Monday, December 3, 2018

ஈரம் கசியும் ஜென்னியின் கடிதம்.

நன்றி: திரு.சூர்யா சேவியர்

ஈரம் கசியும் ஜென்னியின் கடிதம்.
(வாழ்விற்கும்,சாவுக்கும் போராடிக்கொண்டிருந்தான்.அவனுக்கிருந்த வேதனையில் அவன் பலமாக உறிஞ்சியத்தின் விளைவாக எனது மார்பு உரசலுக்கு இலக்காகி தோல் வெடித்து,நடுங்கும் அவனது சிறிய வாய்க்குள் ரத்தம் கொட்டியது.)
அந்த வாழ்க்கையில் ஒரு நாளை நான் சித்தரித்துக் காட்டுகிறேன். இருந்தது இருந்தபடி சரியாகக் காட்டுகிறேன்.இதைப் பார்த்தால் இத்தகைய இன்னல்களை மிகச் சில நாடு கடத்தப்பட்டவர்களே அனுபவித்திருப்பார்கள் என்பதைக் காணலாம்.
செவிலியத்தாய்கள் வைப்பது என்றால் செலவுகள் அதிகம்.எனவே எனது மார்பிலும்,முதுகிலும் தொடர்ந்து பயங்கரமான வேதனைகள் இருந்தபோதிலும் குழந்தைக்கு நானே பாலூட்டுவது என்று முடிவு செய்தேன்.
ஆனால் இந்தப் பூஞ்சைக்குழந்தை பாலுடன் சேர்த்து அளவற்ற கவலையினை அடக்கி மூடப்பட்ட வருத்தங்களையும் சேர்த்து உண்டதால் எப்பொழுதுமே பரிதாபகரமாக இரவும் பகலும் கஷ்டப்பட்டபடி இருந்தது.
இந்த உலகிற்கு வந்தநாள் முதல் அவன் ஒரு இரவிலாவது நிம்மதியாக உறங்கியதில்லை.அதிகம் போனால் இரண்டு மூன்று மணி நேரம் இதுவும் அரிதாகவே.அண்மையில் அவனுக்கு கடுமையான வலிப்புகள் வரத் தொடங்கின.
வாழ்விற்கும்,சாவுக்கும் போராடிக்கொண்டிருந்தான்.அவனுக்கிருந்த வேதனையில் அவன் பலமாக உறிஞ்சியத்தின் விளைவாக எனது மார்பு உரசலுக்கு இலக்காகி தோல் வெடித்து,நடுங்கும் அவனது சிறிய வாய்க்குள் ரத்தம் கொட்டியது.
இவ்வாறு ஒரு நாள் அவனுடன் நான் அமர்ந்திருந்தபோது எங்கள் வீட்டு நிர்வாகத்தை பார்ப்பவள் உள்ளே வந்தாள்.குளிர்காலத்தில் அவளிடம் நாங்கள் 250 தேலர்கள் கொடுத்திருந்தோம்.எதிர்காலத்தில் வாடகைப் பணத்தை அவளிடம் கொடுக்காது அவளது வீட்டு சொந்தக்காரரிடம் கொடுப்பதாக உடன்பாடு செய்திருந்தோம்.
அவர் அவள் மீது ஜப்தி வாரண்ட் வைத்திருந்தார்.அவள் இந்த உடன்பாட்டை மறுத்து தனக்குச் சேரவேண்டிய 5 பவுன்களைக் கொடுக்குமாறு கேட்டாள்.இந்த சமயம் எங்களிடம் பணம் இருக்கவில்லை.(அதுவரையில் நெளட்டின் கடிதம் வந்து சேரவில்லை)
எனவே இரு அதிகாரிகள் வந்து எனது உடைமைகள் எல்லாவற்றையும் கம்பளிதுணிகள்,படுக்கைகள்,துணிகள் அனைத்தையும் -எனது அப்பாவிக் குழந்தையின் தொட்டிலையும் கூட பறிமுதல் செய்து ஜப்தி செய்தனர்.என் புதல்வியர் நின்றபடி கரைந்தழுதனர்.
இரண்டே மணி நேரத்தில் அனைத்தையும் எடுத்துச்செல்வதாக அச்சுறுத்தினார்கள்.அப்படி நேரிட்டால் நான் குளிரில் உறைந்து போகும்
குழந்தைகளுடன் நோயுற்ற மார்புடன் வெறுந்தரையில் படுக்க வேண்டியிருக்கும்.
எங்கள் நண்பர் ஷ்ராம் உதவி தேடி நகரத்திற்கு விரைந்தார்.அவர் ஒரு குதிரை வண்டிக்குள் ஏறினார்.ஆனால் குதிரைகள் மிரண்டு ஓட்டம் பிடித்தன.அவர் குதித்துத் தப்பினார்.ஆனால் காயமுற்று ரத்தம் பீறிட்டது.
நடுங்கிக்கொண்டிருக்கும் என் குழந்தைகளுடன் நான் அழுது கொண்டிருக்கும்போது அவரைக் கொண்டுவந்தார்கள்.
(இது கடிதத்தின் ஒரு பகுதியே)Image may contain: 2 people, text

Sunday, December 2, 2018

திருக்குறள் - 2

குறள் 2:

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றுஇருந்தாலும் அதனால் என்ன பயன்?. ஒன்றுமில்லை.
மு.வரதராசனார் உரை:
தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?.
சாலமன் பாப்பையா உரை:
தூய அறிவு வடிவானவனின் திருவடிகளை வணங்காதவர், படித்ததனால் பெற்ற பயன்தான் என்ன?.
பரிமேலழகர் உரை:
கற்றதனால் ஆய பயன் என் - எல்லா நூல்களையும் கற்றவர்க்கு அக்கல்வி அறிவான் ஆய பயன் யாது?; வால் அறிவன் நல் தாள் தொழாஅர் எனின் - மெய்யுணர்வினை உடையானது நல்ல தாள்களைத் தொழாராயின்? (எவன் என்னும் வினாப்பெயர் என் என்று ஆய், ஈண்டு இன்மை குறித்து நின்றது. 'கொல்' என்பது அசைநிலை. பிறவிப் பிணிக்கு மருந்து ஆகலின் 'நற்றாள்' என்றார். ஆகம அறிவிற்குப் பயன் அவன் தாளைத் தொழுது பிறவியறுத்தல் என்பது இதனான் கூறப்பட்டது.
மணக்குடவர் உரை:
மேற்கூறிய வெழுத்தினா னாகிய சொற்க ளெல்லாங் கற்றதனானாகிய பயன் வேறியாது? விளங்கின வறிவினை யுடையவன் திருவடியைத் தொழாராயின். சொல்லினானே பொருளறியப்படுமாதலான் அதனைக் கற்கவே மெய்யுணர்ந்து வீடுபெறலாகும். மீண்டும் வணக்கம் கூறியது எற்றுக்கென்றாற்கு, இஃது அதனாற் பயனிது வென்பதூஉம், வேறுவேறு பயனில்லையென்பதூஉம் கூறிற்று. `கற்பக் கழிமட மஃகும் என்றாருமுளர்.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
எல்லா நூல்களையும் கற்றவனுக்கு அக்கல்வி அறிவால் உண்டான பயன் என்னவென்றால். தூய அறிவினன் - மெய்யுணர்வினன் - ஆகிய இறைவனுடைய நல்ல அடிகளைத் தொழுதல் ஆகும்.
Translation:
No fruit have men of all their studied lore, Save they the 'Purely Wise One's'feet adore.
Explanation:
What Profit have those derived from learning, who worship not the good feet of Him who is possessed of pure knowledge ?.

வித்யாசங்கரர் கோயில்.சிருங்கேரி

வித்யாசங்கரர் கோயில்.சிருங்கேரி.சாரதா பீடத்தின் 10 ஆவது குருவான வித்யாசங்கரருக்காக 12ஆவது குருவான வித்யாரண்யர் எழுப்பியது.சாளுக்கிய ஓய்சாளக் கலைகளின் ஒருங்கிணைப்பை இக் கோயிலில் காணலாம்.வித்யாரண்யர் விஜயநகர பேரரசைத் தோற்றுவிப்பதற்கு காரணமாக இருந்தவர்.
Image may contain: people standing, cloud, sky and outdoorImage may contain: sky, cloud and outdoor

Saturday, December 1, 2018

யார் இந்த பிர்சா?

நவம்பர்15 ஆம் தேதியில்தான் இதே நள்ளிரவு வேளையில்தான் உலிகாட் வனப்பகுதியில், பிர்சா என்ற ஆண்குழந்தையை..
அந்த.
பழங்குடித்தம்பதிகள் பெற்றெடுத்தார்கள்.
பிர்சா பிறந்த அந்த 1875 ஆம் ஆண்டு மழை பொய்த்திருந்தது விளைச்சல் பட்டுப்போய் பஞ்சம் தலைவிரித்து ஆடிக்கொண்டிருந்தது. மக்கள் ஒருவேளை சோற்றுக்காக அல்லல்பட்டுக்கொண்டிருந்தார்கள்.
பிர்சா ஓயாமல் அழுதுகொண்டிருந்தான்
எடைகுறைவாகப்பிறந்த அழுதுகொண்டிருக்கும்இந்த நோஞ்சான் குழந்தைதான் இந்த மண்ணில் நாளை வெள்ளையர்களை எதிர்த்து ஒரு வீரஞ்செரிந்த விடுதலைப்போரை முன்நின்று நடத்தப்போகிறான் என்பதை அந்தத்தம்பதியினரோ முண்டாக்களோ அறிந்திருக்கவில்லை..
அதனால்தான்..
வறுமையின் கோரப்பிடியால் சிக்கியிருந்த சுகணாவும் - ஹர்மியும் பிர்சாவை வளர்க்கமுடியாமல்,ஹர்மியின் தம்பியிடம் ஒப்படைத்தார்கள்.
பிர்சா பிறக்கும் முன்பு அந்த மலைசூழ்ந்த மண் எப்படி இருந்தது ?
தொழிற்புரட்சிஎன்னும் கோரத்தாண்டவத்தால்
ஒரு..குச்சிக்கம்பைக்கூட விட்டுவைக்காமல், சொந்த நாட்டையே சூறையாடிவிட்ட ஆங்கிலேயர்கள், தங்களது ஆளுகைக்குட்பட்ட காலனி நாடுகளில் . தங்களுக்கு தோதான மரங்களையும் வளங்களையும் தேடியலைந்துகொண்டிருந்தார்கள் .
இரும்புக்கு நிகரான உறுதியுடைய மரங்களும், வாழ்வில் அவர்கள் பார்த்திராத விதவிதமான விலங்குகளும் தங்கமும் நிலக்கரியும் கொட்டிக்கிடக்கும் இந்திய வனங்களும் அவர்களுக்குள் பேராசையை மூட்டிவிட்டிருந்தது.
கொள்ளைக்கான முன் ஏற்பாடுகளை கனகச்சிதமாகத்திட்டமிட்டு சத்தமில்லாமல் புளூபிரிண்டாக்கி மேசைக்குள் வைத்துக்கொண்டார்கள்.
ஈவிரக்கமில்லாமல் எந்தவிதமான அறிவிப்பும் இல்லாமல் அவர்களின் அந்த சூறையாடல் திட்டத்தை பணியடர்ந்த வசந்தகாலத்தின் ஒரு அதிகாலையில்தான் செயல்படுத்தத்தொடங்கினார்கள்.
அன்றைக்கு இருந்ததில் எது அதி நவீன எந்திரமோ, அந்த எந்திரமும்.. எது அதி நவீன போக்குவரத்துமோட்டாரோ,அந்த போக்குவரத்துமோட்டார்களும் பச்சை உடையணிந்த வீரகளோடு,எங்கெல்லாம் வனம் இருக்கிறதோ, அங்கெல்லாம் வந்து சாரைசாரையாக அணிவகுத்து நின்றன.
என்ன நடக்கிறதென்று சுதாகரித்துக்கொள்ளும்முன்பே, பழங்குடிகளின் வனங்களை அவர்கள் இஞ்இஞ்சாக துளைக்கத்தொடங்கினார்கள் ,குறுக்கும் நெடுக்குமாக கீரீச்சிட்டுப்பறந்து தலைகுத்திப்போனது பறவைகள். அந்நியர்களின் உடல் வாசத்தால் அலர்ஜியான யானைகள் சக்தியுள்ளவரை பிளிரி ஓய்ந்த்து.
தேவைக்கு அதிகமாக ஒரு சுள்ளியைக்கூட உடைத்துபழக்கமில்லாத, தேவைக்கு அதிகமாக ஒரு பழத்தைக்கூடப்பறித்து உண்ணவிரும்பாத பழங்குடிகள்… தங்களுக்கு பாலூட்டிய தாய்போன்ற வனத்தின் மடி தங்களது கண்முன்னே ஈவிரக்கமில்லாது அறுக்கப்படுவதைக்காணச்சகிக்காது கொதித்தெழுந்து கூச்சலிட்டார்கள். என்ன வந்தாலும் சரியென்று கூடி நெருங்கி மூர்க்கமாக எதிர்த்து நின்றார்கள்
நிச்சய்மாய் இந்த எதிர்ப்பை ஆங்கிலேயர்கள் எதிர்பார்க்கவில்லை.
அவர்கள் துப்பாக்கியை நீட்டி வானத்தை நோக்கி சுட்டார்கள்
மக்கள் துப்பாக்கிக்கும் பீரங்கிக்கும் அஞ்சவில்லை மாறாக தங்களது உயிரணைய காட்டுக்காக் உரிமைக்காக தங்களை நெஞ்சை நிமிர்த்திநின்றனர்
தங்களால் எந்தெந்த வழிகளிலெல்லாம் எதிர்ப்பை காட்டமுடியுமோ அந்தந்த வழிகளிலெல்லாம் எதிர்ப்பைக்காட்டினர்
பூட்டுகள்சரசரக்கும் சத்தம் கேட்டால் ஓடி ஒளிந்துகொள்ளும், மேலடை அறியாத ‘நாகரீகம்’ அறியாத பழங்குடிகளை அவர்கள் அந்த நாள்வரை ஒரு பொருட்டாகவே மதித்ததில்லை.,,
அப்படிப்பட்டவர்கள் இப்படி எதிர்த்து நிற்பதை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை
நாளுக்கு நாள் இந்த போராட்டங்கள் பம்பாய் மாகாணமெங்கும் பற்றிப்பரவியது. கோபத்தீ கொளுந்துவிட்டு எரிந்த்து நிலமை கட்டுக்குள் அடங்காமல் போகவே, பதறிய அதிகாரிகள் மெற்கொண்டு நடக்கவேண்டியவை குறித்து ஆலோசனை செய்தனர் அது சதியாகத்தான் இருந்திருக்குமேதவிர வேறு எதுவுமாக இருந்திருக்கவாய்ப்பிலை
ஒரு இரவில் அந்த சதி அறிவிப்பு வந்தது
வனப்பகுதிலிருக்கும் எல்லா மரங்களும் எல்லா விலங்குகளும் எல்லா பறவைகளும் எல்லா வளங்களும் எல்லா நிலங்களும் ஆங்கில அரசுக்கு சொந்தமானது, இதில் தலையிடவோ இங்கே நடக்கும் பணிகளை தடுக்கவோ
யாருக்கும் எந்த உரிமையுமில்லை ஒரு குயில் கூட தங்களை கேட்காமல் கூவக்கூடாது என்று அறிவித்தது. திட்டமிட்டுத் தொடுக்கப்பட்ட வழக்கொன்றில் இந்த அறிவிப்பை ஒரு தீர்ப்பாக மாற்றி சட்டமாகவும் இயற்றினார்கள்
வனத்திற்கென்று ஒரு துறையைத்தொடங்கி எல்லா அதிகாரங்களையும் அந்ததுறையிடம் குவித்துக்கொண்டார்கள் ,அதற்கு தோதாக வனச்சட்டத்தை வகுத்துக்கொண்டார்கள்
அந்த வனச்சட்டத்தின்படி ஆதிவாசிகள் தாங்கள் தங்கியிருக்கும் வீடுகளுக்கு தாங்கள் உழுதுகொண்டிருக்கும் துண்டுதுக்கடா நிலங்களுக்கு, தாங்கள் ஆடுமாடு மேய்க்கும் மேய்ச்சல் நிலங்களுக்கு.. வனத்துறையிடம் அனுமதி வாங்க வேண்டும் அவர்கள் அனுமதி கொடுக்கவேண்டுமென்றால் ஒரு வரி செலுத்தவேண்டும் அப்படி வரி செலுத்தாவிட்டால் அந்த நிலங்களைவிட்டு வெளியேறவேண்டும் என்று எச்சரித்தது அதன்படி செயல்படவும் தொடங்கியது
வனத்துறையை மேலும் விரிவாக்கி பல்லாயிரம் பணியாளர்களை நியமித்து அதை ஒரு முறையான அமைப்பாக்கி பம்பரமாக செயல்பட ஆரம்பித்தார்கள்
நிற்க...
இந்த சூழலில்தான் வனத்தின் தென்கிழக்காக இருந்த தனது மாமாவின் கூரையில் கும்லா மலையின்அருவியும் அதன் காற்றும், பழங்களும் விலங்குகளின் இரைச்சியும் பிர்சாவுக்கு தேவையான ரத்தத்தையும் சதையையும் தந்துதவுகிறது
அவன் மெல்ல தவழத்தொடங்குகிறான்
ஆனால்
1880ம் ஆண்டின் இறுதிக்குள், ஆங்கில அரசு பல்வேறு தந்திரங்கள் மூலமாக கிட்டத்தட்ட எல்லா வனங்களையும் தங்கள் ஆளுகைக்குள் கொண்டுவந்துவிட்டது
அதே நாள் சோட்டா நாகபுரியில் இடத்தில் நிலச்சுவாந்தார்களையும் வட்டிக்காரர்களையும் அழைத்து ஆங்கில அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள்
'வரியாக பணம் கட்ட நீங்க '?
"எவ்ளோ காசு வேணுமின்னாலும் கட்டறோம் நிலத்த நாங்க எடுத்துக்கறோம்"
போட்டிபோட்டுக்கொண்டு அந்த நிலங்களை வட்டிக்காரர்களும் வசதிபடைத்தவர்களும் வளைக்கத்தொடங்கினர்.
பழங்குடிகளின் கண்முன்னாலேயே நிலத்தில் இறங்கி எல்லைபிரித்து வேலி போடத்தொடங்கினர்
கரைகளில் உட்கார்ந்து கண்ணீரோடு பழங்குடிகள் குமுறிகுமுறி அழுதுகொண்டிருந்தார்கள் .
கிட்டத்தட்ட 50 சதவீதமான நிலம் இப்போது அவர்களின் கையைவிட்டு போயிருந்தது மீதி இருந்த நிலங்களுகும் கொஞ்சம் கொஞ்சமாக கைமாறிக்கொண்டிருந்தது
நிலமிழந்த ஆதிவாசிகள் உணவுக்காக உயிர்வாழ வட்டிக்காரர்களிடம் தங்கலை தாங்களே விற்றுக்கொண்டு அடிமைகளாக மாறிக்கொண்டிருந்தனர்.துப்பாக்கிமுனையில் அவர்கள் கசக்கிப்பிழியப்பட்டனர்
1894 ஆம் ஒரு சொட்டு மழையில்லை வீட்டில் ஒரு கைப்பிடி தானியமில்லை பட்டினிசாவுகள் ஆங்காங்கே நிகழத்தொடங்கியிருந்தது
இந்த துயரமான நிலையிலும் வரிக்கட்டாமலிருக்கும் ஆதிவாசிகளின் நிலங்களை கைய்யகப்படுத்த பிரிட்டீஸ் அதிகாரிகள் மூர்க்கமாக முயன்றுகொண்டிருந்தனர்.
முண்டாக்கள் கொதித்தெழுந்தார்கள்
அக்டோபர் 1 ஆம் தேதி ஆயிரக்கணக்கான ஆதிவாசிகள் தங்களது நிலம் பறிபோகக்காரனமாக இருந்த வரிகளை தள்ளுபடிசெய்யக்கோரி வரலாறுகாணா ஆர்பாட்டத்தையும் பிரம்மாண்டமான பேரணியொன்றையும் நடத்தி பிரிட்டீசாரை ஆட்டம்காணவைத்தனர்
பேரணி சோட்டா நாக்பூர் பிரிட்டீஷ் தலைமைஅலுவலகத்தின் முன்னால் வந்து நின்றது. கூடியிருந்த ஆயிரக்கணக்கான முண்டாக்கள் யாரையோ எதிர்பார்த்து ஒருவொருக்கொருவர் பேசிக்கொண்டிருந்தார்கள்
கூட்டத்தின் கடைசியிலிருந்து, ஆட்களை ஒதுக்கிகொண்டே நடுவே புகுந்து... ஒடிசலான தேகம்கொண்ட ஒரு இளைஞன் ஆவேசமாக முன்னேறி வந்துகொண்டிருந்தான்.
20 வயதுகூட நிரம்பாத அந்த இளைஞன்தான் துணிவோடு இந்தப்போரை முன்னின்று வழிநடத்தியவன் என்று பேசிக்கொண்டார்கள் கூட்டம் வழிவிட்டு ஒதுங்கி்... அவனது வாயசைவுக்காக காத்து நின்றது
முன்னால் வந்து அங்கே கிடந்த உயரமான பாறையின் மேலே ஏறி நின்று, அந்த இளைஞன் முழங்கத்தொடங்கினான்
ஜல் ஹமாரே (நீர் நமது)
ஜமீன் ஹமாரே( நிலம்நமது)
ஜங்கில் ஹமாரே (வனம் நமது )
அந்த இளைஞன் முழங்க முழங்க கூட்டமும் அந்த முழக்கத்தை திரும்பத்திரும்ப முழங்கி ஆர்பரித்தது.
அந்த இளைஞன்..வேறு யாருமல்ல உலிஹட்டில் பிறந்து கும்லாவில் வளர்ந்த நோஞ்சான் குழந்தைதான் அது.
நன்றாக வளர்ந்துவிட்டிருந்தான் அவனது குரலும் உடலும் ஏதோ தீர்க்கத்தை தின்று வளர்ந்ததுபோல் மாறிவிட்டிருந்தது.
வசீகரமான சத்திய ஆவேசமாக அவன் எழுப்பிய இந்த முழக்கம், முண்டாக்களுக்குள் புகைந்துகொண்டிருந்த நெருப்பை ஊதிபெருக்கி ஊழித்தீயாக்கியது.
அந்த முழக்கம் மலைகளின் இண்டு இடுக்கிலெல்லாம் இடிமுழக்கமாக ஒலிக்கத்தொடங்கியது.
அது எல்லைகளை கடந்து தடையுடைத்து எங்கும் பரவியது. அது ஒவ்வொரு முண்டாக்களின் இருதயத்துக்குள்ளும் இறங்கி, மாயங்களை நிகழ்த்தத்தொடங்கியது. சோட்டா நாகபுரி போர்கோலம் பூண்டு நின்றது.
இது அவனுக்கு இன்னும் உற்சாகமூட்டியது
பிரிட்டீஷ் படைகளை சமாளிக்க வெறும் முழக்கம் மட்டுமே போதாது என்று உணர்ந்திருந்த பிர்சா மறைந்து தாக்கவும் மூர்க்கமாகப் போரிடவும் கெரில்லாப் போர்ப்படையை தன் சொந்தப் பழங்குடிகளைவைத்தே கட்டத்தொடங்கினான்
நவீன எந்திரங்களை நவீன எந்திரங்களைக்கொண்டு எதிர்கொள்ளவேண்டியதில்லை.மரபார்ந்த போரை ஒரு மரபற்ற போரால்தான் வீழ்த்தமுடியும்.. அது ஒன்றைத்தான் பழங்குடிகள திறம்பட நடத்தமுடியும் என்பதில் பிர்சா உறுதியாக இருந்தான்.
தொடர்சியாக வெள்ளையர்களுக்கு எதிராக பல்வேறு தாக்குதல்களை திட்டமிட்டு அவன் நடத்திக்கொண்டே இருந்தான்.
எத்தனையோ தாக்குதல்களை அவன் நட்த்தியிருந்தாலும், ஆங்கிலேயர்களின் ஆணிவேரை அசைத்துப்பார்த்த அதிமுக்கியமான இரண்டு தாக்குதல்களாக இதையே பிர்சா நினைத்தான்
1900 ஜனவரி 4
முண்டாவின் முக்கிய தளபதியான கயா முண்டா செய்ல் மலையில் உள்ள எட்கடியில் இருந்தான் ,கயாவை கைதுசெய்துவிட்டால் குறிப்பிட்ட பல கிராமங்களில் பழங்குடிகளின் கிளர்சியை அடக்கிவிடலாம்.அதேநேரத்தில் பிர்சாவின் வலதுகையை உடைத்தமாதிரியும் இருக்கும் என்று ஆங்கில மூளை கணக்குபோட்டது. அந்தக்கணக்கைத்தீர்க்கும் வழிகளோடு போலீஸ் படையொன்று எட்கடி கிராமத்தை நோக்கி வந்துகொண்டிருந்தது.
பொலீஸ் நுழையப்போவதை முன்னமே அறிந்த பழங்குடி ஒற்றன் ஒருவன், பறவையைப்போல ஒர் சங்கேத ஒலியை கிழக்குதிசையை நோக்கி ஒலிக்கவிட்டிருந்தான்
அது இரண்டு குன்றுகளைத்தாண்டியிருந்த அணிக்கு சேர்ந்துவிட்டது. எப்படி இதை சமாளிக்கவேண்டும் என்பதற்கான எதிர்சங்கேத ஒலியையும் அவர்கள் அனுப்பிவிட்டார்கள்.
போலீஸ் கிராமத்துக்குள் நுழைந்துவிட்டது நாய்களும் கோழிகளும் அச்சத்தில் குலைத்துக்கொண்டு அங்குமிங்கும் ஓடியது நாய்களைத்தேடிக்கொண்டு சிறுத்தை ஒன்று கிராமத்தின் ஓரத்தில் பாய்ந்து விழுந்தது.. என்னதென்று யூகிப்பதற்க்குள் ஒட்டுமொத்த கிராமமும் அவர்கள் மேல் நாலப்புறங்களிலிருந்தும் பாய்ந்து குதறியது
அதில் ஏற்கனவே முண்டாக்கள் பலரையும் கொன்ற போலீஸ்கான்ஸ்டபுள் ஜய்ராம் கொல்லப்பட்டான்.இந்த செய்தி அறிந்த ராஞ்சியின் டெப்ட்டி கமிசனர் ஆயுதம்தாங்கிய போலீஸ் படையொன்றை எட்கடிக்கு அனுப்பிவைத்தான்.
ஆரவாரத்துடன் வந்த அந்தப்படை நீண்ட போராட்டத்துப்பின்பு கயாவை கைது செய்து வீடுகளுக்கு தீ வைத்துவிட்டு வெளியேறியது..
ஆனாலும் ஆயுதம்தாங்கிய போலீஸ்கார்ர்களிடமிருந்து தங்கள் கயாவை மீட்க, முண்டா ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் இணைந்து நடத்திய சமசரமில்லாத மயிற்கூச்செரியும் சண்டை அந்த படையினரிடம் ஒரு அச்சத்தை ஏற்படுத்திவிட்ட்து ஏனென்றால் அவ்வளவு தீர்க்கத்தையும் ராணுவம்போலான ஒரு ஒழுங்கையும் முன் அனுமானம் செய்யமுடியாத ஒரு எதிரியின் வியூகத்தையும் முதன்முதலாக அங்கேதான் அவர்கள் பார்த்தார்கள்
காடுகளுக்குள் சிதறிய முண்டாக்கள் கயா கைதுக்கு பழிவாங்க தயாகிக்கொண்டிருந்தார்கள்
1897ஆம் ஆண்டு காலை 10 மணி
குந்தி காவல் நிலையம் அந்த பகுதிக்கான முக்கியமான கேந்திரமாக இருந்த்து முண்டாக்களுக்கு எதிரான எல்லா திட்டங்களும் அங்கிருந்துதான் தீட்டப்பட்டது .எல்லா முண்டாப்பகுதிகளையும் கண்காணிக்கும் வசதிகளை இந்த காவல்நிலையம்தான் பெற்றிருந்தது இந்த அஸ்த்திவாரத்தை தகர்த்தால் ஆங்கிலேயர்களை ஆட்டம்கானவைக்கலாம் என்று திட்டமிட்ட பிர்சா 400 முண்டாக்களோடு டோம்பரி மலையைவிட்டு இறங்கி குந்தி காவல் நிலையத்தை நோக்கி கருமேகம்போல நகர்ந்தார்கள்
நேரம் 10.12 ஐ தொட்டுவிட்டது..
திட்டமிட்டபடி
சீறிப்பாய்கிற ஈட்டிகளும் அம்புகளும் சுழன்று பறக்கும் கோடாலிகளும்....அந்தக்காவல் நிலையம் ஒரு போர்களம்போல் காட்சியளித்தது
போலீஸ் அதிகாரிகளும் கான்ஸ்டபுள்களும் செய்வதறியாது தினறிப்போய் நாலப்புறமும் சிதறி ஓடுகிறார்கள்.கூட்டத்தை நோக்கி ரகுந்ராம் என்ற போலீஸ்காரன் சுட ஆரம்பிக்கிறான் அவன் குதிரையை இழுக்கும் முன்பு முண்டாவின் கையிலிருந்த அம்பு அவன் குரல்வளையை குத்தி நிற்கிறது.அவன் நின்றுநிதானித்து காவல் நிலையத்தின் வாசலில் வீழ்கிறான்
இப்படித்தான் ஆங்கிலேயர்களை அவன் உண்டு இல்லை என்று ஆக்கிவைத்தான்
1889 தொடங்கி -1895ஆம்ஆண்டுவரை இப்படியான ஒரு வீரஞ்செரிந்த யுத்தத்தைத்தான் அந்தப்பகுதியில் பிர்சா நிகழ்த்திக்கொண்டிருந்தான் இழப்புகளைக்கண்டு அஞ்சாது மேலும் மேலும் திடீர் திடீரென்று ஏறியடித்த பழங்குடிகளின் வீரத்துக்குமுன், கட்டற்ற போர்முறையின் கதிகலக்கும் வடிவத்துக்குமுன்….குகைகளுக்குள்ளிருந்து எழும் மாய வியூகங்களுக்குமுன் தாக்குப்பிடிக்கமுடியாமல்,பல இடங்களில் பிரிட்டீஷ் படைகள் தொடர்ந்து மண்டியிட்டது பல்லாயிரம் சிப்பாய்கள் படைகளைவிட்டு தப்பியோடினர்.
அவமானத்தால் கூனிக்குறுகிய அதிகாரிகள் பிர்சாவை எப்படியாவது பிடித்து இந்தபோரை தமமதாக்கிவிடவேண்டுமென்று கங்கணம் கட்டிக்கொண்டிருந்தனர். "இது ஒரு ஆபத்தான சமிங்கை இதை இப்போதே முடிக்காவிட்டால் நமது அரசுக்கு மிகபெரிய ஆபத்தாக முடியும்" என்று அவ்வப்போது அரக்கபரக்க ஆலோசனைக்கூட்டங்களை நட்த்திக்கொண்டிருந்தார்கள்.
அப்படி ஒரு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி ஆகஸ்ட் 23, 1895 அன்று சூழ்ச்சிசெய்து பிர்சாவை கைதுசெய்து சிறைக்கொட்டடியில் அடைக்கிறார்கள்
கொடூரமான சித்திரவதைக்குப் பின்பு 1897-ல் விடுதலையான பிர்சா மீண்டும் தீவிரமாக இயக்கப்பணிகளை முன்னெடுக்கிறார் .சினம்கொண்ட பிரிட்டீஷ் அரசு அவரை 1900-ல் மீண்டும் கைதுசெய்து சிறையில் அடைத்தது
1900 ஆம் வருடம் ஜீன் 8 ஆம் தேதி
நள்ளிரவு நெருங்கிக்கொண்டிருந்த்து
மெல்ல மெல்ல அடியெடுத்து நிழல்களைப்போல் நடந்துவந்தார்கள் வெள்ளைசிறையதிகாரிகள். கையில் இருந்து பொட்டலத்தைப்பிரித்து குடிக்கவைத்திருந்த தண்ணீரில் அதைக் கலந்துவிட்டு நிம்மதியாகத்தூங்கப்போனார்கள்
ஜூன் 9-ம் தேதி அதிகாலை
ஒரு மாபெரும் வரலாற்றை எழுதிக்காட்டிய, ஆதிவாசிகளின் நம்பிக்கை ஒளியாய்இருந்த, எதிரிகளின் செவிப்பறையில் ஓயாத பேரிடியாய் ஒலித்துக்கொண்டிருந்த மகோன்தமானவீரன், அடிபணியாத தலைவன், தனது 25 வது வயதில், மர்மமானமுறையில் ராஞ்சி சிறையின் 11 ஆம் அறையில் இறந்துகிடந்தார்.
நூறாண்டுகளுக்கும்மேலாகிவிட்டது, அப்போது எப்படியிருந்தார்களோ, என்னமாதிரியான துன்பங்களை அனுபவித்தார்களோ அதே நிலையில்தான் பழங்குடிகள் இன்னும் இருக்கிறார்கள்,அதே வகையான சுரண்டலைத்தான் இப்போதும் அனுபவிக்கிறார்கள் பெயர் அறியாத நோய்களால் ரத்த சோகையால் பட்டினியால் போதிய மருத்துவமின்னமையால், போதிய உணவின்மையால் காப்பகங்களால் வனத்துக்கு வெளியேயும் வனத்துக்கு உள்ளேயும் தினம்தினமும் ஆயிரக்கணக்கானோர் செத்துக்கொண்டிருக்கிறார்கள் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களை அன்னியர்களிடம் இழந்துகொண்டிருக்கிறார்கள். தினம்தினம் தங்களது பெண்களை பலிகொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். துயரம் நிறைந்த தங்களதுவாழ்வை மெளனமாக கடந்துகொண்டிருக்கிறார்கள் அந்த மெளனம் பொருள் பொதிந்தது. அதுதான் இந்த மலைகளின் இண்டு இடுக்குகளெங்கும் பல்வேறு வடிவங்களில் போராடும், புதிய புதிய பிர்சாக்களை மீண்டும் மீண்டும் பிறக்கவைத்துக்கொண்டிருக்கிறது .
பிர்சா முண்டாக்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.....
பகிர்வு : தோழர் Bala Subramanian

கார்த்திகை தீபம் வரலாறு.

நன்றி : திரு. சூர்யா சேவியர்

புத்தமதம் பரவியிருந்த காலத்தில் மடாலபுரம் எனும் ஊரில் புத்தமதத்தை சேர்ந்தவர்கள் பேராமணக்கு, சித்தாமணக்கு எனும் வித்துகளிலிருந்து நெய்யெடுத்து மருந்துகளுடன் உபயோகித்து அதன் நற்பலன்களை அறிந்தனர்.மேலும் தீபம் ஏற்றி குளிர்ந்த பிரகாசத்தையும் கண்டனர்.
இதன் விபரத்தை மன்னனிடம் சொல்ல,அவ்வரசன் ஆமணக்கை அதிகமாக விளைவிக்கச்செய்து,அங்கிருந்த மலையுச்சியில் வெட்டி பள்ளமிட்டு,ஆமணக்கு நெய்யை ஊற்றி, பருத்தி நூல் திரிசெய்து பெரும் தீபம் ஏற்றி விடியும் வரை எரியவிட்டான்.
காலையில் சென்று அந்தத் தீபப்புகையால் மிருகங்களுக்கும்,ஆடு,மாடுகளுக்கும் ஏதேனும் தீங்கு நேரிட்டுள்ளதா என்று ஆராய்ந்தான்.யாருக்கும் ஒரு கெடுதலும் ஏற்படாமல் இருந்ததால் மக்களை வரவைத்து ஆமணக்கு நெய்யை கொடுத்து தீபம் ஏற்றிக்கொள்ள உத்தரவிட்டான்.

Image may contain: fire and night
ஆனால் மக்கள் இதை வீடுகளுக்குள் செய்யப் பயந்து, மூன்று நாள் வரையிலும் திண்ணைகளிலும், மாடங்களிலும் ஏற்றினர்.இதனால் ஒரு தீங்கும் இல்லையென அறிந்த பிறகு வீட்டிற்குள் ஏற்றிவைத்தனர்.
அந்தத் தீபம் இருளை விளக்கும் ஒளியாக விளங்கிய படியால் (கார்த்துலதீப) எனும் பெயரை அளித்து, புத்தமார்க்கத்தினர் கண்டுபிடித்த கார்த்திகைமாத பவுர்ணமியில் தேசம் எங்கும் தீபம் ஏற்றி,தியானம் செய்தும்,ஈகையில் ஈடுபட்டும் மகிழ்ந்தனர்.
புதமதத்தார் செய்த இந்த நற்செயல்களை, வேஷ பிராமணர்கள் வந்தபொழுது,மக்களிடம் பொய் புராணங்களை சொல்லி ஏமாற்றி,பொய் மதங்களைப் பரப்பினார்கள்.புதமதத்தார் கண்டுபிடிக்காத தானியங்களை விட வேறு தானியங்கள் கிடையாது.
ஆதாரம்..(அயோத்திதாசப் பண்டிதர் சிந்தனைகள்.)
இதில் சொல்லப்படும் மடாலபுரம் தான் இப்போது திருவண்ணாமலை அருகிலுள்ள மடப்புரம் என்ற ஊர் என்பது ஆய்வாளர்கள் கருத்து.
அண்ணாந்து பார்க்கும் உயரத்தில் உள்ள மலையில் ஆமணக்கு விதையை எரித்து சோதனை செய்ததால் அண்ணாந்து மலை என்று அழைக்கப்பட்டு அண்ணாமலை என்றானது. நம்மில் மூத்தவரை அண்ணன் என்பதன் தொடர்ச்சி தான்.
மன்னர் காலங்களில் நெருப்பை பாதுகாத்து வைத்திருக்க தனிக்கிராமங்கள் இருந்தது வரலாறு. பல வீடுகளில் அடுப்பெரிக்க பக்கத்து வீட்டில் கங்கு வாங்கி வருவது சில காலம் முன்பு வரை கிராமங்களில் இருந்த நடைமுறைகளில் ஒன்று.
தனியுடமையாக இருந்த நெருப்பை, பொதுவுடமையாக அனைவரும் பயன்படுத்தும் வகையில் மாற்றப்பட்டதே கார்த்திகை தீபம் ஏற்றும் வரலாறு.
அது கடவுள் வழிபாடு சார்ந்த செயலாக பக்தி இயக்க காலத்தில் மாற்றப்பட்டது.