Sunday, January 6, 2019

லாரா ஜாக்சன் - விஜயபாஸ்கர் விஜய்

இங்கிலாந்தை சேர்ந்த லாரா ஜாக்சன் என்பர் JanuHAIRY என்னும் ஒன்றுகூடும் அழைப்பை விடுத்திருக்கிறார்.
அந்த ஒன்றுகூடலில் நோக்கம் இதுதான்.
“ ஒரு பெண்ணாக இயற்கையாக இருக்க எனக்கு உரிமை உண்டு. நான் ஏன் வேக்சிங்க் செய்து என் கால்முடி கைமுடிகளை எடுத்து அதை பளபளப்பாக வைக்க வேண்டும். அப்படியே முடியை வளர்த்துதான் இருப்பேன்”
என்கிறார் லாரா ஜாக்சன்.

அவருடைய JanuHAIRY க்கு பல பெண்கள் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
பாராட்டதக்க செயல் இது...
நம்மூரைப் பொறுத்தவரை JanuHAIRY மாதிரியான விஷயங்களை இன்னும் இருபது வருடங்கள் பிறகு செய்யலாம் என்பதே என் கருத்து.
அழகான பெண்ணா அல்லது திறமையான பெண்ணா என்று வரும் போது வெளிநாடுகளை விட நம் நாட்டில் அழகான பெண்ணுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கும் போக்கு இருக்கிறது.
அழகு என்று நான் குறிப்பிடுவது வலது சாரி ஆணாதிக்கர்கள் அழகு என்று குறிப்பிடுவதைத்தான்.
திறமையுள்ள பெண் கொஞ்சம் அழகாக தன்னை பிரெசெண்ட் செய்து கொள்ளும் போது அத்திறமையை வெளியே காட்ட வாய்ப்பு கிடைக்கிறது.
அந்த வாய்ப்பை ஏன் மறுக்க வேண்டும். இரண்டு பெண்கள் இண்டர்வியூ செல்கிறார்கள்.
அதில் ஒரு பெண்ணுக்கு இயல்பிலேயே அதிகம் முடி வளராது, கண்ணாடி அணிய வேண்டிய தேவை கிடையாது, வெள்ளையாக இருப்பார்.
இன்னொரு பெண்ணுக்கு முடி வளரும், கன்ணாடி அணிந்திருப்பார், மாநிறமாக இருப்பார்.
இந்த உலகம் நிச்சயமாக அந்த முதல் வெள்ளை, கண்ணாடி அணியாத, கைகளில் முடிவளராத பெண்ணுக்கே முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
அவருக்கு இருக்கும் சிறிய திறமை கூட அங்கே பெரிதாக பாராட்டப்படும். நம் எல்லோரிடமும் அந்த மனநிலை உள்ளே இருக்கிறதுதான்.
ஆனால் அந்த இரண்டாவது பெண்
- கண் புருவம் திருத்தி
- வேக்சிங் செய்து
- ஃபேசியல் செய்து
- ஃப்ரேம் இல்லாத கண்ணாடி அணிந்து
- சரியான உடைகளை
அணிந்தால் முதல் பெண்ணுக்கு ஈடான அழகில் வந்து விடுவார். அவருக்கான மதிப்பு சபையில், அவருடைய திறமையை வெளிப்படுத்தவாது வாய்ப்பு கிடைக்கும்.
ஆகையால் லோயர் மிடில் க்ளாஸில் இருக்கும் பெண்கள் முற்போக்கு என்று இந்த JanuHAIRY க்கு ஆதரவாய் போனால் அது அவர்களுக்குதான் இழப்பைக் கொண்டு வரும்..
உங்கள் அப்பா அம்மா படிக்கவில்லை. நீங்கள் கஷ்டப்பட்டு படித்து எம்.பி.ஏ படிக்கிறீர்கள்
உங்களுக்கு மனித வள மேம்பாடு என்ற ஹெச்.ஆர் நன்றாக வருகிறது. எப்பிரச்சனையும் சமாளிக்கும் அறிவு இருக்கிறது.
ஆனால் ஹெ.ஆர் டிப்பார்ட்மெண்ட் உள்ளே நுழைய திறமை மட்டுமா இங்கு பார்க்கிறார்கள். பேப்பர் அளவில் திறமை என்பார்கள். ஆனால் யதார்த்தில் லுக்கபிளாக நம் கம்பெனியை பெருமைப்படுத்துவதாக தோற்றம் இருக்க வேண்டும் என்பார்கள்.
அப்போது நீங்கள் அழகு வேஷம் போட மாட்டேன் என்று வாய்ப்பை இழக்க முடியாது.
ஸோ நம் நாட்டு மிடில் கிளாஸ் பெண்கள் இந்த JanuHAIRY முற்போக்குக்கு போகாமல் இருப்பதே சரியானதாகும்...
நம்மூர் ஆண்கள் மனநிலையில் வரவேண்டிய மாற்றம் இது... “ முடி இருந்தாலும் அழகுதான்” என்று ஆண்கள் நினைக்கும் வரை பெண்கள் அழகுபடுத்துதலில் கவனமாக இருக்கலாம்தாம்..
படத்தில் இருப்பது லாரா ஜாக்சன்...


Image may contain: 1 person, smiling, close-up

0 comments:

Post a Comment