Showing posts with label Vijay Bhaskarvijay. Show all posts
Showing posts with label Vijay Bhaskarvijay. Show all posts

Sunday, January 6, 2019

லாரா ஜாக்சன் - விஜயபாஸ்கர் விஜய்

இங்கிலாந்தை சேர்ந்த லாரா ஜாக்சன் என்பர் JanuHAIRY என்னும் ஒன்றுகூடும் அழைப்பை விடுத்திருக்கிறார்.
அந்த ஒன்றுகூடலில் நோக்கம் இதுதான்.
“ ஒரு பெண்ணாக இயற்கையாக இருக்க எனக்கு உரிமை உண்டு. நான் ஏன் வேக்சிங்க் செய்து என் கால்முடி கைமுடிகளை எடுத்து அதை பளபளப்பாக வைக்க வேண்டும். அப்படியே முடியை வளர்த்துதான் இருப்பேன்”
என்கிறார் லாரா ஜாக்சன்.

அவருடைய JanuHAIRY க்கு பல பெண்கள் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
பாராட்டதக்க செயல் இது...
நம்மூரைப் பொறுத்தவரை JanuHAIRY மாதிரியான விஷயங்களை இன்னும் இருபது வருடங்கள் பிறகு செய்யலாம் என்பதே என் கருத்து.
அழகான பெண்ணா அல்லது திறமையான பெண்ணா என்று வரும் போது வெளிநாடுகளை விட நம் நாட்டில் அழகான பெண்ணுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கும் போக்கு இருக்கிறது.
அழகு என்று நான் குறிப்பிடுவது வலது சாரி ஆணாதிக்கர்கள் அழகு என்று குறிப்பிடுவதைத்தான்.
திறமையுள்ள பெண் கொஞ்சம் அழகாக தன்னை பிரெசெண்ட் செய்து கொள்ளும் போது அத்திறமையை வெளியே காட்ட வாய்ப்பு கிடைக்கிறது.
அந்த வாய்ப்பை ஏன் மறுக்க வேண்டும். இரண்டு பெண்கள் இண்டர்வியூ செல்கிறார்கள்.
அதில் ஒரு பெண்ணுக்கு இயல்பிலேயே அதிகம் முடி வளராது, கண்ணாடி அணிய வேண்டிய தேவை கிடையாது, வெள்ளையாக இருப்பார்.
இன்னொரு பெண்ணுக்கு முடி வளரும், கன்ணாடி அணிந்திருப்பார், மாநிறமாக இருப்பார்.
இந்த உலகம் நிச்சயமாக அந்த முதல் வெள்ளை, கண்ணாடி அணியாத, கைகளில் முடிவளராத பெண்ணுக்கே முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
அவருக்கு இருக்கும் சிறிய திறமை கூட அங்கே பெரிதாக பாராட்டப்படும். நம் எல்லோரிடமும் அந்த மனநிலை உள்ளே இருக்கிறதுதான்.
ஆனால் அந்த இரண்டாவது பெண்
- கண் புருவம் திருத்தி
- வேக்சிங் செய்து
- ஃபேசியல் செய்து
- ஃப்ரேம் இல்லாத கண்ணாடி அணிந்து
- சரியான உடைகளை
அணிந்தால் முதல் பெண்ணுக்கு ஈடான அழகில் வந்து விடுவார். அவருக்கான மதிப்பு சபையில், அவருடைய திறமையை வெளிப்படுத்தவாது வாய்ப்பு கிடைக்கும்.
ஆகையால் லோயர் மிடில் க்ளாஸில் இருக்கும் பெண்கள் முற்போக்கு என்று இந்த JanuHAIRY க்கு ஆதரவாய் போனால் அது அவர்களுக்குதான் இழப்பைக் கொண்டு வரும்..
உங்கள் அப்பா அம்மா படிக்கவில்லை. நீங்கள் கஷ்டப்பட்டு படித்து எம்.பி.ஏ படிக்கிறீர்கள்
உங்களுக்கு மனித வள மேம்பாடு என்ற ஹெச்.ஆர் நன்றாக வருகிறது. எப்பிரச்சனையும் சமாளிக்கும் அறிவு இருக்கிறது.
ஆனால் ஹெ.ஆர் டிப்பார்ட்மெண்ட் உள்ளே நுழைய திறமை மட்டுமா இங்கு பார்க்கிறார்கள். பேப்பர் அளவில் திறமை என்பார்கள். ஆனால் யதார்த்தில் லுக்கபிளாக நம் கம்பெனியை பெருமைப்படுத்துவதாக தோற்றம் இருக்க வேண்டும் என்பார்கள்.
அப்போது நீங்கள் அழகு வேஷம் போட மாட்டேன் என்று வாய்ப்பை இழக்க முடியாது.
ஸோ நம் நாட்டு மிடில் கிளாஸ் பெண்கள் இந்த JanuHAIRY முற்போக்குக்கு போகாமல் இருப்பதே சரியானதாகும்...
நம்மூர் ஆண்கள் மனநிலையில் வரவேண்டிய மாற்றம் இது... “ முடி இருந்தாலும் அழகுதான்” என்று ஆண்கள் நினைக்கும் வரை பெண்கள் அழகுபடுத்துதலில் கவனமாக இருக்கலாம்தாம்..
படத்தில் இருப்பது லாரா ஜாக்சன்...


Image may contain: 1 person, smiling, close-up

தீண்டாமை தொடர்கிறது - விஜயபாஸ்கர் விஜய்

கொடைக்கானல்,
புதுப்பத்தூர் கிராமத்தில் அருந்ததியர் மக்கள் பொது கிணறில் நீர் எடுத்த பிரச்சனை 2003 ஆம் ஆண்டில் இருந்தே இருக்கிறது...
இப்போதும் அங்கே அப்படித்தான் இருக்கிறதாம்... பொதுக்கிணற்றில் நீர் எடுக்க சாதிவெறி தடை இருக்கிறதாம்..
என்னதான் கோர்ட், காவல்துறை சட்டம் எல்லாம் இருந்தாலும் முடிவில் குறிப்பிட்ட சாதி மக்களே பாதிக்கப்படுகின்றனர்.
உலகம் ஒன்று நடக்காதது மாதிரி இயல்பாக நடந்து கொண்டிருக்கிறது...
No photo description available.

மழைத்துளிகள் - Vijay Bhaskarvijay

8 உருண்டையான மழைத்துளிகள்,
ஒரே அளவிலான மழைத்துளிகள் ஒன்று சேர்ந்து ஒரே துளியாய் தரையை நோக்கி வருகின்றன.
அதன் ஆரம் Radius ஒவ்வொரு சிறிய மழைத்துளிகளைக் காட்டிலும் எவ்வளவு அதிகமாக இருக்கும். படத்தைப் பாருங்கள்.
அதில் எட்டு மழைத்துளிகள் ஒரே அளவில் இருக்கின்றன. பந்து வடிவில் இருக்கும் பொருளை எதை வைத்து அளப்போம். அதன் ஆரம் Radius கொண்டு அளவு சொல்வோம்.
இங்கே ஒரு துளியின் Radius ஒரு மில்லிமீட்டர் என்று வைத்துக் கொள்ளுங்கள்.
ஒரு மில்லிமீட்டர் வைத்து எட்டு மழைத்துளிகள் ஒன்றாய் சேர்கின்றன. சேர்ந்த மழைத்துளியும் பந்து வடிவிலேயே இருக்கிறது (இருக்கும்).
அந்த பெரிய பந்து மழைத்துளிக்கு ஒரு Radius இருக்குமல்லவா?
அந்த Radius சிறிய மழைத்துளிகளான ஒரு மில்லிமீட்டர் Radius மழைத்துளிகளை விட எவ்வளவு அதிகமாக இருக்கும் ?
ஒரு மழைத்துளியின் Radius 1 mm அப்படியானால் எட்டு மழைத்துளிகள் ஒன்று சேர்ந்தால் 8mm Radius இருக்கும் என்று தோன்றும்.
கணிதத்தை தினசரி வாழ்க்கையில் பழகாதவருக்கு சட்டென்று இப்படி தோன்றலாம்.
சரி அதை விடுங்கள். கொஞ்சம் யோசித்து பாருங்கள். எட்டு ஒரே அளவிலான மழைத்துளிகள் ஒன்றாய் சேர்ந்தால் அந்த பெரிய மழைத்துளி சிறிய மழைத்துளிகளை விட எவ்வளவு பெரிதாய் இருந்து விட முடியும். கற்பனைதான் செய்து பாருங்கள்.
இதை துல்லியமாக கண்டுபிடிக்க முதலில் ஒரு மழைத்துளி உருண்டையாக எவ்வளவு இடத்தை ஆக்கிரமிப்பு செய்கிறது என்ற Volume ஐ கண்டுபிடிக்க வேண்டும்.
பந்து வடிவில் இருக்கும் ஒரு பொருளின் Volume சமன்பாடு என்ன V=4/3 π r³
இதில் π = 3.14
r = 1 mm
No photo description available.
ஒரு துளியின் Volume 4/3 x π x 1³ = 4.19 mm³
அப்படியானால்
8 துளிகளின் Volume = 4.19 mm³ x 8 = 33.52 mm³
எட்டு துளிகளையும் ஒன்று சேர்த்த பெரிய துளியின் Volume = 33.52 mm³
அதன் Radius எவ்வளவு ? இதற்கு அந்த 33.52 mm³ என்ற Volume ஐ அந்த 4/3 π r³ ஃபார்முலாவோடு ஒப்பிட வேண்டும்.
4/3 π r³ = 33.52 mm³
r = 2 mm
பெரிய மழைத்துளியின் ( எட்டு சிறிய மழைத்துளிகளை சேர்த்த) Radius 2 மில்லிமீட்டர்தான் வருகிறது.
அதாவது ஒரு சிறிய மழைத்துளியைப் போல டபுள் மடங்குதான் எட்டுதுளிகளை சேர்த்த துளி இருக்கும்.
எட்டு மாவு ஒரே மாதிரி மாவு உருண்டைகளை, பூந்தியைக் கூட சொல்லலாம், எடுத்து ஒன்றாக ஒரு உருண்டையாக உருட்டினால் அது ஒரு சிறிய உருண்டை போல டபுள் மடங்குமட்டுமே பெரிதாய் இருக்கும்.
மாவு உருண்டைகளை அழுத்துவது எல்லாம் கணக்கில் எடுக்க கூடாது. அதனால்தான் அழுத்த முடியாத நீர் துளிகளை உதாரணமாக கொடுத்தேன்.
Sphere பற்றி Mensuration பாடம் சொல்லிக் கொடுக்கும் போது இந்த கணக்கையும் சொல்லிக் கொடுக்கலாம்.
இது புத்தகத்தில் இருக்கிறதா என்று தெரியவில்லை. எனக்கு இன்றுதான் தெரியும்.

கண்டதை படித்துக் கொண்டிருங்கள் - Vijay Bhaskarvijay

நிறைய சிறுகதைகள்
நிறைய நாவல்கள்
நிறைய ஜனரஞ்சக இலக்கியங்கள்
நிறைய கட்டுரைகள்
நிறைய சமூக நீதி புத்தகங்கள்
குட்டி குட்டி குழந்தைகள் கதைகள்
நிறைய அறிவியல் கணிதம்

என்று தொடர்ச்சியாக படிக்க முயற்சி செய்து கொண்டே இருந்தால்...
படித்ததை எல்லாம் உலகில் காண ஆரம்பித்தால்
தேட ஆரம்பித்தால்
நிறைய மனிதர்களிடம் பழகிப் பார்த்தால்
அவர்கள் கதைகளை கேட்டால்
குறிப்பிட்ட காலத்தில் தினசரியை எடுத்து விரித்தால் எல்லா செய்திகளிலும் ஒரு இலக்கிய உணர்வு கிடைக்கும்...
ஒரு மாதிரி புல்லரிக்கும்.
அந்த நிலை இலக்கியமாதலில் முக்கிய கட்டமாகும்.
அன்றிலிருந்து அவனுக்கு சம்பவமே இலக்கியமாகிப் போகும்.
ஒரே ஒரு வாக்கியம் கூட இலக்கியமாகத்தான் தெரியும்.
அந்த செய்தியில் எதை நம் மனம் எடுத்துக் கொள்கிறது என்பதையும் நம் மனமே விமர்சனம் செய்யும் போது வித்தியாசமான மோன நிலைக்கு செல்வோம்.

Image result for tamil books
சமீபத்தில் பேப்பரில் ஒரு செய்தி படித்தேன்.
ஒரு மாடு பனம்பழம் ஒன்றை கடித்திருக்கிறது. அந்த பனம்பழத்தின் உள்ளே வெடிகுண்டை யாரோ வைத்திருக்கிறார்கள். அது வெடித்து மாட்டின் வாய் கிழிந்து விட்டது என்று படித்தேன்.
அதைப் படித்ததும் கலவையாக பல உணர்வுகள் ஒரே சமயத்தில் வந்தது.
ஐந்து பத்து நிமிடம் எதுவும் செய்யமுடியவில்லை.
சோபாவில் இருந்து வேகமாக எழுந்தேன். தரையில் அப்படியே மல்லாக்க படுத்து விட்டேன். உடனே அப்படியே மாட்டின் மேல் பரிதாபப்பட்டு அப்படி செய்தேன் என்று நினைக்க வேண்டாம்.
பரிதாபம் அதில் ஒரு உணர்வு.
அதைத்தவிரவும் பல பல உணர்வும் அறிவுக் கேள்விகளும் என்னை தாக்கியது.
அது எனக்குள் ஒரு பரவசத்தை ஏற்படுத்தியது.
இந்த செய்தி உன்னை பரவசமா அடைய வைக்கிறது என்று இன்னொரு பக்கம் குற்ற உணர்வும் வந்தது.
இல்லை இல்லை மாட்டின் மேல் எனக்கு அதிக இரக்கமாகத்தான் இருக்கிறது. ஆனால் இந்த பரவசம் வேறு பரவசம் என்று சொல்லிக் கொண்டிருந்தேன்.
இவையெல்லாம் ஒரு விநாடியில் மூளைக்குள் நிகழும் போது எல்லாவற்றையும் போட்டு விட்டு அப்படியே வெறுந்தரையில் படுத்து விட வேண்டும் என்றுதான் தோன்றும்.
ஒரு நல்லநாவலோ, சிறுகதையோ படித்தாலும் இப்படித்தான் ஐந்து பத்து நிமிடம் இயக்கமற்று கிடப்போம் இல்லையா?
அதே உணர்வை ஒரு வரி செய்தி கொடுக்கும் போது அது இலக்கியம்தானே..
இதைத்தான் சொல்கிறேன்...
படித்துக் கொண்டே இருந்தால் குறிப்பிட்ட சமயத்தில் செய்திக் குறிப்புகளே இலக்கியமாக தோன்றும் என்று.
ஒரு தோராயமான விதியாக குறைந்தது 35 வயதுக்கு பிறகுதான் இந்த நிலை கிட்டும் என்பது என் யூகம்.
ஸோ ஒரு வயது வரை கண்டதையும் படியுங்கள்.
சம்பவங்களே இலக்கியமாக தோன்றும் வரையாவது கண்டதை படித்துக் கொண்டிருங்கள்.

Amateur Teens திரைப்படத்தில் - Vijay Bhaskarvijay

Amateur Teens திரைப்படத்தில்,
தன் வகுப்பின் சகமாணவிகளோடு குளித்துக் கொண்டிருக்கும் லாரா என்ற மாணவியின் பெண்ணுறுப்பில் இருக்கும் ’அதிக முடியைப்’ பார்த்து தோழி ஒருவள் கிண்டல் செய்கிறாள்.
அதை கேட்டு அனைவரும் லாராவை கிண்டல் செய்கிறார்கள். வகுப்பு முழுவதும் லாராவை அதை வைத்தே கிண்டல் செய்கிறார்கள். சமயம் கிடைக்கும் போதெல்லாம் கிண்டல் செய்கிறார்கள்.
அதனாலேயே லாரா ஒதுங்கி இருக்கிறாள். யாரிடமும் சரிவர பேசுவதில்லை. அமைதியாக இருக்கிறாள்.
ஒருநாள் தன் கூடப் படிக்கும் மாணவனோடு கொஞ்சம் பழக்கம் ஏற்பட அவனை தன் வீட்டு பக்கவாட்டு சுவர் கட்டப்படாத மொட்டைமாடிக்கு அழைத்துச் செல்கிறாள்.
அவன் இவ்வளவு உயரத்தில் இருந்து நகரத்தைப் பார்க்க அழகாய் இருக்கிறது என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது லாராவைக் காணவில்லை. இப்படி அப்படி பார்த்து திரும்பினால், லாரா அந்த மாடியின் சுவர் ஒரத்தில் நின்று கொண்டிருக்கிறாள். அதுவும் இரு கண்களையும் மூடிக்கொண்டிருக்கிறாள்.
இவனுக்கு அதிர்ச்சி.
ஒரு மில்லிமீட்டர் காலை எடுத்து வைத்தாலும் ஒரு எலும்பு கூட கிடைக்காத உயரத்தில் வகுப்பில் யாருடனும் பேசாத தன்னம்பிக்கையில்லாத பெண் என்று சொல்லப்படுபவள் கேஸுவலாக கண்ணைமூடிக்கொண்டு நிற்கிறாள். இவனுக்கு உடம்பெல்லாம் நடுங்குகிறது.
“நீ வா நீயும் வந்து நின்று பார். சுகமாய் இருக்கும்” என்று அழைக்கிறாள் லாரா. இவன் தயங்கி பயந்து அதுமாதிரி அவள் கைகளைப் பிடித்து நின்று கண்ணை மூடிப்பார்க்கிறான். மிக புதுமையான வாழ்க்கை அர்த்த அனுபவமாக அவனுக்கு இருக்கிறது.
லாராவைப் புகழ்கிறான். உன்னுடைய இந்த தைரியமும் வாழ்க்கை ரசனையும் மற்றவர்களுக்கு தெரியாமல் இருக்கிறதே என்று வருந்துகிறான். லாராவுக்கு அவன் மேல் ஒரு ஈர்ப்பு முதன்முதலாக வருகிறது.
ஒருநாள் அவனுக்கு ஏதோ இனிப்பு செய்து கொண்டு அல்லது வாங்கிக் கொண்டு அவன் அறைக்குச் செல்கிறாள். அவனை மொட்டைமாடி பார்க்கப் போகலாமா என்று அழைக்கிறாள். அவன் டிவியில் விளையாட்டு இருக்கிறது நண்பர்களுடன் பார்க்கப் போகிறேன் என்னால் மொட்டைமாடிக்கு வரமுடியாது என்கிறான்.
”சரி உன்னுடன் மட்டும்தான் அந்த மொட்டைமாடி உணர்வை பகிர்ந்து கொள்ளமுடியும் என்று நினைத்தேன். நீ வரவில்லை என்கிறாய்” என்ற அர்த்தத்தை வெளியில் சொல்லாமல் மவுனத்தில் பொதிந்து அந்த இனிப்பை அவன் கைகளில் திணித்து வராண்டாவில் நடக்கிறாள் லாரா.
“நீயும் என் ஆண் நண்பர்களுடன் சேர்ந்து டிவி பார்க்கிறாயா “ என்று அவன் அழைக்க லாரா ஒத்துக் கொள்கிறாள். அங்கே அவர்கள் ஆதரிக்கும் நாடு விளையாட்டில் ஜெயித்து விடுகிறது. உடனே குதியாட்டம் போடுகிறார்கள். வெற்றியைக் கொண்டாட அவன் அப்பா வைத்திருக்கும் போதையேற்றும் மதுவை பகிர்ந்து அனைவரும் குடிக்கிறார்கள். குடிக்கும் போது அதற்குள் ஏதோ மாத்திரை வேறு போடுகிறார்கள்.
இப்போது அவன் லாராவை முத்தமிடுகிறான்.
அதைத்தொடர்ந்து இன்னொருவன் முத்தமிடுகிறான். பின் ஒருவன் லாராவின் ஸ்கர்ட்டை அவிழ்க்க முயற்சி செய்கிறான். லாரா எதிர்க்கிறாள். ஆனால் அவளை வல்லுறவு செய்கிறார்கள். ஐந்து பேரும் ஒவ்வொருவராய் செய்கிறார்கள்.
அதில் ஐந்தாம் நபராக வல்லுறவு கொள்ளும் பையன் அதற்கு ஒருவாரம் முன்பு அவன் காதலி மாணவியோடு உறவு கொள்ள முடியாமல் திணறியவன்.
முதன்முறை என்பதால் அவனால் சரிவர செய்ய முடியவில்லை. அதைத் திருத்தி செய்ய இந்த வல்லுறவை அவன் ஆழ்மனம் உபயோகப்படுத்திக் கொள்கிறது.
அவனை அப்போது கிண்டல் செய்த ”ஐந்தாம் முறை உறவு கொண்டவனின்” காதலி த்ரில்லுக்காக இரண்டு நபர்களிடம் உறவு கொண்டு கர்ப்பமாகிறாள்.
லாரா கதைக்கு வருவோம்.
லாராவை ஐந்து பேர் வல்லுறவு கொண்ட கதை குரூப் செக்ஸ் என்று கவர்ச்சியான அம்சமாக வகுப்புக்குள் பரவுகிறது. லாராவின் ஆசிரியை லாராவிடம் விசாரிக்கிறார்.
லாரா சொல்கிறாள்,
“இது வேண்டுமென்றே நடந்தது கிடையாது. ஆனால் மிக மோசமான வலியைக் கொடுத்த சம்பவம். இதற்காக நண்பர்களை என்ன செய்ய வேண்டுமென்று தெரியவில்லை. அனைவரும் போதையில் இருந்தோம். நானே என் பிரச்சனையை பார்த்துக் கொள்கிறேன்” என்கிறாள்.
ஆசிரியையால் எதுவும் சொல்ல முடியவில்லை.
இன்னொரு கர்ப்பமான மாணவி பஸ்ஸை பிடித்து கர்ப்பம் கலைக்க ஒரு மருத்துவமனைக்கு செல்வதாக படம் முடிகிறது. பின்னனியில் தைரியமாக பிரச்சனையைப் பார் என்ற பதத்தில் ஒரு பாடல் ஒலிக்கிறது.
தொலைத்தொடர்பு வசதி, மீடியா, சோசியல் நெட்வொர்க் போன்ற பல விஷயங்கள் டீன் ஏஜ் பருவத்தினரிடம் அதீதமான செக்ஸ் கலாச்சாரத்தை கற்பித்துக் கொண்டே இருக்கிறது.
செக்ஸைப் பற்றி அதிக நேரம் சிந்தித்துக் கொண்டே இரு என்று ஏதோ ஒரு உருவத்தில் அவர்களை கட்டாயப்படுத்திக் கொண்டே இருக்கிறது.
இது அவர்கள் வாழ்க்கையை பாதிக்கிறது.

Image may contain: one or more people and close-up
1.சிலருக்கு இளம் வயதிலேயே சுகமும், த்ரில்லும் கிடைக்கிறது. ஆனாலும் அதற்கடுத்த சுகத்தை மனம் தேடுகிறது. சாதரண செக்ஸ் முடிந்ததும், அவர்கள் குரூப் செக்ஸைப் பற்றி பேசிக் கொள்கிறார்கள். இந்த இளவயதில் எளிதாக கிடைக்கும் செக்ஸ் என்பது அவர்களுடைய ஒரு அழகான கற்பனை செக்ஸ் உலகை அழித்து விடுகிறது என்றும் எடுத்துக் கொள்ளலாம்.
2.செக்ஸின் மீதான ஆர்வம் மிதமாக இருப்பவர்களை இந்த செக்ஸ் கலாச்சாரம் பயமுறுத்துகிறது. நாமும் இவர்கள் ஒடும் ஒட்டத்தை ஒடிவிடுவோம். அல்லது நடிக்கவாவது செய்வோம் என்ற ரீதியில் இயங்கும் ஆண் பெண் மனங்கள்.
3.சிலருக்கு அதனால் அவமானம் ஏற்படுகிறது. லாரா தன் உறுப்பில் அதிக முடி வைத்து அவமானப்பட்டது போல
,ஒரு மாணவன் தன் சகமாணவியுடன் சரியாக இயங்க முடியாதது பற்றி வருத்தப்பட்டது போல. ஒரு செக்ஸ் கிளப்புக்கு ஆசையாக செல்லும் டீன் ஏஜ் மாணவர்கள், அங்குள்ள செக்கியூரிட்டிகளால் அவமானப்படுத்துபடும் காட்சி கூட அதைத்தான் சொல்கிறது.
4.சிலருக்கு உடலும் மனமும் சிதையும் வாய்ப்பு ஏற்படுகிறது. லாராவின் மீதான் வல்லுறவு. ஒரு பெண் கர்ப்பமாகிறாள். அதைத் தொடர்ந்த மன உளைச்சல். உடல் உளைச்சல். குறிப்பாக பெண்களுக்கு.
இப்படியாக அதீத காமம் என்பது டீன் ஏஜ் பிள்ளைகள் மேல் கொட்டப்படுகிறது. அதையெல்லாம் கட்டுப்பாடுகள் விதித்து தடுக்க முடியுமா? தடுக்க வேண்டுமா? தகவல் தொடர்பும், டெக்னாலஜியும் அதிகரித்த இவ்வுலகில் அதெல்லாம் சாத்தியமா? என்ற கேள்வி வருகிறது.
எந்தக் கட்டுபாடும் விதிக்க வேண்டாம். இந்த அதீத செக்ஸ் பொழிவை டீன் ஏஜ் பருவத்தினர் சந்திக்கட்டும். சந்தித்து அவர்களாகவே அதை சமாளிக்கு வித்தையை கற்றுக் கொள்ளட்டும். அதோ லாரா எடுத்தாளே ஒரு முடிவு, கர்ப்பம் கலைக்க அவளாகவே மருத்துவமனையை நோக்கிச் சென்றாளே ஒரு பெண் அவர்களைப் போன்று அவர்கள் பிரச்சனையை அவர்களே சமாளிக்கும் தைரியத்தையும் ஆதரவையும் மட்டும் கொடுத்தால் போதும்.
மற்றபடி கட்டுபாடுகள் என்பது அர்த்தமற்றவை
உடலை முன்னிட்டு பல மனக்குழப்பம் என்பதை டீன் ஏஜில் பிள்ளைகள் பட்டே தெரிந்து கொள்ளட்டும். அதுதான் அவர்களுக்கு நீண்ட பலனைக் கொடுக்கக் கூடியது
என்கிறார் இயக்குனர் என்பதாக நான் புரிந்து கொண்டேன்.
நான் ஒரு திரைப்பட ரசனையாள ஸ்பெசலிஷ்ட் இல்லை.
எனக்கு நல்ல படமாக தெரிந்தது.
மற்றவர்களுக்கு எப்படியோ தெரியவில்லை.

Sunday, December 30, 2018

வயல்காட்டு இசக்கி - விஜய் பாஸ்கர்விஜய்

Pioneer என்றால் முதலில் கண்டுபிடித்தது, முதலில் செய்தது... இப்படி முதலில் யார் தொடங்கியது என்ற அர்த்தமாகும்...
வயல்நிலப் பிரச்சனை ஒன்றை நண்பர் விளக்கிக் கொண்டிருந்தார்.
”நீங்கள் நகரத்தில் இருக்கிறீர்கள். ஊரில் உங்கள் நிலத்தில் பிரச்சனை செய்வதே உங்கள் சொந்தங்கள் என்கிறீர்கள். யார் உங்களுக்கு ஊர் தகவலை இவ்வளவு அக்கறையாக சொல்கிறார்கள்” என்று கேட்டேன்.
“காலம் காலமாக பரம்பரை பரம்பரையாக எங்கள் வயலை கவனித்துக் கொள்பவர் அதை சொல்லுவார். அவருக்கு வயல் மேல் அதிக ஆர்வம். அதுதான் அவர் உலகம்” என்றார்.
பரம்பரை பரம்பரையாக தனக்கென்று சொந்த வயலே இல்லாமல் உழைப்பை எல்லாம் கூலிக்கு கொட்டி வேலை செய்து வந்தாலும்,
வயல் நிலத்தை சொந்தம் கொண்டாடுபவர்களால் சுரண்டுப்பட்டாலும் அந்த உழவுத்தொழில் மேல் இருக்கும் ஆர்வமும் நிலத்தை முதலாளிக்காக காக்க வேண்டும் என்ற ஆர்வமும் மிகுதியானது.
அது ஒரு குணமாக பரம்பரை பரம்பரையாக வளர்த்து எடுத்துக்கப்பட்டிருக்கிறது...
அ.கா பெருமாள் எழுதிய ”வயல்காட்டு இசக்கி” என்ற கட்டுரையில் ஒரு சம்பவத்தை சொல்கிறார்.
வயல்காட்டில் இருக்கும் இசக்கி பற்றிய கதை.
கூலி வேலை செய்யும் பெண் தன் குடிசை வெளியே வயலைப் பார்க்கிறார்.
மழை பெய்து கொண்டிருக்கிறது. வயலுக்கு தெற்கே உள்ள குளம் ஒன்று நிறைந்து தளும்பிக் கொண்டிருக்கிறது.
குளம் உடைந்தால் குடிசைக்கு ஒன்றுமில்லை. அது மேட்டில் இருக்கிறது. ஆனால் வயலுக்கு பிரச்சனை.
விளைந்தது எல்லாம் மூழ்கிவிடும். எப்படியாவது வயல் தானியத்தை காப்பாற்ற வேண்டும் என்று நினைத்த அப்பெண் தன் சிறு மகனை குடிசையில் வைத்து விட்டு மண்வெட்டியை எடுத்துக் கொண்டு குளத்தின் அந்த பக்கம் உடைத்து விடப் போனாராம்.
அப்பக்கம் உடைத்தால் நீர் ஆற்றில்தான் போய் கலக்கும். வெள்ளம் வராது.
அப்படி கொத்தி குளக்கரையை உடைக்கும் போது வெள்ளம் பெருக்கெடுத்து அப்பெண்ணையும் அடித்துச் சென்றது.
மறுநாள் காலை கணவன் வந்து மனைவியைப் பார்த்தால் வெள்ளத்தால் அடிபட்டு இறந்து கிடக்கிறார் மனைவி.
மனைவியை கட்டிக்கொண்டு அழும் போது அவர் மேடான வயிற்றை தடவி தடவி அழுதாராம் கணவன்.
அப்போது வயிற்றில் குழந்தை இருந்தது அதன் பிறகுதான் ஊருக்கு தெரிந்திருக்கிறது.
வயிற்றுப்பிள்ளையோடு இறந்தப் பெண்ணை ஆற்றுப்படுத்த அவரை அம்மனாக்கி பூஜை செய்து வருகிறார்களாம்.
அதுதான் வயல்காட்டு இசக்கியின் கதை.
- முதலாளிகளுக்கு விசுவாசமாக வேலை செய்ய வேண்டும்.
- ஏன் எதற்கு என்று கேட்காமல் கூலி எதிர்பாராமல் வேலை செய்ய வேண்டும்.
- பரம்பரை பரம்பரையாக வேலை செய்ய வேண்டும்.
- உயிரைக் கொடுத்தாவது, வயிற்றில் குழந்தை இருந்தால் கூட உயிரைக் கொடுத்து வேலை செய்ய வேண்டும்.
இதெல்லாம் அக்காலத்தில் வயலில் கூலி வேலை செய்யும் மக்களின் உணர்வில் ஊறி இருந்தது.
கூலி வேலை செய்பவராக பிறந்தாலே இதையெல்லாம் செய்துதான் ஆகவேண்டும் என்று நம்பிக் கொண்டிருந்தார்கள்.
இப்படி பரம்பரை பரம்பரையாக வயலை வைத்திருக்கும் முதலாளிகளுக்கு பரம்பரை பரம்பரையாக வேலை செய்து கொடுக்க வேண்டும் என்ற அழுத்தமான எண்ணம்.

Related image
இப்படி எத்தனை லட்ச மக்கள் இருந்திருப்பார்கள்.
அவர்களிடம் எல்லாம் சென்று
“இல்லை நீங்கள் தொழிலாளி அவர் முதலாளி அதுதான் உங்கள் இருவருக்கும் உள்ள தொடர்பு. நீங்கள் அடிமை இல்லை. தொழிலாளர்களுக்குள்ள உரிமை அனைத்தும் உங்களுக்கு உண்டு என்று தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்து பேசி பேசி, புரிய வைத்து அவர்களை பெருந்திரளான போராட்ட சக்தியாக மாற்றுவது எவ்வளவு கடினமான வேலை.
அப்படி பெருந்திரளாக்க எத்தனை பேர் கஷ்டப்பட்டிருப்பார்கள்.
எவ்வளவு தியாகம் செய்திருப்பார்கள்.
அடித்தட்டு மக்களை அறிவான அறிவாக விழிப்படைய வைக்கும் கலையை முதலில் தொடங்கி வைத்தது அவர்கள்தாம் என்று நம்புகிறேன்.
கொஞ்சம் தகவலை தெரிந்து கொண்டு உலகைப் பார்க்கும் எளிய அறிவுடையவனாக
இதைத்தான் கம்யூனிஸ்டுகளின் முக்கியமான
சிறப்பான பங்களிப்பாக பார்க்கிறேன்.

கிரிஞ் மலை கிறிஸ்துமஸ் விழா - விஜய் பாஸ்கர்விஜய்

Grinch கதையில்
கிரிஞ் மலையில் இருந்து கொண்டு ஊரார் கொண்டாடும் கிறிஸ்துமஸ் விழாவை கெடுக்கிறான்.
அவர்கள் கொண்டாடும் விழாப் பொருட்களை திருடி வந்து விடுகிறான்.
ஏன் கிரிஞ் இப்படி ஊரார் மேலே கடுப்பாய் இருந்தான் என்றால் சிலர் காரணமே இல்லாமல் என்கிறார்கள்.
பலர் கிரிஞ்சை ஒருகாலத்தில் ஊரார் அவமானப்படுத்திவிட்டார்கள், அடித்து துரத்தி விட்டார்கள் அதனால்தான் அவன் அப்படி செய்கிறான் என்கிறார்கள்.
அமெரிக்கா ஐரோப்பா போன்ற வளர்ந்த நாடுகளில் ”திகைத்திருக்கும் தனிமனிதன்” தான் மிகப்பெரிய பாதுகாப்பு பிரச்சனையாக இருக்கிறான்.
ஏதோ ஒரு வெறுமையில், எரிச்சலில், கடுப்பில் எந்திர துப்பாக்கியை எடுத்து வந்து தன் பள்ளியில் சுட்டு விடுகிறார்கள்.
சட்டு சட்டென்று பத்து பதினைந்து உயிர்கள் விநாடி நேரத்தில் இல்லாமல் போய்விடுகின்றன.
இதனாலே அங்கே “மனநலம்” பற்றி அதிகம் பேசுகிறார்கள்.
அந்த மனநலம் பிரச்சாரத்தை அரசே முன்னெடுப்பதின் முக்கிய நோக்கம் தனிமனிதர்களின் நன்மையா? இருக்கலாம்.
தனி மனிதர்கள் மேல் அரசு அக்கறை எடுக்கலாம். ஆனால் அதை விட நன்மை சமூகத்துக்குதான்.
அவர்கள் ”திகைத்திருக்கும் தனிமனிதன்” ஆக ஆனால் அது சமூகத்துக்கு கேடு.
கிரிஞ்சால் சமூகத்துக்கு பாதிப்பு ஏற்படுத்த முடிகிறது.
”திகைத்திருக்கும் தனிமனிதன்” னால் சமூகத்துக்கு பாதிப்பு ஏற்படுத்த முடிகிறது.
அப்படியானால் குறிப்பிட்ட சமூக மக்களால் இன்னொரு சமூக மக்களுக்கு எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்த முடியும்.
இஸ்ரேல் பாலஸ்தீனப் பிரச்சனை என்கிறோம்...
இஸ்ரேல் ஜனக்தொகை - 88 லட்சம்
பாலஸ்தீன் ஜனத்தொகை - 44 லட்சம்.
இஸ்ரேலுக்கு மும்பை அளவு ஜனத்தொகைதான். பாலஸ்தீனத்துக்கு சென்னை அளவு ஜனத்தொகைதான். ஆனால் சண்டை என்று முட்டிக்கொள்ளும் போது எவ்வளவு கொடூரமான விஷயங்கள் அங்கே நடைபெறுகின்றன.
இலங்கை பிரச்சனையின் கொடூரம் அறியாதவரே இருக்க முடியாது. புள்ளிவிபரம் இலங்கை தமிழர் ஜனத்தொகை முப்பது லட்சத்துக்குள்தான் என்று சொல்கிறது.
இவ்வுலகில் எங்கெல்லாம், எந்த நாட்டில் எல்லாம் சண்டை நடக்கிறதோ அங்கெல்லாம் யார் கோபப்படுகிறார்கள் என்று பாருங்கள். அங்கே ஜனத்தொகையில் சிறுபான்மை மக்களாக இருப்பவர்கள்தான் கோபப்படுவார்கள்.
அவர்கள் என்ன சும்மா கோபப்படுகிறார்களா என்ன ? இலங்கை தமிழர்களும், பாலஸ்தீனர்களும் சும்மாவா கோபப்பட்டார்கள், படுகிறார்கள்.
இல்லை. தொடர்ச்சியாக பெரும்பான்மை மக்கள் அவர்கள் மேல் வைக்கும் உரிமை மறுப்பு, அழுத்தம், அவமானம், வலி எல்லாம் சேர்ந்து அப்படியான நிலைக்கு அவர்களை தள்ளுகிறது.
சிறுபான்மையினரை மதித்தல், அல்லது அவர்களுக்கு சில விஷயங்களை விட்டுக் கொடுத்தல் என்பது அவர்கள் மேல் பாசம், அன்பு, சகோதரத்துவம் என்பதை விட அது சமூகத்துக்கு நல்லது என்பதுதான் நாம் அடைய வேண்டிய முக்கிய புரிதல்.
ஒரு கல்லூரி இளைஞராக உங்களுக்கு சண்டை, பிரச்சனை எல்லாம் கேட்க சுவாரஸ்யமாகவும், சவாலாகவும் இருக்கலாம். ஆனால் ஒவ்வொரு நாட்டில் நடக்கும் பிரச்சனைகளை அருகில் சென்று பார்த்தால் அங்கே மக்கள் எவ்வளவு நிம்மதி இல்லாமல் இருக்கிறார்கள் என்று தெரியும்.
அவர்கள் எல்லோருமே முதலில் நீங்கள் சொல்வது மாதிரி “ துலுக்கனைப் பாரு, பாவாடைகளை பாரு” என்று சிறுபான்மையினரை அவமானப்படுத்துவதில்தான் ஆரம்பித்திருப்பார்கள்.
வேறு வழியில்லாமல் சிறுபான்மை சமூகம் பதிலுக்கு செயலாற்ற வேண்டியது வரும் போது அந்த அந்த நாடே வன்முறைக்காடாகி விடும்.
சிறுபான்மையினர் நலம் பேணுதல் என்பது அவர்கள் நலத்துக்காக இல்லை. அது சமூக நலத்துக்காக என்பதை புரிந்து கொண்டால் மட்டுமே இந்தியா அம்பேத்கர் கண்ட இந்தியவாக இருக்கும்.
இங்கே அன்பு யாருக்கும் தேவையில்லை. அடிப்படை நாகரிகம் போதும்...
சிறுபான்மையினரை இங்கே யாரும் கொஞ்ச வேண்டாம்..
அடிப்படை நாகரிகத்துடன் அவர்களுடன் நடந்து கொண்டால் போதும்.
தமிழக அரசு தொடர்பு நிறுவனமான ஆவின் பால் பாக்கட் கவரை பாருங்கள்.
வரவேற்கத்தக்க செயல் இது...
தமிழக கிறிஸ்தவர்கள் மேல் அரசாங்கத்துக்கு அவ்வளவு பாசமா என்ன?
இல்லை...
ஆனால் தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக இருக்க இது சம்பிரதாயம், பண்பாடு..
எல்லோரும் வசதியாக இருக்க ஒரு ஏற்பாடு...
இந்தக் கருத்தை சரியாக உள்வாங்கிக் கொண்டு
கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் ஆசிரியர்கள் மாணவர்களிடத்தில் தொடர்ச்சியாக உரையாடினால்
ஒரளவுக்கு
மத அடிப்படைவாதிகளிடம் இருந்து இளைஞர்களை காப்பாற்றலாம்...

No automatic alt text available.

Saturday, December 29, 2018

ஒஹ்ஹ் - விஜய் பாஸ்கர்விஜய்

சினிமாவில்
பயந்து ஒஹ்ஹ் என்னும் காட்சிகளில் ஒரு அலறல் சத்தம் கேட்கும்
கவனித்திருக்கிறீர்களா?
கொஞ்சம் க்ரீச் குரல் கலந்த சத்தமான ஆஹ்ஹ் என்ற குரல். இந்த லின்க்கை திறந்து நடுவில் அழுத்தினால் கேட்கலாம்
இதை Wilhelm scream effect என்கிறார்கள்.
http://www.wilhelmscream.net/
இது இல்லாமல் ஒரு திரைப்படத்தை எடுக்கவே முடியாது. அதிர்ச்சி கலந்த அலறலை இந்த குரலில் மூலமாக மட்டுமே சொல்லமுடியும்.
இன்று வரை இந்த Sound effect கண்டுபிடித்தது யாரென்று தெளிவாக சொல்லமுடியவில்லை.
முதன் முதலில் இதை 1951 ஆம் ஆண்டு Distant Drums என்ற திரைப்படத்தில் உபயோகப்படுத்தி இருக்கிறார்கள்.
ஆற்றை நடந்து கடக்கும் போர்வீரர்களில் ஒருவனை நீரின் அடியில் இருந்து இழுக்கும் முதலை. https://www.youtube.com/watch?v=dc5F2C0CYlA
அப்படி இழுக்கும் போது அவன் அதிர்ச்சியில் அலறும் போது இந்த Wilhelm scream effect ஐ முதலாக உபயோகித்திருக்கிறார்கள்.
ஆனால் 1951 யில் மக்கள் மத்தியிலோ, ஊடகங்களிலோ இது பிரபலம் ஆகவில்லை.
யாரும் இதை கண்டுகொள்ளவில்லை.
அடுத்து 1953 யில் The Charge at feather river
https://www.youtube.com/watch?v=q3-Y8eTaMZc
திரைபடத்தில் இந்த Wilhelm scream effect அடுத்தடுத்து உபயோகித்திருக்கிறார்கள்.
அப்போதுதான் மக்கள் “அட இது என்னது வித்தியாசமா ஆனா பொருத்தமா” என்று அடையாளம் கண்டு வியந்திருக்கிறார்கள்.

Image may contain: text
The Charge at feather river படம் வரும் வரை Wilhelm scream effect க்கு எந்த பெயருமே கிடையாது.
அந்தப் படம் வந்து மக்கள் கவனம் பெற்ற பிறகு அப்படத்தில் அலறும் கேரக்டரான Private Wilhelm பெயரையே இந்த சிறப்பு ஒலியின் பெயராக ஆக்கிவிட்டார்கள்.
இப்போதுவரை இந்த Wilhelm scream effect இல்லாமல் பெரும்பான்மையான படங்களை எடுக்க முடியாது என்பதுதான் இவ்வொலியின் சிறப்பாகும்...

Friday, December 28, 2018

டேனியலும் ஆடும் சிறார் கதை - விஜய் பாஸ்கர்விஜய்

உயரமான மலையடிவாரத்துல
இருக்கிற ஒரு சின்ன டவுன். சரியா.
கற்பனை பண்ணிக்க.
அங்க டேனியல்னு ஒரு பையன்.
டேனியல் என்ன படிக்கிறான். பத்தாங் கிளாஸ் படிக்கிறான்.
டேனியல் இப்ப மலைல ஏறுறான்.
ஸ்கூல் யூனிஃபார்ம்ல ஸ்கூல் நேரத்துல ஏன் டேனியல் மலைல வளைஞ்சு வளைஞ்சு போறான்.
ஏன் போறான்னா அவனுக்கு ஸ்கூலுக்கு போக இஷ்டமில்ல.
ஏன் இஷ்டமில்ல. ஏன்னா அவன் வகுப்ப கவனிக்கலன்னு வாத்தியார் அவன திட்டிட்டாரு.
அதனால நாலு நாளா அவன் ஸ்கூலுக்கு போகாம மலைல ஏறி ஊர் சுத்திட்டு வீட்டுக்கு போயிருவான்.
அன்னைக்கு டேனியலுக்கு ரொம்ப சோகமா இருக்கு. இனிமே உயிர் வாழக்கூடாது செத்து போகனும் அப்படின்னு சொல்லிட்டு மலை உச்சில ஏறுறான்.
குதிக்க போகும் போது
“ எனக்கு ஒரு உதவி பண்ண முடியுமா”
அப்படின்னு ஒரு குரல் கேக்குது.
அது ஒரு செம்மறி ஆடு.. Wool Sheep. கம்பெளி கொடுக்குமே அந்த ஆடு.
“என்ன உதவி” டேனியல்.
“உன்னப் பொறுத்தவரை இது கெட்ட நாளா இருக்கலாம். ஆனா என்ன பொறுத்தவரை இது நல்ல நாள். நான் கொண்டாட்டத்துல இருக்கேன். நீ என்னோட வந்து அதுல கலந்துக்க முடியுமா. கலந்துகிட்டு நீ செத்துப் போ நா தடுக்க மாட்டேன்”
டேனியலும் செம்மறி ஆடு கூட போறான்.
அங்க குகைல நிறைய பழங்கள், உணவுகள் எல்லாம் இருக்குது.
“உன் பேரு என்ன”
“டேனியல்”
“சாப்பிடு டேனியல்”
“என்ன கொண்டாட்டம் உனக்கு. காரணம் என்ன”
“என்ன என் முதலாளி ஏத்துகிட்டார் டேனியல்”
“நீ என்ன தப்பு பண்ணின”
“நான் ஒரு கம்பளி கொடுக்கும் ஆடும். என் உடல்ல வளர்ற கம்பளிய என் முதலாளி எடுத்து விலைக்கு வித்திருவாரு. அதுல அவருக்கு வருமானம் கிடைக்கும்”
“ம்ம்ம்”
“ஒருநாள் நினைச்சேன். நான் ஏன் இவருக்கு என் உடம்புல உள்ள கம்பளியை கொடுக்கனும். அப்படி சொல்லிட்டு அவருக்கு தெரியாம மலைல ஒளிஞ்சிகிட்டேன்”
“உன் முதலாளி தேடலியா”
“தேடுனாறு. நான் ஒளிஞ்சிகிட்டேன்”
“உன்ன மத்த விலங்குகள் தொரத்தலியா”
“நாலு நாள் சமாளிச்சிட்டேன். அப்புறம் ஒரு காட்டுநாய் ஒண்ணு தொரத்திச்சு. ஆனா தப்பிச்சிட்டேன்”
“அப்பவாவது நீ முதலாளிகிட்ட போக வேண்டியதான”
“முதலாளி திட்டுவாருன்னு போகல”
“ம்ம்ம்”
“கொஞ்ச நாள் போச்சு. மறுபடி போகலாம்னு நினைச்சேன் போகல. முதலாளியோட நண்பர்கள் எல்லாம் கிண்டல் பண்ணுவாங்களோனு நினைச்சி போகல”
“ம்ம்ம்”
“அடுத்து எனக்கே என் மேல வெக்கமா இருந்துச்சி. இப்படி முதலாளிக்கு துரோகம் பண்ணுறியோன்னு நினைச்சி போகல”
“ம்ம்ம்”
“இப்படி ஒவ்வொன்னா கற்பனை பண்ணிகிட்டு மலையே தங்கிட்டேன்”
“ஒஹ்”
“அப்ப எனக்கு உடம்புல கம்பளி அதிக வளந்து போச்சு. என் எடைய விட அதிகமா கம்பளி வளந்து போச்சு.என்னால அத தூக்கிட்டு நடக்கவே முடியல.”
“என்ன பண்ணின”
“இப்ப போனா உனக்கு வசதி இல்லாம இருக்கும் போது மட்டும் வர்றியான்னு முதலாளி கேட்டிருவாரோன்னு நினைச்சி போகல. அப்படியே நடக்க முடியாம குகைல அடைஞ்சி சோர்ந்து கிடந்தேன்”
“ம்ம்ம்”
“ஒருநாள் தற்செயலா மலை உச்சிக்கு வந்த என் முதலாளி என்ன அடையாளம் கண்டுகிட்டு “செல்லம் நீ இங்க இருக்கியான்னு என்ன வந்து அப்படியே அணைச்சிகிட்டார்”
“ம்ம்ம்”
“முதலாளி என்ன வாஞ்சையா அணைச்சிக்கும் போது எனக்கு கண்ணீரா வருது. நா ஏங்கி ஏங்கி அழுறேன். முதலாளியும் அழுறார். என்கிட்ட உனக்கு என்ன வெக்கம். நா உன்ன என்ன நினைக்கப் போறேன் அப்படின்னாரு”
“ம்ம்ம்”
“அப்புறம் வண்டில வெச்சி என்ன கீழ கூட்டிட்டு போய் உடம்புல உள்ள கம்பளி எல்லாம் எடுத்து என்ன இலகுவாக்கி விட்டார் டேனியல்”
“கேக்கவே நல்லா இருக்கு”
“நீ உன் கதையை சொல்லு டேனியல்”

Image result for boy and sheep
டேனியல் அவன் கதையை சொன்னான்.
”நீயும் என்ன மாதிரியே நினைச்சிட்டு ஸ்கூலுக்கு போகாம இருக்காத டேனியல். இன்னைக்கு போகாதத்துக்கு வெக்கபட்டு நாளைக்கு போகாம இருந்து, நாளைக்கு போகாம இருந்ததுக்கு வெக்கப்பட்டு நாளன்னிக்கு போகாம இருந்துட்டு இப்படி நீ இருந்தா அப்புறம் வாரக்கணக்குல ஸ்கூலுக்கு போகாம போயிருவ. அப்புறம் இனிமே படிப்பே வேணாம்னு சொல்லிருவ”
“அப்ப என்ன ஒண்ணும் சொல்ல மாட்டாங்களா. நா தப்பு பண்ணலியா” இது டேனியல்
“நீ ஒரு தப்பும் பண்ணல டேனியல். அப்படியே தப்புன்னாலும் இது மன்னிக்க முடியாத தப்பு இல்ல. அதுக்கு பயந்து ஸ்கூலுக்கு போகாம இருக்காத டேனியல். போ உன் வாத்தியார் உன்ன ஒண்ணுமே சொல்ல மாட்டார்”
செம்மறி ஆடு இப்படி சொன்னதும் டேனியல் மனசு லேசாகி தைரியமா அவன் ஸ்கூலுக்கு போறான்.
அன்னைக்கே மதியம் இரண்டு மணிக்கே போறான்.
வாத்தியார் முன்னாடி போய் நிற்கிறான்.
வாத்தியார் டேனியலப் பாக்குறார்.
ஏன் வரல எதுக்கு வரலன்னு எதுவும் கேக்கல
அன்பா பாக்குறார்.
ஒண்ணுமே சொல்லல.
“போ டேனியல் உன் இடத்துல உக்காந்து க்ளாஸ கவனி” அப்படிங்கிறார்.
டேனியல் சந்தோசமா போய் க்ளாஸ் கவனிக்கிறான்.
இவ்வளவு சின்ன விசயத்த ரொம்ப கற்பனை பன்ணிகிட்டு ஸ்கூலுக்கு போகாம இருந்தோமேன்னு நினைச்சி வெக்கப்படுறான்.
அவனுக்கு அறிவு கொடுத்த மலை உச்சி செம்மறி ஆட்டுக்கு நன்றி சொல்றான்.
தன் கம்பளி எல்லாத்தையும் எடுத்து தன்னோட பாரத்தை எல்லாம் ஒரு விநாடில நீக்குன தன்னோட க்ளாஸ் சாருக்கும் மானசீகமா நன்றி சொல்றான்.
பக்கத்துல நிக்கிற வேப்பரம் மரம் காத்துல அசைது,
வேப்ப மரக்காத்து,
செம்மறி ஆடு அட்வைஸ்,
வாத்தியாரோட கனிவு
எல்லாம் சேர்ந்து டேனியல் சுகந்தமா அத அனுபவிக்கிறான்...
அதோட கதை முடியுது சரியா...
#டேனியலும் ஆடும் சிறார் கதை...

மாட்டு அரசியல் - விஜய் பாஸ்கர்விஜய்

உத்திரபிரதேசம் மாநிலம்
அலிகார் நகரில் உள்ள இக்லஸ் (Iglas) என்னுமிடத்தில் ஆதரவற்ற மாடுகளின் தொல்லை அதிகமாக இருக்கிறதாம்.
விவசாய பூமியான இக்லாஸில் உபயோகமில்லாத மாடுகளை தெருவில் விட்டு விடுகிறார்கள்.
வட இந்தியா முழுவதும் இப்படி தெருவில் விட்டு விடுவதுதான் வழக்கமாக இருக்கிறது.
அப்படி தெருக்களில் விடப்படும் ஏராளமான மாடுகளால் அங்குள்ள மக்கள் தொல்லை அனுபவிக்கிறார்கள்.
தொல்லை தாங்க் முடியாத மக்கள் மொத்தம் 800 மாடுகளை அங்குள்ள அரசுப் பள்ளிகள் காம்பவுண்ட் உள்ளேயும், வகுப்பறையும் உள்ளேயும் கட்டி வைத்து போய்விட்டார்கள்.
காலையில் வந்து பார்த்த மாணவர்களும் ஆசிரியர்களும் அதைப் பார்த்து திகைத்திருக்கின்றனர்.
பள்ளிகளுக்கு வேறு வழியில்லாமல் விடுமுறை விட்டிருக்கிறார்கள். காவல்துறையும் கலெக்டரும் இது அரசியல் என்கிறார்கள்.
ஆனால் பொதுமக்களோ இப்படி திரியும் மாடுகளை எடுத்துச் செல்லுங்கள் என்கிறார்கள். இதில்லாமல் சில மாடுகளை அங்கே உள்ள மக்கள் உயிருடன் புதைத்திருக்கின்றனர்.
போஸ்ட் மார்டம் ரிப்போர்ட்டில் மூச்சு திணறி மாடுகள் இறந்ததாக வந்திருக்கிறது.
https://timesofindia.indiatimes.com/…/articles…/67277967.cms
 Image may contain: one or more people, people standing, people walking and text

மாடுகளை கொல்லக் கூடாது அது மதத்தின் படி மகா பாவம் என்று சொன்ன மக்கள் இன்று மாடுகளை உயிருடன் புதைக்கும் நிலைக்கு வந்திருக்கிறார்கள்.
உணவு சங்கிலி, ஒரு நாட்டில் உள்ள அனைவரும் எப்படி எதை உண்கிறார்கள். இந்திய நாட்டின் 130 கோடி மக்களும் எப்படி எல்லாம் ஒவ்வொருவேளையும் பசியாறுகிறார்கள் என்பதை எல்லாம் விஞ்ஞானப் பூர்வமாக தெரிந்தவர்கள் மாட்டுக்கறியை எதிர்க்க மாட்டார்கள்.
வெறுமே மத அபிமானிகள் மாட்டுக்கறியை எதிர்ப்பார்கள். மாடு உண்பவர்களை கொல்லுவார்கள்.
இப்போது பாருங்கள் மதவாதிகளே ஒட்டுமொத்தமாய் தெய்வமாக வணங்கும் மாட்டையே உயிருடன் புதைக்கிறார்கள்.
உயிருடன் புதைக்கப்படும் போது அம்மாடுகள் அடைந்திருக்கும் மூச்சுத்திணறலை நினைத்துப் பாருங்கள்.
எவ்வளவு கொடுமை அது...
ஜி.எஸ்.டி வரி மாதிரி ஒவ்வொரு மக்கள் செலவுக்கும் “மாட்டு வரி” என்று ஒன்று வைத்து இம்மாடுகளை காப்பாற்றுகிறேன் என்பதுதான் அவர்களின் அடுத்த திட்டமாக இருக்கும்.
மிக இயல்பான ஒரு விஷயம் உணவு...
அமெரிக்கர்கள் போல மாட்டுக்கறி யாராலும் சாப்பிட முடியாது.
சீனர்கள் போல பன்றிக்கறி யாராலும் சாப்பிட முடியாது.
நம்மை விட அவர்கள் எவ்விதத்தில் குறைந்து விட்டார்கள்.
மனிதநேயம், பண்பாடு, பிறரை மதித்தல் இதில் கூட அவர்கள் நம்மை முந்தியே இருக்கிறார்கள்.
நம் நாட்டில் மட்டும்தான் மாட்டுக்கறி சாப்பிடக் கூடாது.. பன்றிக் கறி சாப்பிடக் கூடாது... எவ்வளவு மனத்தடைகள்...
படித்த மக்களே திருந்துங்கள்... யோசியுங்கள்...
மாட்டின் பாலைக் குடிக்கிறீர்கள்... புரோட்டீன் சத்தை எடுத்துக் கொள்கிறீர்கள்..
அது போல மாட்டுக்கறியை உண்டு புரோட்டீன் எடுத்துக் கொள்வதில் என்ன பிரச்சனை உங்களுக்கு...
உங்களுடைய மதக்கொள்கையால் வடமாநிலங்களில் எத்தனையோ ஏழைக் குழந்தைகள் சத்துணவில் முட்டை கூட சாப்பிட முடியாமல் தவிக்கின்றன...
நாம் சொல்லும் ஸ்லோகங்கள் எல்லாம்
எத்தனையோ குழந்தையின் தட்டில் உள்ள
சத்தான உணவை தினமும் பிடுங்கி தூர எறிந்து அவர்களின் உணவின் மேல் கைவைக்கிறது என்பதை நம்ப முடிகிறதா..
ஆனால் அதுதான் உண்மை...

Saturday, December 22, 2018

டிசம்பர் 22 கணித மேதை ராமானுஜன் பிறந்தநாள் - Vijay Bhaskarvijay

டிசம்பர் 22
கணித மேதை ராமானுஜன் பிறந்தநாள். ❤️❤️
பள்ளி நாட்களில் இத எல்லோரும் அனுபவிச்சிருப்போம்.
திடீருன்னு மத்யானம் கிளாஸ் கிடையாதுன்னு சொல்வாங்க. எல்லாரையும் பெரிய ஹால்ல அல்லது மைதானத்துல உக்கார வைப்பாங்க.
எதாவது பொம்மலாட்டமோ, சின்ன படமோ போடுவாங்க.
அப்படி ஒருதட எங்க ஸ்கூலுக்கு ஒருத்தர் வந்து பேப்பர் கட்டிங் செய்து காட்டுனாரு.
சின்ன வயசுல எனக்குள்ள பெரிய மலர்ச்சியக் கொடுத்தது அவரு நடத்தின அந்த நிகழ்ச்சி. ஒரு பேப்பர எடுத்து நீண்ட்ட்ட நீள் சதுரமா கிழிச்சி, அத சுருட்டுனாரு. கத்திரிகோலால வரிசையா பாதிவரை வெட்டினாரு. சுருளப் பிடிச்சி இழுத்தாரு. அப்படியே அழகான நீளமான பூவா ஆகிடிச்சி. அது மாதிரியே பேப்பர்கள்ல பலவிதமான அழகுப் பொருட்கள் செய்து அசத்திட்டாரு.
கீழே உள்ள படத்தைப் பாருங்கள்.
அதிலுள்ள ஒரு அழகைப் பற்றி பேசலாம்.
இதுக்கு பெரிய கணக்கு தெரிஞ்சிருக்க வேண்டியதில்லை. எளிய கணக்கு தெரிஞ்சாலே இந்த அழக ரசிக்கலாம்.
Square (வர்க்கம்) எண்கள் என்றால் என்ன?
ஒரு நம்பரை அதே நம்பரால் பெருக்கினால் அதுதான் Square (வர்க்கம்) எண்.
5 x 5 = 25 ; இது ஒரு Square எண்.
21 x 21 = 441 ; இது ஒரு Square எண்.
இந்த வரிசையில கோலப்புள்ளி (5 புள்ளி 5 வரிசை) வைத்தால் அது சதரமாக இருக்கும். அதனால அதுக்கு சதுர எண்கள் என்ற பெயர்.
சதுர(Square) எண் கொடுத்தாச்சு. அதோட மூல எண்ண எப்படி கண்டுபிடிக்கிறது.
1225 ஒரு Square Number அதோட Square root எப்படி கண்டுபிடிக்கிறது. அதாவது எந்த நம்பர அதாலேயே பெருக்கினா 1225 வருதுன்னு கண்டுபிடிக்கிறது.
சிம்பிள் 1225 நம்பர 5 x 5 x 7 x 7 அப்படின்னு பிரிக்கலாமா. இங்க பாருங்க ரெண்டு அஞ்சு, ரெண்டு ஏழு வந்திருக்கா. அந்த ரெண்டுல ஒண்ணு மட்டும் எடுத்துகிடனும்.
அதாவது 5 x 7 மட்டும் எடுத்துக்கனும். 5 x 7 என்னது ? 5 x 7 = 35 . அப்ப 1225 நம்பரோட Square root வந்து 35 ஆகும்.
இந்த 35 X 35 அப்படிங்கறத 35² எழுதலாம்.
Square root 1225 அப்படிங்கிறத √1225 எழுதலாம்.
ஒரு டிக் போட்டு, அந்த டிக்கோட மண்டையில இருந்து ஒரு கோடு இழுத்து அதுக்குள்ள ஒரு நம்பர எழுதினா.
அந்த நம்பரோட Square root கண்டுபிடின்னு அர்த்தம்.
இப்ப √10609 அப்படி கொடுத்தா அதோட விடை 103 ஆகும்.
103²=10609 ஆகும்.
இப்படி Square Numbers களுக்கும், Square root எண்களுக்கும் ஒரு சிறிய அறிமுகத்தைக் கொடுத்துகிட்டு, இதோ இந்தப் படத்துக்கு மூவ் ஆகுறேன்.
படத்தப் பாருங்க.
முதல்ல 3 நம்பர்தான் இருக்கு.
3 வந்து எதோட Square root ?
3 x 3 = 9
அப்ப 3 வந்து 9 தோட வர்க்கமூலம் என்ற Square root.
3 = √9 அப்படின்னு எழுதலாம்.
√9 = √1+8 எழுதலாமா? எழுதலாம்.
√9 = √1+2 x 4 எழுதலாமா ? எழுதலாம்.
ரூட் சிம்பல் மண்டைக்கோடு இதுல முழுக்க வரல, படத்துல உள்ள மாதிரி முழுக்க வர்றதா
நினைச்சிக்கனும்.
√9 = √1+2 x 4 சரியா.... சரி.
இப்ப இதுல 4 வருது பாருங்க. அந்த நால
4 = √16 எழுதலாமா.. .எழுதலாம்.
√16 = √1+15
√1+15 = √3 x 5
இப்ப 5 = √25
√25 = √1 + 24 = √1+ 4 x 6
6 = √36 = √1+35 = √1+ 5 x 7
இப்படி போகும்.
இன்னொருதடவ முதல்ல உள்ளத மட்டும் கவனிங்க.
3 ஒரே நம்பர் சரியா...
அத √9 எழுதுறோம்.
அந்த √9 த √1+8 ன்னு பிரிக்கிறோம்.
உள்ள ஒரு 8 இருக்கு பாருங்க.
அத 2 x 4 ன்னு போடுறோம்.
அந்த 4 இருக்கு பாருங்க.
அத √16 ன்னு எழுதுறோம்.
இந்த முதல் படிக்கட்ட மட்டும் திரும்ப திரும்ப ஒரு பேப்பர எடுத்து போட்டுப்பாருங்க.
இந்த கான்சப்ட நல்லா அனுபவிச்சி புரிஞ்சி வெச்சிக்கோங்க.

Image result for srinivasa ramanujan
இப்ப இன்னும் உள்ளப் போங்க.
இதுல இன்னொரு அழக கவனிங்க. 4 = √16 அப்படின்னு எழுதுற ஸ்டெப்ல ஒரு Square root உள்ள இன்னொரு Square root வருது பாருங்க.
அடுத்து இதே மாதிரி இன்னொரு சுற்று வரும் ஒரு Square root உள்ள ஒரு ஒரு Square root . அதுக்குள்ள இன்னொரு ஒரு Square root வருது பாருங்க.
இப்படி உள்ள உள்ள போய்கிட்டே இருக்கும்.
இதுக்கு முடிவே கிடையாது.
நம்ம எல்லாருக்கும் 3 அப்படிங்கிற எண் நல்லாத் தெரியும். அது ஒரு தெளிவான நிச்சயமான எண் அப்படின்னு.
ஆனா மாணிக்கத்துக்கு பாட்ஷான்னு இன்னொரு பெயர் இருக்கிறது மாதிரி,
இந்த 3 எண்ணுக்கு இப்படி ஒரு ”எல்லையில்லாத Square root உள்ள ஒரு ஒரு Square root” முகம் இருக்குன்னு தெரியாதுதான.
அது தெரியும் போது எவ்வளவு பரவசமா இருக்குது பாருங்க.
சும்மா இத ஒரு பேப்பர்ல எழுதி வெச்சி போட்டுப் பாருங்க.
You feel good.
பெரிய கணக்கு மேதையால்லாம் நீங்க இருக்க வேண்டாம்.
கணிதத்தோட அழக ரசிக்க அடிப்படை ஏழாங்கிளாஸ் கணக்கு தெரிந்திருந்தால் போதுமானது.
எனக்கு இந்த 3 நம்பர இப்படி பிரிக்கிறதப் பாத்தா பள்ளி நாட்கள் பேப்பர் கட்டிங்க நினைவுக்கு வரும்.
ஒரு தெளிவான வரையறுக்கப்பட்ட சதுரமான அல்லது நீள் சதுரமான பேப்பரை ஒரு கத்திரிகோல் கொண்டு எப்பேர்ப்பட்ட சிக்கலான இதழ்களைக் கொண்ட பூவாக மாற்றி அழகு செய்கிறார்களோ அது மாதிரிதான் இந்த 3 என்ற தெளிவான எண்ணை வித்தியாசமா யோசிச்சி ஒரு ”வர்க்கமூல மலர்” Square root Flower ஆக மாற்றிவிடுகிறார்.
யார் இந்த 3 வர்க்கமூல மலரைக் கண்டுபிடித்தது தெரியுமா?
தமிழன் கணித மேதை ராமானுஜன்தான்.
உங்கள் வீட்டு பிள்ளைகள் 6,7 வகுப்பில் Square root படிப்பார்கள். அவர்களுக்கே இதைச் சொல்லிக் கொடுக்கலாம்.
இது கணித சிலபஸில் இல்லாவிட்டால் கூட பத்து நிமிடம் எடுத்து இதைச் சொல்லிக் கொடுக்கலாம்.
நிச்சயமாக அவர்களுடைய கற்பனைத்திறன் இதை புரிந்து முடிக்கும் போது பன்மடங்கு உயர்ந்திருக்கும்.
ஒரு சிறிய சீனிக்கட்டியை இழை இழையான சிக்கலான அழகான பஞ்சு மிட்டாயை ஆக்கும் வித்தை பற்றி புரிந்து கொள்ள எந்த மனித மனம்தான் விரும்பாது.
கணிதம் அழகு.
கணிதத்தை சரியாக அனுபவித்து படிக்கும் மனது வாய்த்துவிட்டால் வாழ்க்கையில் உங்களுக்கு மன அழுத்தம் என்பதே கிடையாது.
என்னை நம்புங்கள்.
எந்த கணிதம் வேண்டுமானாலும் படித்துப் பாருங்கள்.
ஆறாம் வகுப்பு கணித புத்தகத்தை அரைமணி நேரம் படித்துப் பாருங்கள்.
உங்கள் மன அழுத்தம் விடுபட்டு போயிருக்கும்.
No automatic alt text available.

உலகநாடுகளில் உண்மையான அளவுகள் - Vijay Bhaskarvijay

Atlas வரைப்படத்துக்காக
உலகநாடுகளில் உண்மையான அளவுகள் கொஞ்சம் மாற்றப்பட்டிருக்கும்...
அதாவது நீங்கள் அட்லஸில் பார்க்கும் அளவை விட உண்மையில் ஒவ்வொரு நாடும் சிறியதாகவோ பெரியதாகவோ இருக்கும்...
உண்மையான அளவை பார்க்க இந்த லின்க் உதவுகிறது...
இந்த லின்கை சொடுக்குங்கள்...

https://thetruesize.com

உள்ளே சென்று (இடது பக்கம் மேலே) THE TRUE SIZE OF .... என்று காலியாக இருக்கும் இடத்தில் எந்த நாட்டின் உண்மையான அளவை பார்க்க விரும்புகிர்களோ அதை டைப் பண்ணவும்...
இப்போது அந்த நாடு இப்படி கலர் பார்டரோடு மேப்பில் தெரியும்..
அதை மவுஸின் இடது பக்கம் வைத்து அழுத்தி இழுத்து வேறு நாடுகள் மீது பொருத்திப் பார்க்கலாம்.
இடது பக்கம் கீழே இருக்கும் DIRECTION அம்பை சுற்றினால் நீங்கள் டைப் செய்த நாடு சுற்றும்...
அப்படி சுற்றிப் பார்க்கும் போது இன்னமும் நன்றாக புரிந்து கொள்ளலாம்..
உங்கள் வீட்டுக் குழந்தைகளிடம்
இந்த லின்கை லேப்டாப்பில் திறந்து கொடுத்துவிட்டு, செய்முறையை விளக்கிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுங்கள்.
அவர்களின் உலகம் பற்றிய புரிதல் நன்றாக வளரும்...
கண்டிப்பாக இந்த லின்கை காட்டுங்கள்...
செய்வீர்களா நட்புகளே

Yomeddine என்ற எகிப்து நாட்டு திரைப்படம் - Vijay Bhaskarvijay

Yomeddine என்ற எகிப்து நாட்டு
(மொழி அரபி) திரைப்படத்தில் பிஷே என்னும் மனிதர் வருகிறார்.
அவருக்கு வயது 50 (?) இருக்கலாம். சிறுவயதில் தொழுநோய் வந்து முகமெல்லாம் தழும்புகளுடன் இருக்கிறார்.
குப்பைக்கிடங்கில் குப்பை அள்ளி கொட்டுவது மட்டுமே அவர் வேலை.
பத்து வயதாக இருக்கும் போது
தொழுநோயால் பாதிக்கப்படும் போது
அவர் தந்தை அந்த குப்பை கிடங்கில் பையன் விட்டு “ பிஷே நீ உயிரோடு பிழைத்தால் பின்னால் வீட்டுக்கு வா” என்று சொல்லி அந்த இடத்தை விட்டு வேகமாக போய்விடுகிறார்.
அதன் பிறகு பிஷேயின் தொழுநோய் சரியாகி முகமெல்லாம் தழும்பாகி உலக அழகு என்று நம்பும் தன்மைக்கு எதிர்காக ஆகி குப்பை கிடங்கிலேயே வாழ்க்கையை கழிக்கிறார்.
அங்கே அவருக்கு நண்பர்கள் கிடைக்கிறார்கள். திருமணமும் செய்து கொள்கிறார்.
அந்த ஊரில் இருக்கும் ஒபாமா என்னும் ஆதரவற்ற சிறுவன் நட்பாகிறான்.
பிஷேயின் மனைவி இறந்து அவருக்கென்று யாருமில்லாத போது அவர் தந்தையைப் பார்க்க ஊர் பெயரை மட்டும் வைத்து தன் மட்டக்குதிரையில் பயணம் செய்கிறார்.
அவருடன் ஒபாமாவும் சேர்ந்து கொள்ள இருவரும் பிஷேயின் ஊருக்கு செல்கிறார்கள்.
எப்படியே பிஷேவின் அண்ணனைப் பார்த்து அப்பாவைவும் கண்டுவிடுகிறார் பிஷே...
அப்பாவுக்கு பக்கவாதம் வந்து கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்.
பிஷே அப்பாவிடம்
”ஏன் என்னை அப்படி குப்பை கிடங்களில் விட்டு விட்டு வந்தீர்கள்” என்று கேட்கிறார்.
Image may contain: 2 people, people sitting, child and outdoor
அதற்கு அப்பா சொல்லும் பதில்தான் சிலிர்க்க வைத்தது.
“பிஷே... உன்னை அந்த நோயுடன்... அந்த முகத்துடன் எங்களோடு வாழ வைத்திருந்தால் நீ எங்கள் வாழ்க்கையைப் போல வாழ நினைத்து, அப்படி வாழ முடியாமல் ஒவ்வொரு விநாடியும் நரகத்தை அனுபவித்திருப்பாய்... ஆனால் இப்போது உனக்கான உலகத்தில் உனக்கு நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள், உனக்கு மனைவி கிடைத்தார், உனக்கு ஒபாமா கிடைத்தான், உனக்கான தொழிலும், உனக்கான கம்பீரமும், உனக்கான வாழ்க்கையும் கிடைத்திருக்கிறது பார்” என்கிறார் அந்த தந்தை.
அதை தந்தை சொல்லும் போது பிஷேவுக்கு அவர் வாழ்க்கையில் கிடைத்ததை எல்லாம் எடிட்டில் காட்டுகிறார்கள். பார்க்கும் போது
புல்லரித்து விட்டது.
தொழுநோய் வந்தவர்களை எல்லாம் வீட்டை விட்டு துரத்த வேண்டும் என்பதை இதன் அர்த்தமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
ஆனால் அந்த அப்பாவின் மனதில் இருக்கும் அவர் சொல்லும் கருத்தையும் ஒதுக்கித்தள்ளி விட முடியாது.
இது பற்றி மார்க்ஸியவாதியான தோழர்
Selvaraj Ksraj பேசிக் கொண்டிருந்தேன்.
அக்காட்சியும் வசனமும் என் சிந்தனையை தூண்டிக் கொண்டே இருப்பதாக சொன்னேன்.
அவர் சொன்னார்
“பிரச்சனையை வெளிய இருந்து பாக்குறதுக்கும் உள்ளேயே வாழ்றதுக்கும் வித்தியாசம் இருக்கு விஜய். பிரச்சனையாவே இருக்கிறவன் வாழ்க்கையை யதார்த்தமா பார்ப்பான்.
அத இந்த உலகத்துல தடுக்கவே முடியாது.
இப்போ மேனகா காந்தி ஒரு சமயம் நாய்களுக்கு எல்லாம் கருத்தடை செய்ற திட்டம் கொண்டு வந்தாங்க.
அப்ப என்னோட வேலை பார்த்த ஒருத்தர், அவர் தினமும் வீட்டுக்கு நைட் 12 மணிக்கு மேலதான் போகனும்.. .
அவர் அந்த திட்டத்த திட்றாரு
“ நைட்டு ஒருநாள் வந்து இப்படி எல்லாம் சட்டம் கொண்டு வர்றவங்க தெருல நடக்கனும். நடந்தாத்தான் நாய்க்கடின்னா எப்படி இருக்கும், நாய் சுத்தி நின்னு மேல நின்னு நம்மள பிறாண்டுனா எப்படி இருக்கும், எப்படி பயமா இருக்கும்னு தெரியும். கார்ல விர்விருன்னு போயிட்டு, பாதுகாப்பா தெருவ கடந்துட்டு, நாய் மேல இரக்கப்பட்டா கடி வாங்கி சாவுறது யாரு” அப்படி சொன்னாரு...
இதுதான் பிரச்சனைல உள்ளவன் பிரச்சனைய அனுகுறதுக்கும்,
பிரச்சனைல இல்லாதவன் அணுகுறதுக்கும் உள்ள வித்தியாசம்.
இந்த யதார்த்தப் புரிஞ்சிக்காம எந்த பிரச்சனையும் நாம அணுகவே முடியாது. கூடாது” என்று முடித்தார்.
ஆம் இந்த பாயிண்டில் யோசிக்க நிறைய இருக்கிறதுதான்...

Friday, December 21, 2018

Franca Viola ஒரு பாலியல் வழக்கு - விஜய் பாஸ்கர்விஜய்

80 கள், 90 கள் தமிழ் சினிமாக்களில்
பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட பெண்ணின் அப்பாவோ அம்மாவோ பாலியல் வல்லுறவு செய்த ஆணிடம்
“என் பொண்ண தயவு செய்து கல்யாணம் செய்துக்க. அப்பதான் அவ தல நிமிந்து வாழ முடியும். எங்க குடும்பமும் தல நிமிந்து நிக்கும்” என்று கெஞ்சுவதை பார்த்திருக்கிறோம்.
The Magdalene Sisters திரைப்படத்தில் அயர்லாந்து நாட்டில் 1960 களில் பாலியல் வல்லுறவு கொடுமையை அனுபவித்த பெண்களை பெற்றோர்கள் ”கடும் வேலை செய்யும் முகாமுக்கு” அனுப்புவதை பார்க்கலாம்.
நீங்கள் கெட்டுவிட்டீர்கள். கடுமையான வேலை செய்வதின் மூலமாக மட்டுமே உங்களை புனித படுத்திக் கொள்ள முடியும் என்று கொடுமையை அனுபவித்த பெண்களையே மேலும் கொடுமைப்படுத்தினார்கள்.
மொத்த ஐரோப்பாவுமே இந்த விக்டோரியன் ஒழுக்கமுறையில் பெண்களை கொடுமைதான் படுத்தி இருக்கிறார்கள்.
Franca Viola என்னும் இத்தாலி நாட்டு பெண்ணுக்கு 1963 வருடம் அவள் மாமா பையனோடு திருமணம் நிச்சயம் ஆகிறது.
அப்போது அவள் வயது 15 தான்.
பிறகு அவன் நல்லவனில்லை என்று தெரிந்ததும் அவள் அப்பா நிச்சயதார்த்தை செல்லாது என்று அறிவிக்கிறார்.
அதிலிருந்து இரண்டு வருடங்கள் கழித்து Melodia என்னும் பெயரைக் கொண்ட அவன் Franca Viola வை கடத்துகிறான்.
கடத்தி அவன் அக்கா வீட்டில் எட்டு நாட்கள் சிறை வைத்து தொடர்ச்சியாக பாலியல் வல்லுறவு கொடுமையை செய்கிறான்.
Franca Viola வை மீட்ட பிறகு “நானே இவளை திருமணம் செய்து கொள்கிறேன்” என்கிறான்.
அதுவரையில் இத்தாலியில் ஒருவன் வல்லுறவு செய்து விட்டால் அப்பெண் அவனையே கேள்வி கேட்காமல் திருமணம் செய்து கொள்வாள்.
அதுதான் அவள் பெருமையை மீட்கும் செயலாக இருந்தது. கோர்ட்டும் அதை அனுமதித்தது.
அதுதான் அங்கே உள்ள சமூக வழக்கமாக இருந்தது. ஆனால் Franca Viola அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை.
“அவன் மேல் எனக்கு காதல் இல்லை. பிறகு எப்படி திருமணம் செய்ய முடியும். எட்டு நாட்கள் தொடர்ச்சியாக வல்லுறவுக்கு ஆளான கொடுமைக்கு என்ன பதில் அவன் சொல்லுவான்” என்று கோர்ட்டில் அவனை திருமணம் செய்ய மறுக்கிறாள்.
வழக்கிட்டு கொடும் பாலியல் வல்லுறவு செய்தமைக்காக அவனுக்கு பத்து வருடங்கள் சிறைத்தண்டனை வாங்கிக் கொடுக்கிறாள்.
அப்போதை ஐரோப்பிய அமெரிக்க சூழலில் இது பெரும் புரட்சியாக பார்க்கப்பட்டது.
Image may contain: 2 people, close-up

இவ்வளவு கொடுமையை Franca Viola அனுபவித்த பிறகும் ஊடகங்கள் அவளை “இவள் ஒல்லியாக இருக்கிறாள், அழகாக இருக்கிறாள், கவர்ச்சியாக இருக்கிறாள்” என்று பிரச்சனையின் திவீரத்தை குறைக்கும் விதமாகத்தான் எழுதியதாம்.
தன் மாமா பையன் சிறைக்கு போனதும் Franca Viola திருமணமே செய்து கொள்ளப் போவதில்லை என்று அறிவிக்கிறாள்.
பிறகு மூன்று வருடங்கள் போன பிறகு Giuseppe Ruisi என்ற தன் நண்பனை அன்புடன் திருமணம் செய்து கொண்டு மூன்று குழந்தைகளும் பெற்று மகிழ்ச்சியாக வாழ்க்கையை தொடர்ந்திருக்கிறார்.
தன்னை ஒரு Object ஆக சமூகம் கருதுவதை எதிர்த்து போராடும் போது Franca Viola பல துன்பங்களை அடைந்திருக்கலாம்.
ஆனால் நினைத்துப் பாருங்கள்
எட்டு நாட்கள் பூட்டி வைத்து ஒரு குடும்பமத்தின் ஆதரவுடன் ஆண்குறியை எடுத்து வலுக்கட்டாயம நுழைக்கும் போது அவள் அடைந்திருக்கும் அவமானம் ஆத்திரம் இயலாமையின் தவிப்பு எல்லாம் எப்படி இருந்திருக்கும்.
உடல் என்பதை புனிதமாக கருதி அதை சுத்தமாகத்தான்(?) கணவனிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற பிற்போக்கு எண்ணத்தில் இருந்து Franca Viola மீண்டதுதான் இங்கே மிகப் பெரிய விஷயம்.
வழக்கத்தை உடைப்பது வலிதான்...
ஆனால் Franca Viola அதை சாதித்திருக்கிறார்...

Tuesday, December 18, 2018

The Little Match-Seller - விஜயபாஸ்கர் விஜய்

புத்தகக் கடைக்குச் சென்றிருந்தேன்...
ஒரு புத்தகத்தை எடுத்து இக்கதையை படித்தேன்.
படித்த முடித்த உடன் நிலைகுலைந்தேன்.
வீட்டுக்கு வந்த உடன் அதை எழுத வேண்டும் போல ஒரு தவிப்பு.
இக்கதையில் வரும் சிறுமி எப்படி இருப்பாள். எந்த கோணத்தில் எந்த இடத்தில் நின்றிருப்பாள். அவளைச் சுற்றியுள்ள இடங்கள் அனைத்தையும் என்னால் உணர முடிந்தது.
உடனே எழுதினேன். எழுதும் போது கலக்கமாக உணர்ந்தேன்.
வருடத்தின் கடைசிநாள் அது.
பனிபொழியும் குளிரில் அச்சிறுமி நடுங்கிக் கொண்டிருந்தாள்.
மெலிந்த உடலையும், திராணியில்லாத குரலையும், வயிற்றைச் சுருட்டும் பசியையும் கொண்டிருந்தாள்.
அலைந்து திரியும் கால்களில் அவள் அம்மாவின் பழைய ஷூக்களை அணிந்திருந்தாள்.அது அவளுக்கு பொருந்தவில்லை.
பாதங்களை மட்டுவாவது பனியிலிருந்து காக்கும் அளவில் அது அவளுக்கு உதவியது எனலாம்.
கையில் ஒரு பை.
அந்த பழைய பையில் தீப்பட்டிகள். தீப்பட்டி ஒன்று கூட விற்கவில்லை. யாரும் வாங்கவில்லை.
தீப்பட்டிகளை விற்காமல் வீட்டுக்கு போக முடியாது. அப்பா கொடுமையாக அடித்து வைப்பார். சில நேரம் பல்லைக் கடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே தள்ளி உதைப்பார்.
அப்படியெல்லாம் செய்தால் அது வேதனையை கொடுக்கும் என்று அவருக்கு தெரிவதில்லை.
ஏழ்மை கொடுக்கும் வேத்னையை தாங்க விருப்பமில்லாமல், அப்படியே அவளிடம் திருப்பிவிடும் அப்பாவின் மனதை, அன்பு ஒருமுறை கூட வருடாதது பற்றி யோசிக்கும் அறிவை பெற்றிராத அப்பாவி சிறுமி அவள்.
அப்பாவின் அடி பற்றி யோசித்து ஒரு சரிவான தெருவில் இறங்கி நடக்கும் போது பனியால் வழுக்கினாள்.
உருண்டு விழும் போது காலுக்கு பொருந்தாத அவளது ஷூக்கள் பிரிந்து விழுந்தன.
ஒரு ஷூவை தட்டுத் தடுமாறி எடுத்துக் கொண்டிருக்கும் போது இன்னொரு ஷீவை அவ்வழி வந்த சிறுவன் ஒருவன் திருடிக்கொண்டு ஒடிவிட்டான்.
முப்பது விநாடிகளில் ஒற்றை ஷுவுடன் அவள் தனித்து விடப்பட்டாள்.
அடுத்த முப்பது விநாடிகளில் வெறுங்காலில் பனிக்குளிர் ஏற ஆரம்பித்தது.
”ஆஹ் குளிருது” என்று ஒரு காலை இன்னொரு கால் மீது வைத்துக் கொண்டாள்.
ஒற்றைக் காலால் அதிக நேரம் நிற்கமுடியவில்லை.
தடுமாறி கிழே விழுந்தாள்.விரல் இடுக்குகளில் பனி ஈவுஇரக்கமே இல்லாமல் குளிரை பாய்ச்சிக் கொண்டிருந்தது.
ஷூ இல்லாத கால் வெளுக்க ஆரம்பித்தது.
ரத்தம் குறைய ஆரம்பித்தது. ஒரு தீப்பட்டி கூட விற்கவில்லை.
ஒரு வீட்டின் சுவர் அருகே அமர்ந்து கொண்டாள். இங்கே அடிக்கும் குளிருக்கும் அவள் வீட்டின் குளிருக்கும் வித்தியாசமில்லை.
பிய்ந்து போன கூரையை உடைய பனிக்கதிர்கள் நுழையும் வீடும் இந்த தெருவும் ஒன்றுதான் அவளுக்கு. வீட்டில் அடிகிடைக்கும்.. இது தெருவில் அப்பாவின் அடிகிடைக்காது.
அதனாலேயே தெருவில் அமர்ந்திருந்தாள். கால் மரத்துப் போனது. இருட்ட ஆரம்பித்தது. பல வீடுகளில் இருந்து வெண்ணெய் உருகும் உணவின் வாசம் அடித்தது. சூடாக உண்ட பிறகு, வைனை ஊற்றி வீட்டுக்குள் சுகமாக குடித்துக் கொண்டிருப்பார்கள்.
சிறுமிக்கு கண் இருட்டிக்கொண்டுவந்தது. இந்த பையில் இருக்கும் தீப்பெட்டிகளில் ஒரு பெட்டியை எடுத்து தீப் பற்ற வைத்தால் என்ன?
அது குளிருக்கு இதமாய் இருக்குமே என்று தோன்றியது.
தயக்கமாக ஒரு தீகுச்சியை எடுத்து கிழித்தாள்.
தீக்குச்சி தீயாகி ஜொலிக்கும் போது அந்த சாப்பாட்டு மேஜை தெரிந்தது.
அதில் பொரித்த கோழி இறைச்சியும், சுவையான கேக்கும், பழரசமும் இருந்தன. குளிரைப் போக்க அடுப்பொன்றும் மேஜை அருகே இருந்தது. தீக்குச்சி வெளிச்சம் குறையும் போது ஒவ்வொன்றாய் மங்கியது.
அணையும் போது முற்றாக கோழி இறைச்சியும், கேக்கும், பழரசமும் காணாமல் போயின.
சிறுமி யோசித்தாள்.
அடுத்த குச்சியை உரசினாள்.
தீக்குச்சியின் ஒளியில் ஒரு கிறிஸ்துமஸ் மரம் தெரிந்தது. அதன் கரும்பச்சை இலைகள். கரும்பச்சை இலைகளைத் தொடர்ந்த இளம்பச்சை இலைகள்.
அதை அலங்காரப்படுத்தும் மணிகள். தீக்குச்சி அணையும் போது கிறிஸ்துமஸ் மரம் காணாமல் போனது.
அடுத்த குச்சியை எரிக்கும் போது அழகான நட்சத்திரம் மின்னியது. மின்னிய நட்சத்திரம் குச்சி அணையும் போது தரையில் விழுந்து அணைந்தது.
சிறுமிக்கு பாட்டி நினைவு வந்தது.
எவ்வளவு அன்பாயிருப்பாள் பாட்டி. இன்னொரு குச்சியைப் பொருத்தினாள். அங்கே அவள்பாட்டி சிரித்தபடியே தோன்றினாள்.
“பாட்டி என்ன இங்க வந்திருக்கீங்க”
பாட்டி சிறுமியை நோக்கி அன்பாக கையை நீட்டினாள்.
“பாட்டி தீ எரியுறது நின்னாச்சுன்னா நிங்க போயிருவீங்க பாட்டி. அதுக்கு முன்னாடி என்ன கூட்டிட்டு போயிருங்க பாட்டி”
ஒரு குச்சி அணைமுன்னே இன்னொரு குச்சியை ஏற்றினாள்.
பாட்டி போகாமல் அப்படியே நின்று கொண்டிருந்தாள்.
“பாட்டி நீ நிச்சயமா போகாத பாட்டி அப்பா என்ன ரொம்ப அடிக்கிறார். இதோ குளிர்ல நிக்குறேன். என்கிட்ட போட்டுகிறது ஷு கூட இல்ல. என் காலெல்லாம் மரத்து போச்சு போட்டி. ஐயோ தீக்குச்சி தீரப்போகுதே. தயவுசெய்து என்னவிட்டு போயிராத பாட்டி பயமா இருக்கு எனக்கு”
இன்னும் ஒரு குச்சியை பொருத்தினாள். பாட்டி சிரித்துக் கொண்டே நின்றாள்.
“ஒரு தீப்பெட்டி கூட விக்கல பாட்டி. வீட்டுக்குப் போனா அப்பா அடிப்பார். பயமா இருக்கு. என்னையும் உன்னோட கூட்டிட்டுப் போயிரேன். நா உன் கூடவே வந்த்ர்றேன் பாட்டி.போயிராதீங்க இன்னொரு குச்சியை பொருத்திக்கிறேன்”
தீக்குச்சியை பொருத்திவிட்டு ஏங்கி ஏங்கி அழுது கொண்டே இருந்தாள் அச்சிறுமி.
பாட்டி, பாசத்தோடு கையை நீட்டி வருமாறு அழைத்தாள்.
சிறுமி மகிச்சியோடு பாட்டியின் கைகளைப் பிடித்துப் போகும் போது குச்சி அணைந்தது.
எங்கும் இருட்டு.
கொடுமையான இருட்டு. பனியோடு கலந்த கொடுமையாக இருள்.
காலை விடிந்தது. புத்தாண்டு கொண்டாட்டத்தில்; திளைத்த மக்களுக்கு அந்தக்காட்சி வித்தியாசமானதாகப் பட்டது.
ஒரு சிறுமி கிழித்த தீக்குச்சிகளின் நடுவே குளிரில் நடுங்கி செத்துக் கிடக்கிறாள்.
முகம் வெளிறி பனிசரல்களுக்குள்.
ஒரு பெண்
“பாவம் ராத்திரியெல்லாம் குளிர்ல கிடந்து விரைச்சிட்டா ” என்று மற்றவர்கள் சொல்லும் போது குளிர் அடித்துக் கொண்டிருந்தது.
The Little Match-Seller என்றொரு Hans Christian Andersen FairyTales யில் இருந்து ....

Image may contain: outdoor

Monday, December 17, 2018

கொஞ்சம் யோசியுங்கள் - விஜயபாஸ்கர் விஜய்

 


ஒருமுறை அப்பாவிடம் தாழ்த்தபட்டவர்கள் பிரச்சனை பற்றி பேசிக் கொண்டிருந்தேன்.
சிறுவயதில் இருந்தே அப்பாவிடம் பேசுவது என்பது எனக்கு பிடித்த பொழுது போக்கு. உலகில் எதைவிடவும் அதிகமாக அதை விரும்புவேன்.
சிறுவயதில் அப்பா கடை அடைத்துவிட்டு இரவு வந்து அருகில் படுப்பார்.நான் அதற்குள் ஒரு தூக்கம் போட்டு முடித்திருப்பேன்.
அதன் பிறகு அப்பா மகாபாரதம் கதை பேசுவார். நானும் அது பற்றி மிக அர்வத்துடன் பேசுவேன். ஒவ்வொரு கேரக்டரையும் பற்றியும் விவாதம் செய்வோம். சில சமயம் இதெல்லாம் முடிய இரவு இரண்டு மணியாகும்.
காலை எழுந்திருக்கும் போது அப்பா கடைதிறக்க போயிருப்பார். எது படித்தாலும் அது பற்றி அப்பாவிடம் விவாதிப்பேன்.
அப்படியாக பேசிக்கொண்டிருக்கும் போது அப்பா கொஞ்சம் சலிப்புடம் கேட்டுக் கொண்டிருந்தார். நான் ஏன் என்று காரணம் கேட்டேன். அப்பா ஒரு சம்பவம் சொன்னார்.
கடைத்தெருவில் ஒரு நகைக்கடைக்காரர் ஒரு தாழ்த்தபட்ட வகுப்பைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு வேலை கொடுத்தாராம்.
கொஞ்ச நாளில் கும்பலாக வந்த அவள் உறவினர்கள் “நீ எங்க பொண்ணுகிட்ட தப்பா நடந்துகிட்ட” என்று மிரட்டி நல்ல தொகை ஒன்றை வாங்கி போய்விட்டார்களாம்.இதைச் சொல்லி “இது மாதிரிதான் சட்டத்த யூஸ் பண்றாங்க” என்று சலித்துக் கொண்டார்.
“யப்பா நான் அம்பேத்கர் மனச பாதிச்ச ஆறு சம்பவத்த சொல்றேன் நீங்க கொஞ்சம் கேளுங்க” என்று வீட்டு மொட்டைமாடியில் ஒரு பிரசங்கியைப் போல தொண்டையை கனைத்துவிட்டு பேசத் தொடங்கினேன்.
நிற்க
இங்கே முகநூலில் எத்தனையோ குடும்பத்தலைவிகள் இருக்கிறீர்கள். வாழ்க்கையில் இருக்கும் பல்வேறு ஸ்டிரஸ்களின் போது அதை கொஞ்சம் தீர்த்து ஆசுவாசப்படுத்திக் கொள்ள ஃபேஸ்புக் வருவீர்களாயிருக்கும்.
தனிப்பட்ட முறையில் நீங்கள் அன்பே உருவாய் இருப்பீர்கள். ஒருவருடைய பசியை தாங்க மாட்டீர்கள். ஒருவருடைய உடல்நிலை சரியின்மையை தாங்கிக் கொள்ள மாட்டீர்கள். ஆனால் சமுதாய அடிப்படையில் பல கொடூரமான பதிவுகளில் உங்கள் லைக்குகள் இருக்கும்.
பலநேரம் இதைப் பார்த்து ஆச்சர்யபட்டிருக்கிறேன். ஏன் இவ்வளவு இரக்கமில்லாதவர்களாக இருக்கிறார்கள் என்று. ஆனால் தனித்தனியே பார்த்தால் ஒவ்வொருவரும் மிக நல்லவர்கள்.
இதோ என் அப்பாவுக்கு சொன்ன விசயத்தை நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள். இதை உங்கள் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுங்கள். இது ஒரு சாரார் மீது வெறுப்பை வளர்க்கும் என்று நினைத்தால் அது முட்டாள்தனமானது. ஆனால் ஒரு சாரார் மீது உண்மையான அன்பு வரும்.இப்படியெல்லாம் உங்கள் தாத்தா கஷ்டப்பட்டிருந்தால் நீங்கள் அதை எப்படி எடுத்துக் கொண்டிருப்பீர்கள்.
இதே அளவு துன்பத்தை இப்போதும் பலர் அனுபவிக்கின்றனர் என்பது உங்களுக்கு தெரியுமா.
சம்பவம் 1:
1901 வருடம் அம்பேத்கரும் அவருடைய சகோதரர்களும் அவர் அப்பாவைப் பார்க்க கோரேகன் செல்கிறார்கள்.அம்பேத்கரின் அப்பாவுக்கு சரியான தகவல் கிடைக்காத குழப்பத்தால்,அம்பேத்கர் குதிரைவண்டியில் கிட்டத்தட்ட பத்து மணி நேரத்துக்கும் மேலாக பயணம் செய்யவேண்டிய நிலமை ஏற்படுகிறது.
ஒரிரவு, தெரியாத ஊரின் ரோட்டோரம் தங்க வேண்டிய நிலமை. இந்தப் பயணத்தில் சிறுவன் அம்பேத்கருக்கு வித்தியாசமான பிரச்சனை ஏற்படுகிறது.அவனுக்கு சாப்பிட, வேண்டிய மட்டும் உணவை அவன் அம்மா கட்டிக்கொடுத்திருக்கிறார்.
ஆனால் வழியில் அவருக்கு தண்ணீர் கொடுக்க ஆளில்லை.
தாழ்த்தபட்டவன் என்ற காரணத்தால் தண்ணீரே கிடைக்கவில்லை.
தண்ணீரில்லாமல் உணவு உண்ணுதல் முடியாத காரியம்.அதனால் கடைசிவரை அவற்றையெல்லாம் சாப்பிடாமலேயே அப்பாவைச் சென்றடைகிறார் அம்பேத்கர்.
ஜாதி வெறியின் கொடுமையின் வீரியத்தை அவர் புரிந்து கொண்டது இதிலிருந்துதான்.

சம்பவம் 2:
1916 ஆம் ஆண்டு அமெரிக்காவில் தன் உயர்கல்வியை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு இந்தியா திரும்பும் அம்பேத்கருக்கு பரோடா மன்னருக்காக உழைக்க வேண்டிய வேலை. அவருக்கு வேலை கிடைக்கிறது.
ஆனால் தங்குமிடம் கிடைக்கவில்லை. வேறு வழியில்லாமல் ஒரு பார்சி ஹாஸ்டலுக்கு செல்கிறார்.அங்கே அவரை பார்சி என்று நினைத்து தங்க இடம் கொடுக்கிறார்கள். அம்பேத்கரும் அதை மெயிண்டயின் செய்து வருகிறார்.
ஒரிரவு அம்பேத்கரின் ஜாதியை அறிந்து பார்சிக்கள் கூட்டம் கம்பு தடி எல்லாம் எடுத்து வந்து அவரை சுற்றிக்கொண்டு “எப்படி எங்கள் இன ஹாஸ்டலில் நீ தங்கியிருக்கலாம்” என்று அவரைச் சுற்றி அடிக்க நிற்கிறது. அம்பேத்கர் அவர்கள் அவேசத்தைப் பார்த்து பயந்து மன்னிப்புக் கேட்டு மனக்கஷ்டத்துடன் அந்த இடத்தைக் காலி செய்கிறார்.
இந்துக்களுக்கு பிடிக்காத தாழ்த்தப்பட்டவர்கள் பார்சிக்களுக்கும் பிடிப்பதில்லை என்பதை அவர் புரிந்து கொள்கிறார்.

Image may contain: 1 person

சம்பவம் 3 :
1929 இல் தாழ்த்தப்பட்டவர்கள் பிரச்சனையொன்றைப் பற்றி விசாரனை செய்ய மும்பை அருகே ஒரு கிராமத்துக்குச் செல்கிறார் அம்பேத்கர். ரயில் நிலைத்திலிருந்து நான்கு மணி நேர டோக்லா வண்டிப் பிரயாணம். வண்டியை ஒட்டி வந்த வண்டிக்காரன் சரியாகவே ஒட்டவில்லை. பக்க மறைப்பு இல்லாத மரப்பாலங்களை அவன் கடக்கும் போது பல அசம்பாவிதங்கள் நடக்க இருந்தன.
அவனுக்கு வண்டி ஒட்டத்தெரியவில்லை என்பதை அம்பேத்கர் கண்டுபிடித்துவிட்டார். அன்றைய நாள் கடைசியில் அது பற்றி விசாரித்திருக்கிறார். டோக்லா வண்டிக்காரர்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்கு வண்டி ஒட்ட வரமுடியாது என்று சொல்லிவிட்டார்களாம்.அதனால் தாழ்த்தப்பட்டவர்கள் வண்டியை மட்டும் வாடகைக்கு வாங்கி, அவர்களில் அரைகுறையாக தெரிந்த ஒருவனை வண்டியோட்டியாக்கி ரிஸ்க் எடுத்திருக்கிறார்கள்.
இந்துக்களுக்குப் பிடிக்காதவர்களை பார்சிக்களுக்கு மட்டுமல்ல டோக்லா வண்டிக்காரர்களுக்குக் கூட பிடிக்காது என்று அவர் புரிந்து கொண்டார்.
சம்பவம் 4
1934 யில் ஹைதிராபாத்தில் இருக்கும் தவலாபாத் கோட்டையைச் சுற்றிப் பார்க்க அம்பேத்கரும் அவர் இயக்க அங்கத்தினர்களும் போயிருக்கின்றனர்.அந்தக் கோட்டை முஸ்லிம்களால் பராமரிக்கப்படும் கோட்டை.
கோட்டையில் நுழைந்ததும் அம்பேத்கருடன் வந்தவர்கள் அங்கிருந்த குளத்தில் கால் கை கழுவியிருக்கிறார்கள்.
அவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்று தெரிந்து கொண்ட அங்கிருந்த முஸ்லிம்கள் “ நீங்கள் தெத்கள் ( தாழ்த்தபட்டவர்கள்) எப்படி எங்கள் குளத்தைத் தொடலாம். அது தீட்டாகிவிட்டது” என்று அடிக்க வருகிறார்கள்.
உடனே அம்பேத்கர் “ இப்படித்தான் உங்கள் மதம் உங்களுக்கு சொல்கிறதா? இந்தக் கோட்டையை நாங்கள் சுற்றிப் பார்க்க வேண்டுமா? வேண்டாமா? அதற்கு அனுமதியுண்டா? கிடையாதா ? பளிச்சென்று சொல்லுங்கள் “ என்று உரத்து சொல்கிறார்.
முஸ்லிம்கள் நெடுநேரம் யோசிக்கிறார்கள். போனால் போகிறதென்று அனுமதி கொடுக்கிறார்கள்.
ஆனால் குளத்தைத் தொடக்கூடாதென்று கூடவே ஒரு காவலாளியையும் அனுப்பி வைக்கின்றனர்.
இந்துக்களுக்குப் பிடிக்காதவர்களை, பார்சிக்களுக்கு மட்டுமல்ல, முஸ்லிம்களுக்கும் பிடிக்காது என்று அவர் புரிந்து கொண்டார்.
சம்பவம் 5:
இது அம்பேத்கருக்கு நேர்ந்தது அல்ல.ஒரு பங்கி ஜாதியைச் சேர்ந்த இளைஞனுக்கு நேர்ந்தது என்று அம்பேத்கர் சொல்கிறார். அவனுக்கு அரசு அலுவலராக வேலை கிடைக்கிறது.
ஆனால் அவன் அலுவலகத்தில் அவனுக்கு இருக்கை கொடுக்கவில்லை.அவனுக்கு குடிநீர் வேண்டுமானால் மொண்டு குடிக்க முடியாது.வேறு யாராவது நீரை அவன் கைகளில் ஊற்ற வேண்டும்.
ஒருநாள் அவன் தெரியாமல் உயர் ஜாதிகார அதிகாரி இருக்கையில் அமர்ந்துவிட, அவர் ஊரிலிருந்து ஆட்களை கூட்டி வந்து அவனை அவமானப்படுத்தி அடிக்க வருகிறார்.அவன் அந்த வேலையே வேண்டாம் என்று விட்டு ஒடிப்போகிறான்.
சம்பவம் 6 :
இது அம்பேத்கருக்கு நேர்ந்தது அல்ல. ஒரு தாழ்த்தப்பட்டவர் காந்தியின் ”யங் இந்தியா” இதழுக்கு எழுதிய கடிதம்.
அவருடைய குழந்தைக்கு உடல் சரியில்லை.
கடுஞ்ஜுரம்.
மருத்தவர் ஜாதியைக் காட்டி வரமறுக்கிறார்.இவர் பணம் கொடுக்கிறேன் என்கிறார்.அப்போதும் மருத்தவர் வரமறுக்கிறார்.
பல சிபாரிசுகளுக்குப் பிறகு இரண்டு நாள் கழித்து மருத்துவர் வருகிறார்.
குழந்தையை ஹரிஜனக்குடியிருப்பின் வெளியே எடுத்து ஒரு வீட்டில் வைக்கிறார்கள்.
தெர்மாமீட்டரை டாக்டர் ஒரு முஸ்லிமிடம் கொடுக்கிறார், முஸ்லிமிடமிருந்து இவருக்கு அது வருகிறது, பின் அதை மனைவிடம் கொடுத்து குழந்தைக்கு வைத்து காய்ச்சலை அளவெடுக்கிறார்கள்.
டாக்டர் மாத்திரை எழுதிக்கொடுத்துவிட்டு போய்விடுகிறார். ஆனால் குழந்தை ஒருநாளில் இறந்துவிடுகிறது.
இந்துக்களுக்குப் பிடிக்காதவர்களை
பார்சிகளுக்கும்,
டோக்லா வண்டிக்காரனுக்கும்,
முஸ்லிம்களுக்கும்
அரசு அலுவலர்களுக்கும்
மருத்துவர்களுக்கும் கூட பிடிக்கவில்லை.
இதை அப்பாவிடம் சொல்லி முடிக்கும் போது உணர்ச்சிமயமாய் இருந்தேன்.
அப்பாவிடம் சொன்னேன்
“யப்பா உங்களுக்கு எழுபது வயசாச்சு. நீங்கள் இந்த விஷயத்தில் முட்டாளாகவே இருந்து விட்டீர்கள். பரவாயில்லை.இந்த புள்ளியில் விழித்துக் கொள்ளுங்கள். ஒரு சாராரின் வலியை புரிந்து கொள்ளுங்கள். பொத்தாம் பொதுவாய் பேசாதீர்கள்.” என்றேன்.
அப்பா புன்சிரிப்போடு என்னை ஏற்றுக் கொண்டார். சமுதாய உணர்வில் கருணை இருப்பதும் ஒரு மனிதன் முழுமையடைய முக்கியம்.
அந்த சமுதாய உணர்வில்லாமல் என்னதான் தனிபட்ட மனித அளவில் கருணையாய் இருந்தாலும் அது வீண்தான்.
கொஞ்சம் யோசியுங்கள் ...

Saturday, December 15, 2018

The Two Gentlemen of Verona - Vijay Bhaskarvijay

’The Two Gentlemen of Verona’ என்ற நாடகத்தில்
( ஷேக்ஸ்பியர் எழுதியது )
வாய் தவறிய காரணத்தால் பெரிய பிரச்சனை வருவதைப் பார்க்கலாம்.
புரோட்டிஸும் வேலண்டியனும் நண்பர்கள்.
புரோடியஸ் ஜூலியா என்ற அழகிய பெண்ணை லவ்வடிக்கிறான். வேலண்டியனுக்கு லவ் அடிக்கும் வாழ்க்கையில் நம்பிக்கை இல்லை.
வாழ்க்கையில் முன்னேறப் போகிறேன் என்று மிலன் நகரத்து பிரபுவிடம் உதவியாளராய் சேர்கிறான். அங்கே பிரபுவின் மகளான சில்வியா வேலண்டியனை லவ்வடிக்கிறாள். வேலண்டியனும் பதிலுக்கு லவ்வடிக்கிறான்.
இங்கே புரோட்டியஸின் அப்பா அவனை ஒரே திட்டு.
“உன்ன போல பிள்ளதான வேலண்டியனும். அவன் ஒழுங்காயிட்டு பொழைச்சு முன்னேறுலான்லால. நீ மட்டும் இங்கன கிடந்து ஜூலியாவுக்கு லவ் லட்டர் எழுதிகிட்டே இருக்க” என்று ஏசுகிறார்.
புரோடியஸுக்கு ஜூலியாவை விட்டு வேலைக்கு போக மனமில்லாமல் அதே ஊரில் இருக்கிறான்.
ஒருநாள் இப்படி ஜூலியா எழுதிய கடிதத்தை புரோட்டியஸ் படித்துக் கொண்டிருக்கும் போது அப்பா வருகிறார்.
“கையில என்ன லட்டர்”
Image result for The Two Gentlemen of Verona

“அது வந்துப்பா மிலன்ல வேலண்டியன் இருக்கான்ல. அவன் எனக்கு வேலை தேடி வெச்சிருக்கானாம். லட்டர் போட்டிருக்கான்” என்று ஒரே ஒரு பொய்யை சொல்லிவிடுகிறான்.
“பரவாயில்லையே இந்த வேலண்டைன் பய நல்ல பயலால இருக்கானே” என்று அப்பா நன்றி கடிதம் போடுகிறார்.
வேலண்டைன் இதைப் படித்து குழம்புகிறான். அப்புறம் இது தன் நண்பன் புரோடியஸின் குறும்பாகத்தான் இருக்க வேண்டும் என்று யூகித்து,சும்மா இல்லாமல் உண்மையிலேயே நண்பனுக்கு வேலை தேடி வைத்து கடிதம் எழுதுகிறான்.
இதைப் பார்த்து புரோடியஸுக்கு அதிர்ச்சி.
பொத்தாம் பொதுவாக சும்மா சொன்ன பொய்யால் இப்போது உண்மையிலேயே மிலன் நகருக்கு போக வேண்டியதிருக்கிறதே என்று எரிச்சலில் காதலி ஜூலியாவை விட்டு பிரிய மனதில்லாமல் பிரிகிறான்.
வேலண்டைன் என்ன வேலை பார்க்கிறானோ அதே வேலைதான் புரோட்டியஸுக்கும்.
கொஞ்சநாள் நன்றாக இருந்த புரோடியஸ் வேலண்டைனுக்கும் மிலன் நகரத்து பிரபுவின் மகள் சில்வியாவுக்கும் உள்ள காதலைக் கண்டு பொறாமைப்படுகிறான்.
நல்லதொரு சந்தர்ப்பத்தில் மிலன் நகர் பிரபுவிடம் வேலண்டைனை மாட்டிவிடுகிறான்.(வேலண்டைன் மாட்டிக்கொள்ளும் காட்சி சுவாரஸ்யமானது)
”கொமரு இருந்தா கைப்பிடிச்சி இழுப்பியோ” என்று வேலண்டைனை அடித்து துரத்திவிடுகிறார் பிரபு.
இப்போது புரோட்டியஸ் கைக்கு அதிகாரம் வந்து விடுகிறது.
அவன் சைடுவாக்கில் நண்பனின் காதலியான சில்வியாவுக்கு ரூட் விடுகிறான். சில்வியா “போயேம்பல பம்ளிமாஸு” என்று திட்டிவிடுகிறாள்.
எப்படி சில்வியாவை பணிய வைப்பது என்று தெரியவில்லை.
புரோடியஸிடம் அவனிடம் புதிதாய் சேர்ந்த உதவியாளனிடம் ஐடியா கேட்கிறான். அதன்படி காதல் கடிதம் எழுதி கொடுத்து விடுகிறான்.
உதவியாளனும் சில்வியாவுக்கு புரோட்டியஸிப்ன் கடிதத்தை கொடுத்துக் கொண்டே இருக்கிறான். சில்வியா மயங்குவதாய் இல்லை.
கடைசியில் வேலண்டைனுக்கும் புரோட்டியஸுக்கும் சண்டை வந்து புரோடியஸ் திருந்தும் போது சொல்கிறான்
“ச்சே என் சைத்தான் மனதால் என் காதலி ஜுலியை மறந்துவிட்டேனே. இப்போ அவள எங்கப் போய் தேடுவேன்” என்று வருத்தமடைகிறான்.
அப்போது புரோடியஸின் உதவியாளன் தன் மாறுவேஷத்தை கலைத்து
“கொய்யால நான்தாண்டா உன் லவ்வர் ஜூலியா. ஊர் விட்டு ஊர் வந்தா லவ் பண்ணுன பொண்ணு கிட்டயே இன்னொரு பொண்ணுக்கு லட்டர் கொடுத்து விடுவ என்ன” என்று திட்டுகிறாள். சுபமாக முடிகிறது.
இதில் பாருங்கள் புரோட்டியஸ் தன் காதலி எழுதிய கடிதத்தை, நண்பன் எழுதிய கடிதம் என்று அவன்அப்பாவிடம் சொன்ன சின்னப் பொய் எங்கல்லாம் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று
இன்னொரு ஜாலியான ஒப்பீடு
சுவப்னவாஸவதத்தம்
என்ற சமஸ்கிருத நாடகத்தில் உதயணின் மனைவி வாசுவதத்தை தன் கணவன் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும்(நாட்டின் நன்மைக்காக) என்று ,
தான் தீப்பிடித்து எரிந்தது மாதிரி செட்டப் செய்து தப்பிக்கிறாள்.
உதயணன் தன் முதல் மனைவி வாசுவதத்தை இறந்துவிட்டதாக கவலையடைகிறான். இரண்டாவது திருமணம் முடிக்கப் போகும் பத்மாவதியிடம் வாசுவதத்தை தோழியாக இருக்கிறாள்.
அதன் மூலம் உதயணன் எப்படியெல்லாம் தன்னை நினைத்து உருகுகிறான் என்பதை அறிந்து கொள்கிறாள்.
முதல் மனைவி வாசுவதத்தையைஅவ்வளவு லவ் பண்ணுறான் உதயணன் .அதை அவன் பக்கத்தில் இருந்தே கேட்கும் அருமையை வாசுவதத்தை பெறுகிறாள்.
ஆனால் இந்த ’The Two Gentlemen of Verona’ வில் வரும் புரோட்டியஸோ லவ் பண்ணிகிட்டு இருக்கிற பொண்ணு கிட்டயே இன்னொரு பொண்ண லவ் பண்ணறதப் பத்தி டிஸ்கஸ் செய்திருக்கான் ராஸ்கல்ஸ்...
வாசுவதத்தைக்கு எப்படி இருந்திருக்கும்.
ஜூலியாவுக்கு எப்படி இருந்திருக்கும்..

Prime number என்றால் என்ன ? Vijay Bhaskarvijay

Prime number என்றால் என்ன ?
ஒரு நம்பர் ஒன்று (1) மற்றும் அதே நம்பரால் மட்டுமே மீதம் வராமல் வகுபட்டால் அது பிரைம் நம்பர் என்ற பகா எண்கள் ஆகும்.
6 என்ற எண் 1,2,3,6 ஆகிய எண்ணால் வகுபடும். அது பிரைம் நம்பர் கிடையாது.
7 என்ற எண் 1 மற்றும் அதே எண்ணான 7 னால் மட்டுமே மீதமில்லாமல் வகுபடும்.
அப்படியானால் 7 பிரைம் நம்பர்.
Prime Number தெரியாதவங்க இருக்க முடியாது என்றாலும் ஒருதடவ சொல்லிக்கிறேன்.
இப்போ இந்த Prime Number களோட வர்க்கம் (Square) எடுத்துக் கொள்வோம்.
7 x 7 = 49
11 x 11 = 121
103 x 103 = 10609
இப்படி பகா எண்கள் என்ற பிரைம் நம்பர்களோட வர்க்கத்துல இருந்து “1” கழிச்சிட்டா மீதம் வர்ற விடை எண் ‘24’ என்கிற எண்ணால் மீதம் வராம வகுபடும்.Image result for Prime number
7 x 7 = 49
49-1 = 48
48/24 = 2
103 x 103 = 10609
10609-1 = 10608
10608/24 = 442
நான்கு இலக்க Prime number எடுத்துக்கலாம்
1777 x 1777 = 3157729
3157729 - 1 = 3157728
3157728 / 24 = 131572
2, 3 எண்களைத் தவிர,
எவ்வளவு பெரிய பகா எண்கள எடுத்தாலும்,
அதுகளோட வர்க்கத்துல இருந்து ஒண்ணு கழிச்சிட்டு
24 நம்பரால டிவைட் பண்ணினா
மீதம் எதுவும் கிடைக்காது.
Primenumber² - 1 = ஒரு நம்பர் கிடைக்கும்...
அந்த நம்பரோட Factor ஆ 24 கட்டாயம் இருக்கும்...
Prime Numbers களுக்கும் ‘24’ க்கும் இப்படி ஒரு உறவு இருக்கிறது ஆச்சரியமாத்தான் இருக்குது இல்ல.
சின்னப் பசங்களுக்கு, இரண்டாம் வகுப்பு மூன்றாம் வகுப்பு படிக்கிற பசங்களுக்கு கூட இந்த கணித அழகு பற்றி சொல்லலாம்

Friday, December 14, 2018

அக்பர் - பைராம்கான் - Vijay Bhaskarvijay

அக்பர் - பைராம்கான்
இடையே நடந்த Mind Game ,
உளவியலில் ஆர்வமுடையவர்களை ஈர்க்கும் விஷயமாக நிச்சயம் இருக்கும்.
அக்பரின் அப்பாவான மன்னர் ஹிமாயூன் வெற்றி பெற உழைத்தவர் பைராம்கான்.
அக்பரை மிகச்சிறுவனாக இருக்கும் போதே பைராம்கானுக்கு தெரியும்.
அக்பரையும் பாதுகாத்தவர் பைராம்கான்தான். மிக சிறுவயதிலேயே மாமன்னர் பொறுப்பை அக்பர் ஏற்ற போது அக்பருக்கான மரியாதையை பெற்றுத் தருவதில் பைராம்கான் குறியாய் இருந்தார்.
பைராம்கான் அக்பருக்கு நடத்திய முடிசூட்டு விழாவில் அனைத்து மாகாண தளபதிகளும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்றார்.
அதில் ஒருவர் மட்டும் அக்பர் மாமன்னரானதை விரும்பவில்லை போலும்.
அவர் “நான் ஹிமாயூன் மன்னர் இறந்த துக்கத்தில் இருக்கிறேன். நான் அக்பர் முடிசூட்டு விழாவுக்கு வரவில்லை. அதற்கு பதிலாக ஹிமாயூன் கல்லறைகு போகிறேன்” என்று விழாவை தவிர்த்தார்.
பைராம்கான் விடவில்லை அவரை கட்டி இழுத்து வந்து “மாமன்னர் அக்பர் முடிசூட்டு விழாவுக்கு வராதது ராஜதுரோகம்” என்று தண்டனை கொடுத்தார்.
அந்த தண்டனைதான் அனைத்து மாகாண நிர்வாகிகளும் அக்பரைக் கண்டு பயப்படும், மரியாதை கொடுக்கும் சம்பவமாக இருந்தது.
அக்பரை மாமன்னராக ஏற்றுக் கொண்டார்கள்.
சர்வாதிகாரத்தில் இந்த அடக்குமுறை மிக முக்கியமான யுத்தி. சர்வாதிகாரிக்கு எதிராக சிறிய கல் விழும் போதே அதை வெறித்தனமாக அடக்குதல். அக்கால மன்னர்கள் அனைவரும் சர்வாதிகாரிகள் என்பதால் அக்பரின் மரியாதையை பைராம்கான் அந்த அடக்குதல் உளவியல் வைத்தே காப்பாற்றினார்.

Image result for akbar
முதன் முதலில் அக்பரை மெலிதாக மிக மெலிதாக அவமானப்படுத்திய தளபதியை தண்டிப்பதன் மூலம் பைராம்கான் மற்றவர்களுக்கு அக்பரின் வானாளவிய சக்தியை புரிய வைத்தார்.
ஆனால் அக்பரின் மேல் பைராம்கானுக்கு சிறு அலட்சியம் இருந்தது. மற்றவர்கள் அக்பரை மதிக்க வேண்டும் என்று ஆவேசமாய் இருந்த பைராம்கான் ஆழ்மனதில் “நம்மால்தான் இச்சிறுவன் ஆட்சி செய்கிறான்” என்ற எண்ணம் இருந்தது.
அக்பரைக் கேட்காமலேயே சில மரண தண்டனைகள் கொடுக்கிறார் பைராம்கான்.
இப்போது அக்பரின் உளவியலாக அவருக்கு பைராம்கான் மேல்
- அன்பு இருக்கிறது.
- மரியாதை அதிகம் இருக்கிறது.
- பயமும் இருக்கிறது.
- நம்மை சுதந்திரமாக விடவில்லை என்ற எரிச்சலும் இருக்கிறது.
இதில்லாமல் அக்பரின் சிறுவயதில் அக்பரின் அத்தை மகள் சலீமாவை பைராம்கான் திருமணம் செய்து கொள்கிறார்.
இந்த திருமணத்தில் அக்பருக்கு பெரிய விருப்பம் இல்லை. ஆனால் ஹிமாயூன் இல்லாத சமயத்தில் பைராம்கான் கட்டுப்பாட்டில் இருந்த் அக்பரால் எதையும் சொல்ல முடியவில்லை.
ஆனால் அவருக்கு பைராம்கான் தன் அத்தைப் பெண் சலீமாவை திருமணம் செய்தது பிடிக்கவில்லை.
அக்பர் போர் பயிற்சிகளை நன்றாக பயில வேண்டும் என்பதில் பைராம்கான் கண்டிப்பாக இருக்கிறார். இது அக்பர் மனதில் சிறுவனுக்கே உள்ள அடக்குமுறைக்கு எதிரான எண்ணத்தையும் கோபத்தையும் வளர்க்கிறது.
அக்பருக்கு மிகவும் பிடித்த யானை ஏறுதலை பைராம்கான் பாதுகாப்பில்லை என்று தடுக்கிறார். அக்பர் கடுப்பாகி பைராம்கான் ஒய்வெடுக்கும் மாளிகை அருகிலெயே சென்று வேண்டுமென்றே யானைகளை பிளிரவிட்டு பயிற்சி எடுக்கிறார். இது பைராம்கானுக்கு எரிச்சலைக் கொடுக்கிறது.
இன்னொரு பக்கம் அக்பரின் வளர்ப்புத்தாய் மாஹம் அனகாவுக்கும் பைராம்கானுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் அக்பர் சிக்கித் தவித்தார்.
குறிப்பிட்ட சமயத்தில் அக்பரின் ஆழ்மனது பைராம்கானின் அதிகாரத்தை மீற ஆசை கொண்டிருக்கலாம். அதனாலேயே கூட அவர் மாஹம் அன்காவின் பேச்சை அதிகம் நம்பி இருக்கலாம்.
பைராம்கான் படகில் செல்லும் போது யானை ஒன்று கரையில் குளிக்கும் போது பயமுறுத்தி பைராம்கானை தள்ளி விடுகிறது. படகில் விழுந்த பைராம்கான் பதற்றமாகிறார்.
அக்பரோ யானைப்பாகனை இழுத்து வரச்சொல்லி பைராம்கானிடம் மன்னிப்பு கேட்க சொல்கிறார். இதைப் பார்த்த பைராம்கான் சினம் கொண்டு யானைப்பாகனை அக்பரை வகை செய்யாமல் கண்டிக்கிறார்.
தன்னை கான் பாபா மதிக்கவில்லை என்று அக்பர் மேலும் கடுப்பாகிறார்.
குறிப்பிட்ட சமயத்தில் பைராம்கான் மேலுள்ள அதிருப்தி அதிகமாகி அக்பர் அவரை அழைத்து அரசியல் நிர்வாகத்தை விட்டு மெக்கா போக சொல்கிறார்.
பைராம்கான் தன் பரிவாரத்துடன் போகும் போது கூட அவர் கலவரம் செய்வார் என்று அவரை தன் படையை வைத்து ரகசியமாக கண்காணிக்கிறார்.
பைராம்கான் அக்பருக்கு எதிராக இயங்கும் எண்ணமே கிடையாது.
ஆனால் தன் நல் எண்ணம் புரியாமல் அக்பர் தன் மேலேயே உளவு பார்க்க முறியடிக்க படையை அனுப்பி வைத்தது பற்றி எரிச்சலாகி “இதெல்லாம் மாஹம் அனகா வேலைதான். அவளை நான் வெல்வேன்” என்று குரல் எழுப்ப அக்பரின் படைகள் பைராம்கானை முறியடித்து பைராம்கானை கைது செய்து அக்பரிடம் அழைத்து வருகிறார்கள்.
பைராம்கான் அக்பரின் காலில் விழுந்து கண்ணீருடன் அவர் காலில் முத்தமிடுகிறார். அக்பர் “கான் பாபா” என்று அன்போடு அழைத்து தன் அருகே அமர வைத்து கண்ணீரை துடைத்து விடுகிறார்.
மேலோட்டமாய் பார்க்க அதொரு செண்டிமெண்ட் காட்சி மாதிரி தெரிந்தாலும் அதில் அக்பர் உயர்ந்தவர் என்பதை பைராம்கான் ஏற்றுக் கொண்டது பற்றி அக்பர் அடைந்த மகிழ்ச்சியே தெரிகிறது.
அதை பெரிய தவறாக சொல்ல முடியாது. 18 வயதுவரை அக்பர் பைராம்கானை மதிக்கவே செய்தார்.
அக்பரிடம் சொல்லிக் கொண்டு பைராம்கான் மனைவி குழந்தையோடு பயணம் செல்கிறார். பயணத்தில் கொள்ளையர்களால் கொல்லப்படுகிறார்.
பைராம்கானின் மனைவி சலிமா தன் சிறுகுழந்தையோடு அக்பரை பார்க்க மெலிந்து ஏழையாய் வருகிறார்.
தன் அத்தைப் பெண்ணின் நிலைமை கண்டு வருந்துகிறார் அக்பர்.
சலீமாவை அக்பரே திருமணம் செய்து கொள்கிறார். பைராம்கானின் மகன் பின்னால் வளர்ந்து அக்பரின் நம்பிக்கைக்கு உரிய தளபதியாக இருக்கிறான்.
அக்பருக்கு தன் நடுக்கம் பற்றி தெரிந்த ஒரே உயிரான பைராம்கான் மேல் ஒரு எரிச்சல்.
பைராம்கானுக்கு “இவன் பொடியாள்” என்ற ஆழ்மன எண்ணத்தை அவரளவில் கடக்க முடியவில்லை.
சலீமாவை பைராம்கான் திருமணம் செய்தது அக்பருக்கு பிடிக்கவில்லை என்பதற்கு ஆதாரம் எதுவுமில்லை. ஒருவேளை
இதுவும் ஒரு காரணமாய் இருக்கலாம் என்பது வரலாற்று யூகம்தான்.
யானைப்பாகனை அக்பரே கொல்லாமல் விட்டது பைராம்கான் மனதை பாதித்திருக்க வேண்டும். “நாம் அக்பரின் உணர்வை நுணுக்கமாக மதித்தது மாதிரி அவர் நம்மை மதிக்கவில்லையே “ என்று பைராம்கான் நினைத்திருக்கலாம்.
உட்சபட்ச அதிகாரத்தை பெறும் அனைவர் வாழ்க்கையிலும் ஒரு பைராம்கான் இருப்பார்.
அக்பர் கழட்டிவிட்டது மாதிரியே பைராம்கானை அவர்களும் கழட்டி
விட்டிருப்பார்கள். விடுவார்கள்.
அக்பர் - பைராம்கான் Mind Game என்பது தனிப்பட்ட சம்பவங்களில் கோர்ப்பு மட்டும் அல்ல.
அவை ஒரு அற்புதமான உளவியல் மாடல்கள்.
அங்கே
அக்பராலும் எதுவும் செய்ய முடியாது.
பைராம்கானாலும் எதுவும் செய்ய முடியாது.
அது அப்படியே, அப்படி அப்படியே நடக்கும்...
இருந்தாலும் தான் வளர்த்த சிறுவனின் காலிலேயே அழுதுகொண்டே முத்தமிட்டு மன்னிப்பு கேட்ட பைராம்கானின் முகபாவனை நினைத்தால் கஷ்டமாய்தான் இருக்கிறது.
அக்பருக்கும் அது மனவேதனையை கொடுத்திருக்கும்.
அதே சமயம் ”அதிகார உணர்வு” என்றும் வீரிய உணர்வு அதை வேகமாக கடந்தும் போயிருக்கும்.
கடந்து போனால்தான் அதிகாரத்தை அடையமுடியும் என்பதை பதினெட்டு வயது சிறுவனான அக்பர்
உணர்ந்த காரணத்தால்தான்
அவரால் மாமன்னராய் மொத்த இந்தியாவையே
கட்டி ஆட்சி செய்ய முடிந்தது...

தோசை சுடும் போது - விஜய் பாஸ்கர்விஜய்

தோசை சுடும் போது
தோசைக்கல்லு சூடாகும் போது அதுல நீரத் தெளிச்சா கல்லுல ஒட்டி மெல்ல ஆவியா போகும்.
இன்னும் தோசைக்கல்லு சூடாகி சரியா 100 டிகிரி செல்சியஸ் வரும் போது தண்ணி தெளிச்சா அந்த நிர்துளிகள் உடனே ஆவியா போயிரும்.
ஆனால் 100 டிகிரி செல்சியஸ் தாண்டி நல்லா சூடாகும் போது நீர் துளிகள் கல்லுல விழுந்தா அது ஆவியா உடனே போகாது.
அந்த நீர்த்துளிகள் ஒருமாதிரி துள்ளி துள்ளி ஒடும்.
நாம இத பார்த்தும் பார்க்காதது மாதிரி தோசை சுட போயிருவோம்.
ஆனால் 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜெர்மன் டாக்டரான Leidenfrost ஏன் அப்படி துள்ளி துள்ளி ஒடுதுன்னு கேள்வி கேட்கிறாரு. யோசிக்கிறாரு.
யோசிச்சி 1756 ஆவது வருடம் அதோட காரணம் கண்டுபிடிச்சி அத Leidenfrost Effect அப்படின்னு சொல்றாரு.
Leidenfrost Effect அப்படின்னா...
எப்ப ஒரு சமதளம் அதிகம் சூடாகி 100 டிகிரி செல்சியஸ் மேல போகும் போது
அது மேல ஒரு நீர்துளியை விடும் போது நீர் துளியோட கீழ் பக்கம் இருக்கிற கொஞ்சம் இடம் உடனே ஆவியாகி அந்த நீர்துளிக்கு ஒரு Air Cushion மாதிரி செயல்படுது.
அந்த Air Cushion மேல உட்காந்துகிட்டுதான் நீர்த்துளி இங்கும் அங்கும் ஒடுது.
இதக் கேட்க எளிதா இருந்தாலும் முக்கியமான கண்டுபிடிப்பாகும்.
Leidenfrost Effect நீர்ல மட்டுமில்ல பல திரவங்கள்ல நடக்கும்.
உதாரணமா Liquid Nitrogen துளிகளை நம்மோட தரையில விட்டாலே அது Leidenfrost Effect காட்டும்.
ஏன்னா திரவ நைட்ரஜனப் பொறுத்தவரை நம்ம சாதரண வெப்பநிலையே கொதி வெப்ப நிலைதான். அது ரொம்ப ரொம்ப குளிர்லதான் திரவமா இருக்கும்.
அதில்லாம Orbeez ball நம்ம எல்லோரும் பார்த்திருப்போம்.
Image may contain: text that says "Drop of liquid held up by layer of vapor 0.2 mm 0.1 mm Hot surface"

குட்டியா கடுகு மாதிரி இருக்கும் தண்ணில ஊறப் போட்டா பெரிசாகும்.
அதோட அளவு மாதிரி நூறு மடங்குவரை பெரிதாகும் பாலிமர்கள்தான் Orbeez ball.
கலர் கலராய் இருக்கும்.

Related image
அதை வாங்கி ஊறப்போட்டு அதை சூடான பாத்திரத்தில் ( 100 டிகிரிக்கும் மேலே) போட்டால் அந்த Orbeez ball என்ற பந்துகள் துள்ளிக்கொண்டே இருப்பதை பார்க்கலாம்.
அதற்கு காரணமும் இந்த Leidenfrost Effect தான்.
இரவு 12 மணிக்கு இப்பதிவை இதுக்கு மேல நீட்ட கடுப்பா இருக்கு.
Leidenfrost Effect புரிஞ்சதா இப்ப... அதான் நோக்கம்..
அடுத்த தடவ தோசை சுடும் போது உங்கள் வீட்டு வாண்டுகளை அழைத்து Leidenfrost Effect Demo காட்டுங்கள்.
அவ்ளோதான்