Saturday, December 1, 2018

கார்த்திகை தீபம் வரலாறு.

நன்றி : திரு. சூர்யா சேவியர்

புத்தமதம் பரவியிருந்த காலத்தில் மடாலபுரம் எனும் ஊரில் புத்தமதத்தை சேர்ந்தவர்கள் பேராமணக்கு, சித்தாமணக்கு எனும் வித்துகளிலிருந்து நெய்யெடுத்து மருந்துகளுடன் உபயோகித்து அதன் நற்பலன்களை அறிந்தனர்.மேலும் தீபம் ஏற்றி குளிர்ந்த பிரகாசத்தையும் கண்டனர்.
இதன் விபரத்தை மன்னனிடம் சொல்ல,அவ்வரசன் ஆமணக்கை அதிகமாக விளைவிக்கச்செய்து,அங்கிருந்த மலையுச்சியில் வெட்டி பள்ளமிட்டு,ஆமணக்கு நெய்யை ஊற்றி, பருத்தி நூல் திரிசெய்து பெரும் தீபம் ஏற்றி விடியும் வரை எரியவிட்டான்.

காலையில் சென்று அந்தத் தீபப்புகையால் மிருகங்களுக்கும்,ஆடு,மாடுகளுக்கும் ஏதேனும் தீங்கு நேரிட்டுள்ளதா என்று ஆராய்ந்தான்.யாருக்கும் ஒரு கெடுதலும் ஏற்படாமல் இருந்ததால் மக்களை வரவைத்து ஆமணக்கு நெய்யை கொடுத்து தீபம் ஏற்றிக்கொள்ள உத்தரவிட்டான்.

Image may contain: fire and night
ஆனால் மக்கள் இதை வீடுகளுக்குள் செய்யப் பயந்து, மூன்று நாள் வரையிலும் திண்ணைகளிலும், மாடங்களிலும் ஏற்றினர்.இதனால் ஒரு தீங்கும் இல்லையென அறிந்த பிறகு வீட்டிற்குள் ஏற்றிவைத்தனர்.
அந்தத் தீபம் இருளை விளக்கும் ஒளியாக விளங்கிய படியால் (கார்த்துலதீப) எனும் பெயரை அளித்து, புத்தமார்க்கத்தினர் கண்டுபிடித்த கார்த்திகைமாத பவுர்ணமியில் தேசம் எங்கும் தீபம் ஏற்றி,தியானம் செய்தும்,ஈகையில் ஈடுபட்டும் மகிழ்ந்தனர்.
புதமதத்தார் செய்த இந்த நற்செயல்களை, வேஷ பிராமணர்கள் வந்தபொழுது,மக்களிடம் பொய் புராணங்களை சொல்லி ஏமாற்றி,பொய் மதங்களைப் பரப்பினார்கள்.புதமதத்தார் கண்டுபிடிக்காத தானியங்களை விட வேறு தானியங்கள் கிடையாது.
ஆதாரம்..(அயோத்திதாசப் பண்டிதர் சிந்தனைகள்.)
இதில் சொல்லப்படும் மடாலபுரம் தான் இப்போது திருவண்ணாமலை அருகிலுள்ள மடப்புரம் என்ற ஊர் என்பது ஆய்வாளர்கள் கருத்து.
அண்ணாந்து பார்க்கும் உயரத்தில் உள்ள மலையில் ஆமணக்கு விதையை எரித்து சோதனை செய்ததால் அண்ணாந்து மலை என்று அழைக்கப்பட்டு அண்ணாமலை என்றானது. நம்மில் மூத்தவரை அண்ணன் என்பதன் தொடர்ச்சி தான்.
மன்னர் காலங்களில் நெருப்பை பாதுகாத்து வைத்திருக்க தனிக்கிராமங்கள் இருந்தது வரலாறு. பல வீடுகளில் அடுப்பெரிக்க பக்கத்து வீட்டில் கங்கு வாங்கி வருவது சில காலம் முன்பு வரை கிராமங்களில் இருந்த நடைமுறைகளில் ஒன்று.
தனியுடமையாக இருந்த நெருப்பை, பொதுவுடமையாக அனைவரும் பயன்படுத்தும் வகையில் மாற்றப்பட்டதே கார்த்திகை தீபம் ஏற்றும் வரலாறு.
அது கடவுள் வழிபாடு சார்ந்த செயலாக பக்தி இயக்க காலத்தில் மாற்றப்பட்டது.

0 comments:

Post a Comment