Wednesday, December 5, 2018

பெண்கள் விடுதியில் குளியல் அறை மற்றும் படுக்கை அறைகளில் ரகசிய கேமராக்கள்

சென்னை: சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள தனியார் பெண்கள் விடுதியில் குளியல் அறை மற்றும் படுக்கை அறைகளில் ரகசிய கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளதை அடுத்து அதன் உரிமையாளர் சஞ்சீவியை போலீஸார் கைது செய்தனர். சென்னை ஆதம்பாக்கம்த்தில் உள்ளது தனியார் பெண்கள் விடுதி. இங்கு ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் 10-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கியிருந்தனர். இந்நிலையில் அவ்வப்போது அவர்களது அறைகளில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தன. இது போல் வழக்கத்துக்கு மாறான செயல்பாடுகளால் பெண்கள் குழப்பமடைந்தனர். இதையடுத்து அறையில் ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் அடைந்தனர். இதை கண்டறிவதற்காக தங்கள் செல்போன்களில் இருந்து Hidden Camera Detector என்ற செயலியை டவுன்லோடு செய்துள்ளார்கள். அந்த செயலி மூலம் அனைத்து அறைகளிலும் சோதனை நடத்தியபோது அங்குள்ள அறைகளில் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து ஆதம்பாக்கத்தில் புகார் அளித்தனர்.
Image result for hidden camera
Image result for hidden camera

Hidden Camera Detector apps - செயலியை பதிவிறக்கம் செய்ய
https://play.google.com/store/search?q=Hidden+Camera+Detector&c=apps&rating=1






செயலி செயல்படும் முறை
https://www.youtube.com/watch?v=ltLct5_vWNM

Tuesday, December 4, 2018

போபால் விஷய வாயு விபத்து

நன்றி :திரு.விஜயபாஸ்கர் விஜய் 

1984 ஆம் ஆண்டு டிசம்பர் 2 - 3 நாளில் நடந்த
போபால் விஷய வாயு விபத்தில் என்ன நடந்தது.
பைப்களை கழுவி சுத்தப்படுத்த நீரைத் திறந்து விட,
அந்த நீர் ஒரு Process pipe வழியே மெத்திஐஸோசைனேட் டேங்கை அடைய,
மெத்தில்ஐஸோசைனேட் நீரோடு சேர்ந்தால் வெடிப்பு வினையாகி
விஷவாயு கசிந்து சிம்னி வழியே வெளிவந்து
பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்றது.
இப்படி நினைத்துக் கொள்ளுங்கள்.
நீர் ஒரு கெமிக்கலோடு கலக்க கூடாது. கலந்தால் அங்கே பெரிய வெடிப்பு நடக்கும். அந்த வெடிப்பை முன்னரே எச்சரிக்கும் கருவிகளும், அதை தடுக்கும் முறைகளும் அரசின், யூனியன் கார்பைடின் அலெட்சியத்தால் சரிவர பராமரிக்கப்படவில்லை. வைக்கப்படவில்லை.
இந்த விபத்துக்கு நான்கு காரணங்கள்.
1.தண்ணிய பைப்களில் கழுவதற்காக திறந்து விடும் போது சில முக்கியமான Process pipe களின் பாதையை அடைக்க வேண்டும்.
Space spade அல்லது Spectacle blind என்பார்கள்.
அதை வைத்து மெத்தில்ஐஸோசைனேட் டேங்க பைப்புகளை அடைத்து விட்டே இதை செய்ய வேண்டும். அங்கே வால்வுகள் இருந்தாலும் இதை செய்தே ஆக வேண்டும்.
ஆனால் அதை யாரும் செய்யவில்லை.
தண்ணிய திறந்து விட்டு முறவாசல் செய்வது போல ஒரு தொழிலாளி செய்கிறார். அதுதான் அங்கே வழக்கம்.
அதை கண்காணிக்க ஒரு டிப்ளமா, பி.ஈ முடித்த பொறியாளர் அங்கே இல்லை.
நிர்வாகம் அவ்வளவு கொடிய விஷ கெமிக்கலை அவ்வளவு அலெட்சியமாக கையாள்கிறது.
அருகில் இருக்கும் லட்சக்கணக்கான மக்கள் பற்றி கவலை இல்லை.
2.மெத்தில்ஐஸோசைனேட் டேங்குகள் பல மீட்டர் கீழே புதைக்கப்பட்டிருக்கும்.
போபாலில் அப்படி மூன்று டாங்குகள் இருந்தன.
மூன்றிலும் நீர் விழுந்ததும் உடனே வெடிக்காது. அந்த வினைக்கு கொஞ்சம் நேரம் பிடிக்கும்.
பைப்களில் Pressure அதிகமாகும். அப்போது கண்டுபிடித்திருந்தால் கூட விபத்தை தடுத்திருக்கலாம்.
ஆனால் அங்கே இருந்த Pressure Gauge Level Gauge Temperature Gauge என்று அனைத்து Instrumentation கருவிகளும் பராமரிப்பு இல்லாமல் சரியாக வேலை செய்யாது.
இங்கே அழுத்தம் கூடினால் கூட அதை தெரிவிக்க வேண்டிய கண்ட்ரோல் ரூமில் எந்த பிரச்சனையும் இல்லை என்றே காட்டி இருக்கிறது.
நிர்வாகம் அவ்வளவு கொடிய விஷ கெமிக்கலை அவ்வளவு அலெட்சியமாக கையாள்கிறது.
அருகில் இருக்கும் லட்சக்கணக்கான மக்கள் பற்றி கவலை இல்லை.
3.மெத்தில்ஐஸோசைனேட் நீருடன் வினை புரிந்தால் வெடிக்கும் என்பதற்காக அந்த மூன்று டேங்குகளை சுற்றி ஒரு குளிர்பதன யூனிட், அதான் ஏசி யூனிட் வைத்திருந்தார்கள்.
ஆனால் முதலாளித்துவ லாப வெறியில் அதை Cost cutting என்று சிக்கன பார்வையில்
,
அந்த ஏசி யூனிட்டை பல காலம் முன்பே கம்பெனி எடுத்து விடுகிறது. எத்தனை கோடி சம்பாதித்துக் கொண்டிருப்பார்கள்.
அந்த மூன்று ஆபத்தான ஏசி டேங்குகளை சுற்றி இருக்கும் ஏசி யூனிட்தான் இவர்களுக்கு செலவாய் தெரிந்திருக்கிறது.
நிர்வாகம் அவ்வளவு கொடிய விஷ கெமிக்கலை அவ்வளவு அலெட்சியமாக கையாள்கிறது.
அருகில் இருக்கும் லட்சக்கணக்கான மக்கள் பற்றி கவலை இல்லை.
4.Scrubber unit என்பார்கள்.
ஆலை கழிவு புகையை ஒரு கூண்டுக்குள் அனுப்பி அதை மாபெரும் நீர் ஷவரை வைத்து குளிக்க வைப்பார்கள்.
அந்த நீர்க்குளியலில் புகையில் உள்ள சல்ஃபர்டை ஆக்சைடு போன்ற கொடும்புகைகள் நீரில் கரைந்து அதை அப்புறப்படுத்துவார்கள் ( என்ன ஆத்துல கொண்டு விடுவானுங்க)
மீதம் இருக்கும் புகையை வடிகட்டி சிம்னி வழியே வெளியே விடுவார்கள்.
போபால் விஷ வாயு விசயத்தில் இந்த ஸ்கிரப்பர் யூனிட் மிக மொக்கையாக இருந்தது. அது புகையின் கொள்ளளவுக்கு ஏற்றால் போல் இல்லை.
சும்மா ஒரு ஸ்கிரபர் யூனிட் என்று தர்மத்துக்கு வைத்திருக்கிறான்கள்.
நிர்வாகம் அவ்வளவு கொடிய விஷ கெமிக்கலை அவ்வளவு அலெட்சியமாக கையாள்கிறது.
அருகில் இருக்கும் லட்சக்கணக்கான மக்கள் பற்றி கவலை இல்லை.
இந்த நான்கு காரணங்களுமே மிக அற்பமான காரணங்கள். எளிதில் இதை சரி செய்திருக்கலாம்.
அரசாங்கம் விழிப்பாய் தங்கள் Safety Engineeer களை வைத்து கண்கானித்திருந்தால் இந்த பிரச்சனையே இருந்திருக்காது.
ஆனால் யூனியன் கார்பைடு நிறுவனத்தை ஒரு சதவிகிதம் கூட அரசு கண்காணிக்கவில்லை...
No automatic alt text available.
இயல்பாகவே அரசாங்கத்துக்கு முதலாளித்துவ சக்திகள் மேல் இருக்கும் அடிமை உணர்வும், பொது மக்கள் உயிர் மேல் இருக்கும் அலெட்சியமும் பல ஆயிரம் மக்கள் உயிரை குடித்தது.
போபால் விஷவாயுவை வருடா வருடம் அனைத்து கெமிக்கல் மற்றும் எண்ணெய் கம்பெனிகளும் நினைவு கூறும் நாளை அரசு அறிவிக்க வேண்டும்.
அன்றைய நாளில் அவர்கள் இந்த சம்பவத்தை தொழிலாளர்கள், அதிகாரிகள் என்று அனைவரிடமும் விவாதிக்க வேண்டும்.
அரசாங்கம் தன் Safety officer களை நேர்மையாக செயல்பட வைப்பது முக்கியம்.
அதை விட முக்கியம் தொழில் வளர்கிறது என்று இது போன்ற ஆலைகளை ஊருக்குள் வைத்துக் கொள்ளாமல் இருப்பது...
லட்சக்கணக்கான அப்பாவி மக்கள் இதில் கொடூரமாய் பாதிக்கபட்டிருக்கும் போது இச்சம்பவத்தை டெக்னிக்கலாக விவாதிப்பதே மனதை உறுத்ததான் செய்கிறது.
இருப்பினும் படித்தவர்கள் இவ்விபத்தின் டெக்னிக்கல் காரணத்தை கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
அரசு மற்றும் முதலாளிகளின் அலெட்சியத்தை அப்போதுதான் துல்லியமாக தெளிவாக புரிந்து கொள்ள முடியும்...

Monday, December 3, 2018

அனார்கலி ஓவியம்

திரு.அன்பழகன் ஆறுமுகம் பதிவு
அனார்கலி.ஓவியம்;
அக்பரின் மகனான ஜஹாங்கீரின்(சலீம்)
காதலி.அமரத்துவமான காதலுக்கு உதாரணமாக சொல்லப்படும் இந்த கதைக்கு வரலாற்றில் எவ்வித ஆதாரமும்
இல்லை.அக்பரின் சம காலத்தில் அவரது
அவையில் இருந்த புகழ்பெற்ற அபுல் பாசலின் நூல்களிலும் இந்த காதல் குறித்து எவ்வித பதிவும் இல்லை.மொடாக் குடிகாரரான ஜஹாங்கீரின் ஹரம்மில்(அந்தப்புரத்தில்) ஏராளமான பெண்கள் குவிந்ததிருந்தாகவே வரலாற்று ஆசிரியர்களும் ஜெஸ்யூட் பாதிரியார்களும் குறிப்பிடுகின்றனர்.ஒரு சிலர் மட்டுமே லாகூரில் உள்ள உயர்ந்த தூண் போன்ற அமைப்பை அனார்கலி அக்பரால் உயிரோடு வைத்து புதைக்கப்பட்ட சமாதி
என்று குறிப்பிடுகின்றனர்.வரலாற்றில்
அவிழ்க்கப்படாமல் உள்ள மர்ம முடிச்சுகளில் ஒன்று அனார்கலி சலீம் காதல்.


Image may contain: 1 person

திருக்குறள் 3

குறள் 3:

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்.
மு.வரதராசனார் உரை:
அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்.
சாலமன் பாப்பையா உரை:
மனமாகிய மலர்மீது சென்று இருப்பவனாகிய கடவுளின் சிறந்த திருவடிகளை எப்போதும் நினைப்பவர் இப்பூமியில் நெடுங்காலம் வாழ்வர்.
பரிமேலழகர் உரை:
மலர்மிசை ஏகினான் மாண்அடி சேர்ந்தார் - மலரின் கண்ணே சென்றவனது மாட்சிமைப்பட்ட அடிகளைச் சேர்ந்தார்; நிலமிசை நீடுவாழ்வார் - எல்லா உலகிற்கும் மேலாய வீட்டு உலகின்கண் அழிவின்றி வாழ்வார். (அன்பான் நினைவாரது உள்ளக் கமலத்தின்கண் அவர் நினைந்த வடிவோடு விரைந்து சேறலின் 'ஏகினான்' என இறந்த காலத்தால் கூறினார்; என்னை? "வாராக் காலத்தும் நிகழும் காலத்தும் ஓராங்கு வரூஉம் வினைச் சொற் கிளவி இறந்த காலத்துக் குறிப்பொடு கிளத்தல் விரைந்த பொருள் என்மனார் புலவர்" (தொல், சொல், வினை, 44) என்பது ஓத்தாகலின். இதனைப் 'பூமேல் நடந்தான்' என்பதோர் பெயர்பற்றிப் பிறிதோர் கடவுட்கு ஏற்றுவாரும் உளர். சேர்தல் - இடைவிடாது நினைத்தல்).
மணக்குடவர் உரை:
மலரின்மேல் நடந்தானது மாட்சிமைப்பட்ட திருவடியைச் சேர்ந்தவரன்றே, நிலத்தின்மேல் நெடுங்காலம் வாழ்வார். 'நிலம்' என்று பொதுப்படக் கூறியவதனான் இவ்வுலகின் கண்ணும் மேலுலகின்கண்ணுமென்று கொள்ளப்படும். தொழுதாற் பயனென்னையென்றாற்கு, போகநுகர்தலும் வீடுபெறலுமென்று கூறுவார் முற்படப் போகநுகர்வாரென்று கூறினர்.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
உள்ளக் கமலத்தில் - மனத்தில் - சென்றிருப்பவனான இறைவனுடைய மாட்சியமைப்பட்ட அடிகளை எப்போதும் நினைப்பவர்கள் , உலகில் அழிவின்றி வாழ்வார்கள்.
Translation:
His feet, 'Who o'er the full-blown flower hath past,' who gain In bliss long time shall dwell above this earthly plain.
Explanation:
They who are united to the glorious feet of Him who occupies swiftly the flower of the mind, shall flourish in the highest of worlds (heaven).

ஒரு எதிர்க் கேள்வியின் தத்துவம்

நன்றி. திரு. சூரிய சேவியர்

ஒரு எதிர்க் கேள்வியின் தத்துவம்
அம்மா
“அவருக்கு உன்னை பார்க்க வேண்டும் போல் இருக்கிறது.”
என்று உறவினர் ஒருவர் சொன்னபோது
“எனக்கு அவரை பார்க்க வேண்டும் போல் இருக்க வேண்டாமா?”
என்று மென்மையாக பதில் அளித்து தனது திடச் சித்தரத்தை வெளிப்படுத்திக் கொண்டார். காரணம் ஏதுமின்றி அல்லது சொல்லாமலேயே பிரிந்துவிட்டு 36 வருடங்கள் கழித்து முதுமை யின் இயலாமையுடன் தன்னிடம் திரும்பி வந்த கணவன், புகழ் பெற்ற தலைவர் கொண்டபல்லி சீத்தாரமய்யாவை பார்க்க மறுத்து அவரது மனைவி கோட்டேஸ்வரம்மா கேட்ட எதிர்க் கேள்விதான் இது.
என்னைப் போன்றவர்கள் 80-ம் ஆண்டு களுக்கு பிறகு இயக்கத்திற்கு ஈர்க்கப்பட்ட காலத்தில், கொண்டபல்லி சீத்தாரமய்யாவின் சாகசங்கள் எங்களை கவர்ந்தது. அவரது பாதைகளை அப்போதே ஏற்க முடியவில்லை என்றாலும், அரசின் அடக்குமுறைக்கு எதிராக அவர் களம் கண்ட செய்திகள் பலரை கவர்ந்தன. அவரின் துணைவியார் பற்றி, அதாவது கோட்டேஸ்வரம்மா பற்றி, அவரது மரணத்தினை தோழ.ர்எஸ்.வி.இராஜதுரை எழுதிய கட்டுரை மூலமாவே அறிய முடிந்தது. அதிலும் நூறு ஆண்டுகள் வாழ்ந்தார் என்ற செய்தி, அவரது ‘ஆளற்றபாலம்’ என்ற சுயசரிதை நூலை தேடிப் படிக்கத் தூண்டியத
இந்த எதிர்வினை, பெண் சமத்துவம், பெண் விடுதலை புரட்சிகர இயக்கத்திற்குள்ளும் பேணப்பட வேண்டும், இல்லையென்றால் போராட வேண்டும் என்ற கருத்தை பறைசாற் றுவதுடன் மட்டுமல்ல, கோட்டேஸ் ரம்மாவின் வாழ்க்கையில் இது முக்கிய பகுதியாகவும் அமைந்துள்ளது. 1918 ஆகஸ்ட் 5-ல் பிறந்து 2018 செப்டம்பர் 19 அன்று மரண மடைந்தார். 100 ஆண்டுகள் ஒரு மாதம் மற்றும் 14 நாட்கள் வாழ்ந்துள்ளார். அவரது வாழ்க்கையை படிக்கும்போது ஒருவரின் வாழ்க்கையில் இவ்வளவு துக்கம் இருக்க முடியுமா என மனம் கரைந்து போகிறது.
குழந்தைப் பருவத்தில் திருமணம், சிறுவயதிலேயே பால்ய கணவன் மரணம், இதனால் விதவைக் கோலம் பூண்டார். இவை அனைத்தும் அவரால் அறிந்திருக்க முடிய வில்லை. பிற்காலத்தில்தான் தனக்கு திருமணம் நடந்தது, தான் விதவை என்பதை அறிந்தார். தேசிய இயக்கம், புரட்சிகர இயக்கங்களால் ஈர்க்கப்பட்டு 1939-ல் சுந்தரய்யா, ராஜேஸ் வரராவ், கந்துகூரி சந்திரராவ் ஆகியோர் முயற்சியால் கொண்டபல்லி சீத்தாரமய் யாவுடன் மறுமணம். அன்றைய காலத்தின் புரட்சிகரமான திருமணம்.
இடப் பெயர்வு, தலைமறைவு வாழ்க்கை, நாடக, கலைநிகழ்ச்சி பிரச்சாரம், ஆயுத பயிற்சி, இரு குழந்தைகளுக்கு தாய், காரணமின்றி பிரிந்த கணவன், குழந்தைகளுடன் பிரிவு, மகன் காவல்துறையால் சுடப்பட்டு மரணம், மகளின் கணவர் திடீர் மரணம், மருத்துவரான மகளின் மனநிலை பாதிப்பு, மரணம், பெற்ற தாய் அஞ்சம்மாவின் மரணம், வாழ்க்கை தேவைக் காக 35 வயதில் படிப்பு, வேலை என துயரங் களினூடே எப்படி 100 ஆண்டுகள் வாழ்ந்தார் என்ற வினா எழுகிறது.
இவரின் துக்ககம் எந்த அளவிற்கு தனி மனுஷியுனுடையதோ அந்த அளவிற்கு சமுதாயம் மற்றும் அரசியல் இயக்கம் சார்ந்த தாகவும் இருக்கும். தனியாக இருந்தாலும் கோட்டேஸ்வரம்மா தனது சொந்த சம்பாத்தி யத்தில் வாழ்ந்து, கடைசி வரை அவர் அரசியல் போராளியாக வாழ்ந்தார்.
அரசியல் ஆண்களின் துறை, பெண்களுக்கு அங்கே மனைவி, சகோதரி, தாய் என்ற முறை யில்தான் இடம் உண்டு என்ற நிலையை எதிர் கொண்டார் கோட்டேஸ்வரம்மா. பெண் சமத்துவம், விடுதலைக்காக கடைசிவரை தனது போராட்டத்தை சமரசமற்ற முறையில் தொடர்ந்தார்.
Image may contain: drawing and text

தேசிய இயக்கம், சமூக சீர்திருத்த இயக்கம், புரட்சிகர இயக்கம் என்று தளத்தில் அவரது அனுபவங்கள் அமைந்துள்ளன. பெண்கள் பொது சேவைக்கு வருவதில் இருந்த தடைகளை உடைப்பதில். பெண்கள் மேடையேறி பாடக்கூடாது, நாடகத்தில் நடிக்க கூடாது என்ற கீழ்த்தரமான கருத்தோட்டத்தை உடைத்தெறி வதில், பெண்கல்வியை வளர்ப்பதில் என பல தளங்களில் பணியாற்றி உள்ளார். 35 வயதில் படித்து, பணியில் சேர்ந்து, வாழ்வின் கணிசமான பகுதியை மகளிர் விடுதியில் கழித்தார்.
தன்னை கைவிட்ட கணவனை கடைசி காலத்தில் இயக்கத்தோழர்கள் ஒருமுறை பார்க்க வலியுறுத்திய போது “மனுசாஸ்திரம், இந்து மனப்பான்மை என்னுள் ஜீரணித்து இருந்து, எத்தனை வேதனைகளை அனுபவித்து இருந்தாலும், பதிவிரதையைபோல் கணவனை காப்பாற்றுவேன் என்று தப்பித்தவறி நான் சொன்னால்கூட, வேண்டாம் என்று தடுக்க வேண்டிய கம்யூனிஸ்டுகளாகிய நீங்கள், அடக்கிவைக்கப்பட்ட பெண்ணினத்திற்கு அநியாயம் செய்யலாமா” என்று கேட்கிறார் கோட்டேஸ்வரம்மா.
ஆந்திர மாநிலத்தில் அக்காலத்தில் பொதுவுடைமை இயக்கம் எவ்வாறு வீறு கொண்டு எழுந்தது என்பதை இயல்பாக வெளிப்படுத்துகிறார். இன்றைக்கு ஆந்திராவின் கலை இலக்கிய அமைப்புகள் உயிரோட்டமமான செயல்பாடுகளுக்கு வேர் எங்கே இருக்கிறது என்பதை அறிய முடிகிறது.
ஆந்திராவில் கம்யூனிஸ்ட் கட்சி போராட் டங்கள் ஆயுத தாங்கிய போராட்டங்கள், கட்சி பள்ளிகள் நடத்தியது மட்டுமல்ல, ஆந்திர கட்சியின் அக்கால செல்வாக்கிற்கு ஆக்கப்பூர் வமான பணிகள் அடிப்படையானது என்பதை இந்நூலில் அறிய முடிகிறது.
பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், நூலகங்கள் கட்டுவதையும், உற்பத்தியை பெருக்குது எனது வயல்கள் மேம்பாடு, நீராதரம் பெருக்கும் பணிகளில் கட்சி ஈடுபட்டுள்ளது. வறட்சியை எதிர்கொள்ள விவசாயிகளை அணிதிரட்டி ஆக்கப்பூர்வ பணிகளை மேற்கொண்டது மிக மிக அடிப்படையாக அமைந்துள்ளது. இதன் அடிநாதமாக விவசாய இயக்கம், பெண்கள் இயக்கம், கலைக்குழு அமைப்புகள் கட்சியின் வழிகாட்டலில் இயங்கியுள்ளன. இந்த ஆக்கப்பூர்வ பணிகளை கோட்டேஸ்வரம்மா வலிந்து சொல்லவில்லை. தனது வாழ்வின் சம்பவங்களின் ஒரு பகுதியாக சொல்லி செல்கிறார்.
இயக்க பிளவுகள் மற்றும் தனக்கான துயரங்கள் வந்தபோதும், தனது குமுறல்களை வெளிப்படுத்துகிறார் தவிர அவதூறுகளை அள்ளி வீசவில்லை.நூலின் பின் இணைப்பாக தோழர் சுந்தரய்யா, ராஜேஸ்வரராவ், கந்துகூரி மற்றும பெண் ஆளுமைகள் பற்றி அவர் எழுதியுள்ளவை அவரின் பிற்கால மதிப்பீடுகள் ஆகும். உரிய முறையில் நினைவுகளை பகிர்ந்துள்ளார்.
ஒரு பெண்ணின் 100 ஆண்டுகளின் போராட்டக் களம், அளவு கடந்த வாழ்க்கை அனுபவமும், எல்லையில்லா துணிச்சலுடன் வாழந்துள்ளார். இந்த நூலை வாசிப்பதின் மூலம் வரலாற்றை பெண் விடுதலைக்கான சமரசமற்ற போராட் டத்தை இயக்கத்திற்குள் இருக்கும் போக்கு களை, இயக்க வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வ பணிகளும் அடிப்படையானது என்பதை அறிந்து கொள்ளலாம்.
பாக்கியம்