்பாட்டை மறுத்து தனக்குச் சேரவேண்டிய 5 பவுன்களைக் கொடுக்குமாறு கேட்டாள்.இந்த சமயம் எங்களிடம் பணம் இருக்கவில்லை.(அதுவரையில் நெளட்டின் கடிதம் வந்து சேரவில்லை)
எனவே இரு அதிகாரிகள் வந்து எனது உடைமைகள் எல்லாவற்றையும் கம்பளிதுணிகள்,படுக்கைகள்,துணிகள் அனைத்தையும் -எனது அப்பாவிக் குழந்தையின் தொட்டிலையும் கூட பறிமுதல் செய்து ஜப்தி செய்தனர்.என் புதல்வியர் நின்றபடி கரைந்தழுதனர்.
இரண்டே மணி நேரத்தில் அனைத்தையும் எடுத்துச்செல்வதாக அச்சுறுத்தினார்கள்.அப்படி நேரிட்டால் நான் குளிரில் உறைந்து போகும்
குழந்தைகளுடன் நோயுற்ற மார்புடன் வெறுந்தரையில் படுக்க வேண்டியிருக்கும்.
எங்கள் நண்பர் ஷ்ராம் உதவி தேடி நகரத்திற்கு விரைந்தார்.அவர் ஒரு குதிரை வண்டிக்குள் ஏறினார்.ஆனால் குதிரைகள் மிரண்டு ஓட்டம் பிடித்தன.அவர் குதித்துத் தப்பினார்.ஆனால் காயமுற்று ரத்தம் பீறிட்டது.
நடுங்கிக்கொண்டிருக்கும் என் குழந்தைகளுடன் நான் அழுது கொண்டிருக்கும்போது அவரைக் கொண்டுவந்தார்கள்.
(இது கடிதத்தின் ஒரு பகுதியே)Image may contain: 2 people, text

0 comments:

Post a Comment